Wednesday, April 27, 2011

பகாவன் ஸ்ரீ சத்தி சாயி பாபா மஹா சமாதி அடைந்தமைக்கு இரங்கல் பா!


வானுறைந்த தெய்வமொன்று வையத்துள் வந்தது....
வாழ்வாங்கு வாழ்ந்து காட்டி வானுறையச் சென்றதோ....
தானிளைத்து தன்ளாடியும் தார்மீகம் செய்தது....
தயவுடன் தாட்சண்ணியத்தை தாராளமாகத் தந்தது
யார் மதமும் ஓர் மதமே யாமெல்லாம் ஓரினமே....
பாரறிய உலகிற்கு பன்மைத்துவ வாதம் தந்த
யாமறிந்த புனிதர் இவர் யாவர்க்கும் பொது உடையார்....
போய் அறிந்த சேதி கேட்டு புவனமே கலங்குது இன்று!


புனிதர் எனப் போற்றப்பட்டார் போய்விட்டார்.....
போக்கிஸமாய் இருந்தவர் இன்று சென்று விட்டார்
மனிதர் என மதிக்கப்பட்டார் மறைந்து விட்டார்....
மகானாக வாழ்ந்தவர் மாற்றம் கொண்டார்
இனிதே என இயம்பியவர் எம உலகம் கண்டார்....
இயன்றவரை இறை உள்ளம் காட்டி இறைபதம் சேர்ந்தார்
நமதே என்று சொன்னவர் நமை விட்டகன்றார்
நலமிழந்து உலகம் இன்று நாதியற்றுத் தவிக்கிறது....


பிறப்பு : - 23-11-1926
மாகசமாதி : - 24-04-2011
பிறந்த இடம்: - புட்டபர்த்தி
இறந்த இடம்: - புட்டபர்த்தி
இயற்பெயர் : - சத்தியநாராயணராஜீ
தத்துவம் : - அத்வைதம்
குரு : - எவருமில்லை


அன்பாலும் தன்னிகரமற்ற சேவையாலும் உலகம் முழுவதையும் தன்வசப்படுத்திய பகாவன் ஸ்ரீ சத்தி சாயி பாபா மஹா சமாதி அடைந்தமைக்கு அவருடையபக்தர்கள் மற்றும் சீடர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை பல்சுவைப்பதிவு ஊடாக தெரிவித்துக்கொள்கிறேன்.

பகாவன் ஸ்ரீ சத்தி சாயி பாபாவின் சில பொன் மொழிகள்....

  • அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள்.உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.
  • மனதை தூய்மையாக முழுமையாக வைத்துக்கொள். வெற்றிபெறுவாய்
  • சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.தயாராக இருக்கும் மொட்டுகளதான்; மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
  • உண்மை, தர்மம், கருணை ,மன்னிக்கும் மனப்பான்மை , இவற்றை பெற வேண்டுமானால் ஓவ்வொரு தனி மனிதனும் தனக்குள் அவற்றை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.
பகாவன் ஸ்ரீ சத்தி சாயி பாபாவின் ஆன்மீகத் தத்துவம்....
  • கடவுள் ஒருவர்தான்.அவர் தான் அனைத்து மதங்களின் காரணகர்த்தா.
  • என்னிடம் வர மதம் தேவையில்லை.
  • உங்களின் மதங்களிலேயே இருந்தபடி என்னைப் பின்பற்றுங்கள் மற்றும் மக்களுக்கு தொண்டு செய்யுங்கள்.
  • உங்கள் சேவைதான்,மரணத்துக்குப் பிறகும் உங்களை உன்னத இடத்தில் வைக்கும் என்பதை நம்புங்கள்.

நான் இறந்தாலும்,மறுபிறப்பு எடுப்பேன் என்பது பகாவன் ஸ்ரீ சத்தி சாயி பாபாவின் முந்தைய அறிவிப்பு ஆகும். இதனால் அவருடைய பக்தர்கள் மற்றும் சீடர்களின் ஒரே எதிர்பார்ப்பாய் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது என்றால் அது மிகையான விடயமல்ல.

நன்றி!
Saturday, April 23, 2011

புதுயுகத் தமிழர்

புலம்பெயர்ந்த தமிழர் எங்கும் பொங்குதமிழ் கீதம்....
புத்தெழுச்சி பெற்று அவர்கள் புதுத்தென்பில் கோஸம்....
மறவர் படை தமிழரென வஞ்சினமாய் நாதம்....
வரப்போகும் தமிழ் நிலத்தை வரவேற்று நேசம்....
அறிவுடனாய் ஆக்கம் செய்து அகிலமெங்கும் ஈட்டம்....
ஆகமட்டும் சேர்ந்த இடத்தில் அன்பதனாய் தோட்டம்....
அவர்கள் அடுத்தடுத்து முயற்சி தமிழ் வளர்க்கும் பாசம்....
அத்தனையும் அவர்கள் தம் புதுயுகப் பிரவேசம்!

பண்பாட்டை பறைசாற்றி தமிழர் பக்குவத்தை வெளிக்காட்டி....
பாரம்பரிய தமிழர் இனம் பரிணாமம் கண்டு விட்டது
பலவளர்ச்சி கண்டு பல்துறையில் நிறைவு கண்டு....
தொழிற்துறையில் தமிழர் இனம் துறை கண்டது
துவளாமல் பல வழியில் வெற்றி கொண்டது....
நிகழ்கால வரவை நோக்கி நிமிர்ந்து நிற்கும்
நீடித்து நிலைத்து நிற்க உழைத்து நிற்குது....
வருங்கால யுகத்தை நோக்கி வாஞ்சை கொள்ளுது
வரும் புதுக்கால யுகத்தை நோக்கி வரிந்து நிற்கும்!

ஜதீகப்புராணங்கள் அதிகளவில் ஆக்கிய இனம்....
வெளகித யதார்த்தத்தில் நலம் பெற வளர்ந்த இனம்
வைதீக கலாச்சாரத்தை வரும்பு மீறிக் கொள்ளாமல்....
பௌதீக இரசாயனத்தில் பாரிய வளர்ப்பு கண்டு
பலப்பல ஆக்கங்களை பாருக்குத் தருகின்றனர்....
கணனியில் மென் பொருளை கற்றதில் பெரும்பாலோர்
அறிவுடை தமிழர் என்றால் வியப்பாகுமா?
அத்தனையும் அவர்கள் தம் யுகப்பிரவேசம்.

பிரான்ஸ் நகரசபையில் தமிழர்!
பெரிய பிரித்தானியாவில் நாடாளுமன்ற அபேட்சகர்!
அமெரிக்காவில் அரசசபை அங்கத்துவம்!
அவுஸ்திரேயாவில் அதற்கான பிரவேசம்!
கனடாவில் ராஜரிக அந்தஸ்து! கடல் கடந்து
மறு தேசங்களிலும் கற்றவருள் தமிழர்!
டொறண்டோவில் தமிழர் கூட்டம்!
தொலை தூரம் எனினும் துவளாத தமிழ் நேசம்!
அகலாத தமிழ் பாசம் அத்தனையும் அதிவேக
யுகத்திற்கான அத்திவாரம்!

புதுயுகத் பாதையில் புதுபொலிவு தமிழர் அணி....
பொக்கிஷ தமிழ் நூல்கள் புது வடிவில் இணையத்தில்
புதிய விசைப் பலகை தமிழில் கணனியில்....
புத்தொளியில் தமிழுக்கு தனியான தமிழ் இணையம்
வதிய இடம் வேண்டி வாழச்சென்ற இடம் தன்னில்....
நிறைய ஆக்கம் செய்து நிலைத்து விட்டான் எம் தமிழர்
வரையே இல்லாமல் வளர்ந்திடுவார் இவ் இனத்தார்
வழிசமைத்து புதுயுகத்தை வாழ்வமைப்பார் இத் தமிழர்!


தொடரும்....