Saturday, April 23, 2011

புதுயுகத் தமிழர்

புலம்பெயர்ந்த தமிழர் எங்கும் பொங்குதமிழ் கீதம்....
புத்தெழுச்சி பெற்று அவர்கள் புதுத்தென்பில் கோஸம்....
மறவர் படை தமிழரென வஞ்சினமாய் நாதம்....
வரப்போகும் தமிழ் நிலத்தை வரவேற்று நேசம்....
அறிவுடனாய் ஆக்கம் செய்து அகிலமெங்கும் ஈட்டம்....
ஆகமட்டும் சேர்ந்த இடத்தில் அன்பதனாய் தோட்டம்....
அவர்கள் அடுத்தடுத்து முயற்சி தமிழ் வளர்க்கும் பாசம்....
அத்தனையும் அவர்கள் தம் புதுயுகப் பிரவேசம்!

பண்பாட்டை பறைசாற்றி தமிழர் பக்குவத்தை வெளிக்காட்டி....
பாரம்பரிய தமிழர் இனம் பரிணாமம் கண்டு விட்டது
பலவளர்ச்சி கண்டு பல்துறையில் நிறைவு கண்டு....
தொழிற்துறையில் தமிழர் இனம் துறை கண்டது
துவளாமல் பல வழியில் வெற்றி கொண்டது....
நிகழ்கால வரவை நோக்கி நிமிர்ந்து நிற்கும்
நீடித்து நிலைத்து நிற்க உழைத்து நிற்குது....
வருங்கால யுகத்தை நோக்கி வாஞ்சை கொள்ளுது
வரும் புதுக்கால யுகத்தை நோக்கி வரிந்து நிற்கும்!

ஜதீகப்புராணங்கள் அதிகளவில் ஆக்கிய இனம்....
வெளகித யதார்த்தத்தில் நலம் பெற வளர்ந்த இனம்
வைதீக கலாச்சாரத்தை வரும்பு மீறிக் கொள்ளாமல்....
பௌதீக இரசாயனத்தில் பாரிய வளர்ப்பு கண்டு
பலப்பல ஆக்கங்களை பாருக்குத் தருகின்றனர்....
கணனியில் மென் பொருளை கற்றதில் பெரும்பாலோர்
அறிவுடை தமிழர் என்றால் வியப்பாகுமா?
அத்தனையும் அவர்கள் தம் யுகப்பிரவேசம்.

பிரான்ஸ் நகரசபையில் தமிழர்!
பெரிய பிரித்தானியாவில் நாடாளுமன்ற அபேட்சகர்!
அமெரிக்காவில் அரசசபை அங்கத்துவம்!
அவுஸ்திரேயாவில் அதற்கான பிரவேசம்!
கனடாவில் ராஜரிக அந்தஸ்து! கடல் கடந்து
மறு தேசங்களிலும் கற்றவருள் தமிழர்!
டொறண்டோவில் தமிழர் கூட்டம்!
தொலை தூரம் எனினும் துவளாத தமிழ் நேசம்!
அகலாத தமிழ் பாசம் அத்தனையும் அதிவேக
யுகத்திற்கான அத்திவாரம்!

புதுயுகத் பாதையில் புதுபொலிவு தமிழர் அணி....
பொக்கிஷ தமிழ் நூல்கள் புது வடிவில் இணையத்தில்
புதிய விசைப் பலகை தமிழில் கணனியில்....
புத்தொளியில் தமிழுக்கு தனியான தமிழ் இணையம்
வதிய இடம் வேண்டி வாழச்சென்ற இடம் தன்னில்....
நிறைய ஆக்கம் செய்து நிலைத்து விட்டான் எம் தமிழர்
வரையே இல்லாமல் வளர்ந்திடுவார் இவ் இனத்தார்
வழிசமைத்து புதுயுகத்தை வாழ்வமைப்பார் இத் தமிழர்!


தொடரும்....


3 comments:

Unknown said...

சிறந்த படைப்புகளை கண்டுகொள்ளாமல் விடுபவனும் தமிழன்,
18+ ஐத் தேடிப்படிப்பவனும் தமிழன்.
--அதற்க்கு இந்தக் கவிதையைப் படித்தவர்களின் எண்ணிக்கை ஒரு உதாரணம்.---

இவ்வாறான படைப்புகள் கண்டு கொள்ளப்படுவதில்லை என்பது வருத்தமே.

விஜயகுமார் ஐங்கரன் said...

@malgudiநன்றி நண்பா! உங்களின் ஆரோக்கியமானகருத்துக்கு....

குதூகலக்குருவி said...
This comment has been removed by the author.

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...