Thursday, December 30, 2010

மனித இனத்தை சீரழித்து கொண்டிருக்கும் மனநோய்கள்

என்ன இப்படியும் ஒரு தலைப்பா என்று யோசிக்கிறீர்களா? அப்படியொன்றும் புதிது இல்லை நீங்கள் ஒவரா யோசிக்க வேண்டாம். அப்படி வேற ஒன்றுமில்லை.நான் இந்த பதிவில மனநோயாளிகள் பற்றி சில கருத்துகனை என் வலைப்பதிவு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.நான் ஒவ்வொரு பதிவும் பிரசுரித்த பின்னர் மனநோயாளிகள் பற்றி பதிவு ஒன்று எழுத வேண்டும் எழுத வேண்டும் என்று என் மனம் ஒரு விம்பத்தை உருவாக்கியது.எது எப்படியோ இப்ப தான் நேரம் வந்துள்ளது போல.இதனால்இந்த பதிவில் இவர்கள் பற்றிய பதிவை பிரசுரிக்கிறேன் நண்பர்களே.நம்ம இடத்தில் இப்பொழுது கடும் அடை மழை அது வேற நம்மை மிகவும் கஸ்டப்படுத்துகின்றது சரி சரி உங்களுடைய மையின்ட்வொய்ஸ் கேட்கிறது.நான் விரைவாக கதையை ஆரம்பிக்கிறேங்க. அதுவும் முதலில் நம்ம ஏரியாவில் இருக்கும் ஒரு மனநோயாளி பற்றிய கதையை சொல்லுகிறேன்.


நாம் இந்த மனநோயாளிகள் பற்றி சினிமாவில் சேது, ஆளவந்தான், காதல், நந்தாலாலா போன்ற படங்களை வைத்து மனநோயாளிகளின் தன்மையை அறியலாம். ஆனால் அது சினிமா நிஜம் ஒன்று இருக்கிறது அல்லவா! இப்ப நம் நிஜத்தை பார்ப்போம் சார். நீங்களும் மனநோயாளிகளை பார்த்தும் அவர்களை பற்றி அறிந்தும் இருப்பீங்க .அதுபோல நான் பார்த்தையும் அறிந்ததையும் சொல்கிறேன்.


நான் வசிக்கும் இடம் இயற்கைகள் நிறைந்த இடமாகும்.அந்த வகையில் நான் பிறந்தது முதல் புத்தி தெரிந்த நாள் முதல் ஒரு நபர் பெரிய தாடியும் அதிகம் முடி வளர்ந்த நிலையில் என் வீட்டுமுற்றத்திற்கு அடிக்கடி வருவார். அத்தோடு நான் மைதானத்திற்கு விளையாட போகும் போதும் இவரை நம்ம ஏரியாவில் திரிவதை நான் அவதானித்தேன்.அப்போது நான் சிறிவன் ஆகையால் அவர் யார்? ஏன் இப்படி திரிகிறார் என்று எனக்குள் நானே யோசித்த போது ஏன் இந்த ஐயம் நம் அம்மாவிடம் கேட்டால் தெரிந்துவிடும் என்று அம்மாவிடம் அவரைப் பற்றி கேட்டேன். அவ்வளவுதான் அம்மா உடனே அவர் மூளை சரியில்லாதவறேடா என்றார் நானும் விட்டுவைக்கவில்லை ஏன் அம்மா அவருக்கு என்ன நடந்தது? என்று கேள்விகளை அம்புகளாக தொடுத்தேன். அம்மாவோ அவரின் பிளாஸ்பேக்கை எடுத்துவிட்டார். அவரடா பணக்காரப்போடியார்(போடியார்-நம்ம ஏரியாவில் நிறைய வயல் வைத்திருப்பார்களை பேடியார் என்று சொல்லுவார்கள்) வீட்டில் வளர்ப்பு மகனாக வளர்ந்தவர் அத்தோடு போடியார் அவரை நன்றாக வளர்த்தவர் மட்டுமல்லாது போடியாருக்கு பிள்ளைகளும் உள்ளனர் என்றும் கூறிய அம்மா அவரையும் போடியார் தன் பிள்ளைகளைப் போல் வளர்தார் என்றார்.பின்னர் ஒரு நாள் திடீரென போடியாரின் மகனின் ரெக்டரை(உழவு இயந்திரத்தை) இவர் விளையாட்டாக ஒடும் போது ரெக்டர் திடீர் என்று மரத்தில் மோத ஆத்திரமடைந்த போடியாரின் மகன் அவரை உலக்கையால் தலையில் அடித்தாரம். இது சங்கதியடா இதன் பின்னரே அவருக்கு இப்படி ஆயிட்டு என்றார் அம்மா உருக்கத்துடன்.
இதை கேட்ட பிறகு தான் மனித வாழ்கையில் இப்படியொல்லாம் நடக்குமா? என்று சிந்தித்தேன். என்னவோ என் மனதை இந்த விடயம் மிகவும் ஆழமாக பாதித்தது.அத்தோடு இந்த செயலை போடியாரின் மகனின் பிள்ளை செய்திருந்தால் போடியாரின் மகன் இந்த கொடிய தண்டனையை தன்னுடைய பிள்ளைக்கு கொடுத்திரிப்பாரா? என்னவோ இது அவர் பிள்ளையல்லவா! என்று என்னை நானே கேள்வியை கேட்டு என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன்.
மீண்டும் அம்மா சொல்கையில் இவரை ஒருவாறு ஆஸ்பத்திரியில்(வைத்தியசாலையில்) சேர்த்த பின்னர் இவருக்கு சுகமாகியதாம் .பின்னர் அதிக நாட்களுக்கு இது நீடிக்கவில்லையாம் பின்மீண்டும் இதே நிலை ஆரம்பித்துவிட்டது என்றார் அம்மா. அதன் பின் சிறிது காலத்தின் பின்னர்; போடியாரும் செத்துவிட்டராம் அதன்பிறகு போடியாரின் பிள்ளைகளும் இவரை கவனிப்பதில்லையாம். இவர் இப்ப நம்ம ஏரியாவில் சில வீடுகளுக்கு தான் செல்கிறார். அத்தோடு இவர் நல்ல மனநிலையில் இருக்கும் போது சில வீடுகளுக்கு சென்று சில வேலைகளை செய்து கொடுப்பார். அதுமட்டுமல்ல அவருக்கு இவர்கள் சிறிய காசு கொடுப்பதாகவும் கேள்வியுற்றேன். இன்னும் சில பேர் காசு கொடுப்பதே இல்லையாம்.அத்தோடு சில நேரங்களில் இவர் பசியால் இருக்கும் போது அம்மாவிடம் சோறு கேட்பார்.அம்மாவும் இவரின் நிலையை அறிந்து உணவளிப்பார்.இவர் பூரனை நாட்களில் சற்று வித்தியாசமான மனோநிலையில் தொடர்ச்சியான சிரிப்புடனும் மனிதர்களை கும்பிட்டவாறும் இங்கும் அங்கும் அலைந்து திரிவார் அதுமட்டுமல்லாது மழை காலங்களிலும் ஈரமான ஆடைகளுடன் திரிவார் ஆனால் நான் அறிய நம்ம ஏரியாவில யாருக்கும் இவர் தீங்கோ சேட்டைகளோ செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இவரை இப்ப குணப்படுத்தலாம் என்று எனக்கு தெரியவில்லை.ஆனால் இவரை ஆரம்பத்திலேயே குணப்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகின்றது. அத்தோடு அவர் போடியாரோடு இருக்கும் போது சில சொத்துக்களை போடியார் இவருக்கு கொடுப்பதாகவும் சொல்லியிருந்தாகவும்.பின்னர் பாவிமனிசன் சொத்துக்கனை எழுதமாலே செத்துவிட்டராம். அதன் பிறகு போடியாரின் பிள்ளைகளும் இந்த சொத்துக்களை எடுத்துக்கொண்டார்களாங்க. எது எப்படியோ கடவுள் இவரை மேலும் தண்டிக்கவில்லை.இவருக்கு என்று ஒரு அக்கா எமது அயல் ஊரில் இருக்கிறார்.இவர் பகலில் நம்ம ஏரியாவலும் இரவில் எப்படியோ அக்காவின் வீட்டுக்கு சென்றுவிடுவார்.இவர் முன்பு(பிரச்சனையான காலப்பகுதியில்) இரவில் திரிந்து பாதுகாப்பு படையினரிடமும் பிடிபட்டும் உள்ளார். இவரின் அக்காவும் பெரிய வசதியான நிலையில் இல்லை. அத்தோடு இவரின் அக்காவுக்கு புற்று நோய் என்றும் நான் கேள்விப்பட்டேன். புற்று நோய் என்றால் சொல்ல வேண்டுமா! ஏன் இந்த கடவுள் இவரை இப்படி சோதிக்கிறரோ என்று தெரியல.எது எப்படி இவரும் இவரின் அக்காவும் விரைவில் சுகமாக வேண்டுமென்று இறைவனை உருக்கமாக பிராத்திக்கிறேன்.சரி சரி மீண்டும் மையின்ட்வொய்ஸ் கேட்கிறது.இந்த கதையை இத்தோடு முடிக்கிறேன் சார்.

இது நம்ம பஞ்ச் பகுதி.....

சார் இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெரிசு. அதுவும் இந்த உலகில் நடக்கும் விடயங்களும் செயல்களும் பெரியதோடு மட்டுமல்லாது நம் இடங்களிலும் ஒவ்வொரு ஊர்,நாடுகளிலும் இந்த மனநோயாளிகளுக்கு குறைவே இல்லை.இவரின் கதை போல் பல்வேறு கதைகளில் பல மனநோயாளிகள் உலகில் உள்ளனார்.ஆனால் சில பேரே சரியான முறையில் சிகிச்சை பெறுகின்றனார். என்னை பொறுத்த வரையில் பல பேர் தகுந்த முறையில் சிகிச்சை இல்லாமல் வீதியோரங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் தமது அன்றாட வாழ்கையில் கொடிய கூரான கம்பியின் மீதும் சில விச பூச்சிகளின்(சில மனிதர்கள்) மத்தியிலும் வாழ்கின்றனர் என்றால் அது மிகையல்ல. அத்தோடு இவர்களின் கதையை மற்றும் வலியை வார்த்தையாக சொல்லியோ அல்லது இப்பதிவு மூலமாக எழுதியோ உணரமுடியாது என்றே சொல்லாம்.

( குறிப்பு-இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல)

மேலும் இந்த கதையைப் பற்றி உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு வோட்டும்(Voteம்) போடுங்கள் நண்பர்களே.

நன்றி!