Friday, June 10, 2011

11 ஆண்டுகளாக பிரிந்த நட்பு மீண்டும் மலர்ந்தது....

நட்பு என்றால் நான் உங்களுக்கு ஒன்றும் புதிதாக சொல்லவே தேவை இல்லை. என்னுடைய நட்பும் கர்ணன் நட்பு மாதிரி பெரிதானதல்ல.
அதுவும் பாடசாலையில் உருவாகும் நட்பு உலகில் எவராலும் மறக்கமுடியாது. அந்த வகையில் எனக்கும் பல நட்புகள் பாடசாலையில் மலர்ந்தது. ஆனாலும் 5ம் ஆண்டில் படிக்கும் போது ஒரு நண்பன் எனது நட்பு அகராதியில் இணைந்தான். இப்படியான நட்பு மேலும் வளர்ந்து கொண்டு சென்றது. இந்த நட்பை பார்த்த எனது சக மாணவர்கள் எங்கள் மீது பொறாமை கொள்ள ஆரம்பித்தார்கள்.

இப்படியான நிலையில் நட்பின் இலக்கணங்களாக விளங்கிய நாங்கள் ஓவ்வொரு வகுப்பு உயரும் போதும் இருவரும் பிரிவதில்லை இருவரும் அருகில் ஒன்றாக அமர்ந்துதான் படித்தோம்.இப்படி இருக்கையில் பொறாமையின் உச்சத்திற்கு போன எனது சக மாணவர்கள் எங்கள் இருவரையும் பிரிப்பதற்கு சதி வலைகளை பின்ன ஆரம்பித்தார்கள்.இதன் பின்னர் பின்னிய வலையில் எங்களை பிரித்தார்கள் இதை அறியாத நாங்களும் பிரிந்தோம்.

இதில் முக்கிய விடயம் என்னவென்றால் நான் தான் முதலில் அவனிடம் கதைப்பதை தவிர்த்தேன்.இதன் பின்னர் அவனும் என்னிடம் கதைப்பதை தவித்துக்கொண்டான். இப்படியாக நாங்கள் இந்தியா பாக்கிஸ்தான் நிலைமைக்கு சென்றோம்.இதை எல்லாம் பார்த்த எங்களுடைய சக மாணவர்கள் பிரித்து விட்டோம் என்று மகிழ்ச்சி அடைந்தாலும் இன்னொரு பக்கம் எங்களுடைய பிரிவு வேதனையை கொடுத்தது. இப்படியாக காலமும் நகர்ந்தது எங்களுடைய சக மாணவர்களும் இருவரையும் சேர்பதற்கு முயற்சி எடுக்கவில்லை. நானும் இமேஜ்(Image) காரணமாக அவனோடு கதைப்பதற்கு முயலவில்லை.இப்படியான நிலையில் எங்களை பிரித்த சக மாணவர்களில் ஒருவன் நடந்தவற்றை என்னிடம் கூறிய போதும் நான் அவனோடு கதைப்பதற்கு ஆயத்தம் இல்லாதவானாகாக காணப்பட்டேன்;. மேலும் சில ஆண்டுகளுக்கு பின் சாதாரண தர (O/L) பரீட்சை தோற்றிய பின்னர் நான் கணித பிரிவிலும் அவன் வர்த்தக பிரிவிலும் கல்வியை பயின்று பாடசாலையை விட்டு வெளியேறினோம். இதனால் மேலும் நட்பு பாலம் உடைந்த ஆறு போல் இருந்தது இதை திருத்துவதற்கு எனது சக மாணவர்களும் முன்வரவில்லை.இப்படியாக கால சக்கரமும் நகர்ந்தது கொண்ட சென்றது.

கிளைமாக்ஸ்(Climax)

இறுதியாக சில நாட்களுக்கு முன்பு எனது பாடசாலை வாழ்கையை நினைத்த போது இவனுடைய நட்பும் பிரிவும் எனது மெமரியில் லோட்(Load) ஆனது இதன் பின்னர் நான் சிந்தித்தேன் பிரிந்த நட்பை தொடவேண்டும் என்று ஆகையால் இவனை எங்காவது பார்த்தால் நான் முதலில் கதைக்க வேண்டும் நினைத்தேன் .இப்படியாக சில நாட்களுக்கு முன் என்னுடைய உறவினார் ஒருவரை அவன் சந்தித்திருக்கிறான். அவரும் என்னுடைய பாடசாலையில் படித்தவர் இதனால் அவர் என்னுடைய உறவினர் என்று அவனுக்கு தெரியும் ஆகையால் அவன் அவரிடம் எங்களுடைய நட்பு பிரிந்ததை பற்றி கூறியுள்ளான். இதை கேட்ட என்னுடைய உறவினார் உடனே தொலைபேசியில் தொடர்கொண்டு இப்படி நடந்ததா என கேட்டார் நானோ ஆம் என்று கூறியது மட்டுமல்லாது அவனை எங்கே சந்தித்தீர்கள் என்று வினவ அவனோ அருகில் இருக்கிறான் என்றார். நானே உடனே அவனிடம் தொலைபேசி கொடுங்கள் என்று கூற அவரோ கொடுக்க நாங்கள் இருவரும் மனம் விட்டு 5 நிமிடங்கள் வரை கதைத்தோம்.மேலும் அவனே என்னிடம் உன்னுடைய தொலைபேசி இலக்கத்தை உனது உறவினாரிடம் வாங்கி பின்னர் உன்னை தொடர் கொள்கிறேன்டா என்று கூறி விடைபெற்றான்.


இப்ப ஒரு உண்மையை சொல்கிறேன்....

"பிரிவுகள் வேண்டாம் பிரிவுகள் வேண்டாம் பிரிவுகள் வேண்டாம் அதுவும் நட்பின் பிரிவு வேண்டாம் சாமியோ" இந்த உலகில்....(நண்பேன்டா!)

நன்றி!(பல்சுவைதிவுகள்)

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...