Sunday, May 1, 2011

புதுயுகத் தமிழர் கவிதையின் தொடர்ச்சி....


ஈழத் தமிழர் குரல் எங்கெங்கோ ஒலிக்கின்றது....
இவர்களல்லோ தமிழர் என்று எண்திசையும் பறைகின்றது....
வாழத் தெரிந்தவர்கள் தாம் வாழந்த இடம் வேண்டி....
சாலத்தின் முன் கண்ட கலிங்கத்துப் பரணியும்
இப் போர்ண்டு கவிதனில் நலிந்து போகுமோ?....
ஞாலத்தின் முன் வந்து நயம் பெறும் - நம்
தமிழர் பலம் வளம் பெறும் புதுயுகத்தில்!
சர்வதேச வலைப்பின்னலின் தமிழ்ப் பணி....
தரம் கொண்ட தமிழினி 'மஞ்சரி தலை' இலண்டனில் புத்ததாளி
கலைமண உதையன் பத்திரிகை கனடாவில் நிறைவொளி....
கவித்துவ நிறைவோடு கலாச்சார தமிழ் பணி
இலக்கிய யுகத்தில் இத்தனை வளர்வுகள்....
இதற்கு ஏற்றாற்போல் எத்தனை வரைவுகள்
அழகிய தமிழில் சுவிஸில் தமிழ்ப்பணி....
அடக்கமாய் சதிஸின் ஆக்கங்கள் புதுயுகத்தில்....

புதுயுகத்தில் தமிழர் இவர்கள் பொலிவுடன் வளம் பெறுவர்!
நவயுக வளர்விற்கேற்ப நாமும் உயரல் வேண்டும்!
கலையுகப் பணி செய்த கவித்தமிழ் வளர வேண்டும!
கருத்துடன் படத்துறையில் கைங்காரியம் செய்ய வேண்டும!
எத்துறை எதிலும் எம் தமிழர் உயர வேண்டும்!
ஏற்றம் கண்டு தமிழர் இனம் தனிக்கொற்றம் கொள்ளல் வேண்டும்!
பற்துறைப் பாவலர்கள் என்று எமைப் பலரும் பாராட்ட வேண்டும்!
பாரினிலே பழமை இனம் புதுயுகத்தில் பளிச்சிட வேண்டும்!

புதுயுக தமிழன இவன் புறப்பட்டு விட்டான்....
போன இடம் தன்னில் தலைப்பட்டு விட்டான்....
நவயுகத் தகுதியை நன்றாய் அடைந்து அடைந்து விட்டான்....
நல்லார் இவர்கள் எனறு நாவுடையார் போற்றல் பெற்றான்....
சொல்லால் செயலில் சோர்வை ஒதுக்கி வைத்தான்....
சுகந்திரத்தை வேண்டி சொந்தத்தில் நாடு கொள்வான்!
இந் நாள் எவையும் இனி இனிதே எனதேன்பேன்
பொன்னாயு ஒளி பெற்று புதுயுகத்தில் உயர் பெறுவான்!
வாயுடையார்க்கெல்லாம் பொய்த மொழி தமிழ்
சேயுடையார் வீட்டில் செழித்து விட்டான்....
நாவுடை நாவவல் கண்ணதாசன் நல் ஆய்வுடன்
ஆக்கம் சொன்னான்....
கேட்டீர் நம் வாய்மை
ஆற்றிடுவீர் நல் சேவை
அது ஆற்றுப் படுத்தும் புது யுகத்தில் தமிழரை....


நன்றி!

படைப்பு : எனது தந்தை

4 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்.. சூப்பர்...
தொடருங்கள்..

விஜயகுமார் ஐங்கரன் said...

# கவிதை வீதி # சௌந்தர் @ உங்களின் ஆதரவுக்கு நன்றி.

movithan said...

வாழ்த்துக்கள் தல.
கலக்கிறீங்க போங்க.

விஜயகுமார் ஐங்கரன் said...

@malgudiஹி ஹி... மிக்க நன்றி!

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...