Thursday, December 29, 2011

உலகின் சாராம்சம் மாயையா?


ஏழைக்கு இந்த கொடிய வறுமை ஏன்

பூ வைத்தும் ஜெபம் செய்தும் வழிபடும் மனிதனுக்கு துன்பம் வருவதுதான்ஏன்


பிறக்கும் போதும் இறக்கும் போதும் மனிதன் அழுவதுதான் ஏன்

செங்கல்லை செய்பவனுக்குசெங்கல்லிலான வீடு இல்லை ஏன்

மரக்கட்டிகளை கொண்டு கட்டில் செய்யும் காப்பேன்டருக்கு(தச்சனுக்கு)
சொந்தமான கட்டில் இல்லை ஏன்

மாளிகைகளை கட்டும் மேசனுக்கு இருக்க செங்கல்லிலான வீடு இல்லை ஏன் 


கடலில் செத்து பிழைக்கும் மீனவனுக்கு ஒழுங்காக சாப்பிட மீன் இல்லை ஏன்

வஸ்சில்(பேரூந்தில்) ஏறியவுடன் முன்னால் போ என்று சிம்போலிக்காக கூறும் கன்டொக்டருக்கு(நடத்துனருக்கு) வாழ்கையோ உயரவில்லையே ஏன்

கிரிக்கெட்டை அறிமுகம் செய்த இங்கிலாந்து அணிக்கும் பதினொரு வீரர்களும் சகலதுறை ஆட்டக்கரர்களை கொண்ட தென்னாபிரிக்காவும் உலக
கிண்ணத்தை இதுவரை கைப்பற்றாது ஏன்

இலஞ்சமே கூடாது என்ற மனிதன் கடவுளுக்கே நேர்த்திக்கடன் எனும் பெயரில் இலஞ்சம்  கொடுப்பது ஏன் 

ஒரே நேரத்தில் உலகில் இரவும்பகலும் ஏன்    


அமைதியை விரும்பும் மனிதனுக்கு கொலை  ஆயுதம்  வன்முறை ஏன்


அன்பு கொண்ட மனிதனுக்கு பொறாமையும் பழிவாங்கலும் ஏன்
வீரத்தழிழ்ழனாம்  நம் தழிழனுக்கு உரிமைகள் விடுதலை கிடைக்கவில்லையே ஏன்.....
 
இன்னும் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.....

இந்த வினாக்களுக்கு விடை தேடும் போது இந்த உலகமே பொய் என தோன்றுகின்றது அல்லவா?.வாசர்களே உங்களின் கருத்துக்களையும்(பஞ்ச்) தாராளமாக கூறலாம்.நன்றி!(பல்சுவைப்பதிவுடன்)

Sunday, December 18, 2011

வெடி மாஸ்டர் வட் நோ கன்-1(But No Gun)


நீங்கள்  tea மாஸ்டர் gem ஜிம் மாஸ்டர்  pt மாஸ்டர் என்றால்லாம் அறிந்திருப்பீர்கள். ஆனால் இது  என்ன வெடி மாஸ்டர் அதுவும் நோ கன்  இப்படியும் தலைப்பு என்ற யோசிக்கின்றீர்கள். ஆம் வாசர்களே நான் நீண்ட நாளைக்கு பிறகு ஒரு பதிவை எழுதலாம் என்று நினைத்த போது என் மனதில் இந்த வெடி மாஸ்டர் தான் என் நினைவில் வந்ததர்.அதுவும் ஒரு பதிவை எழுதுவதற்கே இப்ப நேரம் கூட கிடைப்பது அரிதாக இருக்கிறது. ஏன் என்றால் இப்பொழுது நேரம் எல்லாம் வேலையிலே செல்கிறது. சரி இப்ப வெடியை பற்றி நாம் பார்ப்போம். அதுவும் இந்த கதை நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் நடந்த கதையாகும்;(Flashback).

வெடி முத்து

இப்படியாக பள்ளியில் பாடங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் ஐந்தாம் பாடம் முடிந்து ஆறாம் பாடம் தொடங்க மணி அடித்தது. இந்த வேளையில் மாணவர்களின் முகத்தில் ஒரே சிரிப்பு. அது வேற ஒன்றுமில்லை வெடியின் வருகையை எண்ணிப் பார்த்து. இப்படியாக வெடி பாடத்துக்கு நடந்து வருவது எங்களுக்கு தெரிந்தது. (அதுவும் வெடி வருவது சினிமாவில் ஹீரோக்கள் வரும் போது வேக்ரவுன்ட் மியுசிக்குடன்;;,(Background Music) வருவது போல இவரும் அப்படி வருவதை  இப்பொழுதும் நினைக்கையில் சிரிப்புதான் வருகிறது.சில வகுப்பு மாணவர்கள் இவரின் வெடியை அறிந்து இவர் பாடங்களுக்கு வகுப்புக்கு செல்லும் போது மாணவர்கள் மறைந்து நின்று இவரை ''வெடி வெடி''என்று கத்துவதையும் இவர் திரும்பி யாருடா? இது என்று மிரட்டுவதையும் நான் கண்டிருக்கிறேன்.)

இப்படியான வெடி  வகுப்பில் வந்தார். அதுவும் இவர் எடுக்கும் பாடங்கள் சமூகக்கல்வியும் வரலாறும். நாங்கள் இவர் வரும் போது முதலில் எழுந்து நின்று வாழ்தினோம். அதுவும் சில மாணவர்கள் வாழ்த்தும் போது கூட good morning  குட் மொனிங் வெடி என்று மெல்லிய கூரலில் சொல்வார்கள். வகுப்புக்குள் வந்த பின் தனது வரலாறுப் பாடத்தை தொடங்கினார். இப்படியாக படிப்பித்துக் கொண்டிக்கும் வேளையில் திடிரென பாடத்தை நிறுத்தி விட்டு உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமாடா? என்று கேட்கும் போதே  எங்களுக்கு தெரிந்து விட்டது வெடியன் தனது வெடிகளை வீசப்போறான் என்று. டேய் நம்ம கல்லடி பாலமாடா கெஞ்ச நாளைக்கு முன்னாடி அது விழும் நிலையில் ஆடியதுடா! (இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி பிரதேசத்தில் அமைந்த மிகவும் பழைய மற்றும் பிரித்தானிய காலனித்துவ காலத்தில் அமைத்த உறுதியான பாலமாகும் மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் பெரிய பாலமாகவும் காணப்பட்டது.)

கல்லடிப்பாலம்

இப்படி பாலம் ஆடிக்கொணடிருந்த வேளையில் மக்கள் பீதியில் இருந்தனர் என்றும் அந்த வேளையில் நானும் என்ட அப்பாவும் கையில் ஒரு ஜக்குடன் பாலம் இருக்கிற ஆற்றில் இறங்கி பார்த்தால் பாலத்தின் கீழே இருக்கிற  நட்டுகள் எல்லாம் லுஸ் ஆகி இருந்தாடா. அதன் பின் உடனே நானும் அப்பாவும் கையில் இருந்த ஜக்கை கொண்டு பாலத்துக்கு கீழே ஜக்கை அடித்து உயர்த்தியடா லுஸ்யாக இருந்த நட்டுகளை எல்லாம் இறுக்கினோம்.  பின்னர் ஆற்றில் இருந்து வெளியில் வந்தால் மக்கள் கூட்டமே எங்களை  நோக்கி வெடிகளை கொழுத்தினார்களடா!(வெடியே உனக்கே வெடியா என்ன கொடுமை சார் இது), பூமாலை எல்லாம் போட்டும்  எங்களை வரவேற்றனர் என்றார். இதை எல்லாம் கேட்ட மாணவர்கள் சிரிப்பை அடக்க முடியமாலும் ஏதோ தங்களுக்குள்; இவறாடா பாலத்துக்கு ஜக் அடிப்பது என்ன வெடியடா என்று முணுமுணுத்துக்கொண்டிருந்தனர், (அதுவும் நான் அறிந்த வகையில் இந்த பாலத்தின் கீழ் பகுதியோ கொங்கிறீட்டினால் அமைக்கப்பட்ட பாலமாகும் இது  ஆடுவதற்கோ நட்டு லுஸ் ஆவதற்கோ வாய்பே இல்லை)


இப்படியாக வெடியின் வெடிகள் முடிய பாடம் முடிந்தாக விட்டதாக மணியும் அடித்தது.அதன்  பின் வெடியும் வகுப்பை விட்டு சென்றார் நாங்களும் இவர் செல்லும் போது கூட மெதுவாக thank you வெடி என்று வழியும் அனுப்பினோம். அதன் பின்னர் மாணவர்கள் இவரின் தொல்லை எண்ணி தாங்க முடியலடா சாமி என்றும் இவர் எப்பொழுது இவர் பரீட்சைக்கு பாடத்தை முடிப்பார் என்று சோகத்துடன் புழம்பியதையும் இப்பொழுதும் நினைக்கையில் சிரிப்பும் மறுபுறம் வெடியின் அகோர தாண்டவத்தை எண்ணி கோபமும் ஏற்படுகின்றது.

  

வெடியின் கோர வெடிகள் தொடரும்......Thursday, August 4, 2011

தூக்காணங் குருவி சொல்ல மறந்த கதை (அது ஒரு காலம் அழகியதொரு காலம்....)

என்னடா இது தூக்கானம் குருவி சொல்ல மறந்த கதையா? அப்படி என்ன தான் சொல்ல மறந்த கதை என்று தானே யோசிக்கிறீர்கள். அப்படி ஒன்றும் பெரியதான கதையல்ல. நீண்ட நாளாக பதிவு எழுதவில்லை என்று யோசிக்கும் போது நீண்ட நாளாக எழுதவேண்டும் என்று நினைத்த போது மனதில் கரை படிந்த நிலையில் கதை ஒன்று ஞாபகம் வந்தது. நண்பர்களே! அதுவும் தலைப்பிலே பாருங்கள் அது ஒரு காலம் அழகியதொரு காலம் இன்னும் கதைப்பற்றி விளங்கவில்லையா? இப்பயெல்லாம் நமது வாழ்கை ஆற்று நீர் போல நமது வாழ்கை ஓடுகிறது. இதில் மகிழ்ச்சியோ ரசிப்போ என்று பெரிதாக இல்லாவிடினும் ஏதோ பரவாயில்லை(Not Bad) என்று தான் சொல்ல முடிகிறது. அதுவும் எனக்கு அது ஒரு காலம் அழகியதொரு காலம் முதலில் ஞாபகம் வருவது நான் சின்ன வயதாக இருக்கும் போது வயலுக்கு செல்வது தான். மேலும் நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு சின்ன வயதாக இருக்கும் போது வயலுக்கு அப்பா கூட்டி செல்வார். அதுவும் நாங்கள் அப்பொழுதெல்லாம் வசதி வாய்ப்பு பெரிதாக இல்லை, அதனால் அப்பா என்னை சைக்கிளில் தான் கூட்டி செல்வார். அப்படி வயலுக்கு செல்லும் போது என்னை கூட்டி செல்வாரா,இல்லை? என்று மனதுக்குள் ஏங்குவேன்.அதுவும் அப்பாவிடவும் கேட்கவும் பயம் வேற. அப்படி அப்பா அழைத்தால் ஆகா என்ன சந்தோசம்.

இப்படி நான் சைக்கிளில் செல்லும் போது இயற்கை ரசித்தவாறு செல்வேன். அதுவும் அப்பா தானே சைக்கிள் ஒடுவது அதனால் எனக்கு வலி தெரியாது. அதிலும் என்னவென்றால் நாங்கள் வதியும் இடத்திலிருந்து வயலோ பல மைல் தூரம் அது வேற. இப்படி வயலுக்கு சென்ற பின் இறங்கினால் நமது கால் ஒன்று இல்லாது போல் இருக்கும் ஏன் என்றால் காலே விறைத்து போய் இருக்கும் அப்படி பல மைல் பிரயாணம். அதுவும் வயலில் உரம் எறியும், காலம் சூடு அடிப்பு(அறுவடைக் காலம்) என காலங்கள் வந்து போகும். உரம் எறியும் காலம் வந்தால் குளத்திலிருந்து அதிக நீர் வரும் காலம் ஆகையால் வயலில் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அத்தோடு வயலின் வரம்புகளில் பொன்னாங்கானி கீரை அதிகமாக வளர்ந்து காணப்படும். இப்படியாக இருக்கையில் நாங்கள் வயலுக்கு சென்றால் வயல் காவலன் அருகில் நீர் குட்டையில் சென்று விறால் மீன்களை பிடித்து குழம்பு வைத்தும் பொன்னாங்கானி கீரை சொதி வைப்பான். அடடா! அப்படி ஒரு சுவையான விருந்தாக இருக்கும். இப்படியாக சூடு அடிப்பு காலமும் வந்து விடும் இந்த காலத்தில் விவசாயிகளின் முகத்தில் ஒரு வித சந்தோசம் இருக்கும். ஏன் என்றால் அறுவடை வருகிறது அல்லவா! இந்த காலத்தில் வயல்களில் எல்லா புறங்களிலும் சூடுகளாக காணப்படும். இது பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மேலும் இக் காலத்தில் தூக்காணங் குருவி கூடுகளும் மரங்களில் அதிகமாக இருக்கும். ஆக நாங்களும் சூடு அடிப்பு காலத்தில் மாலை நேரத்தில் தான் வயலுக்கு செல்வோம். அதுவும் மாலை நேர சூரியனும் மறையும், நேரம் இப்படி நிலையில் இயற்கையோ பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இந்த நிலையில் சூரியன் மறையும் போது வயல்களில் சூடு அடிப்பை தொடங்குவார்கள்.இப்படியாக இரவு விடியலை நோக்கி சென்றுகொண்டிருக்கும். அத்தோடு நாலா புறமும் வயல்களில் சூடு அடிப்பு நடைபெறுவதோடு, சூடுகளை சுற்றி ரெக்டர் சுற்றும் போது சத்தமும் கூடி குறைந்தவாறு இருக்கும். இந்த நிலையில் அயல் வயல்களில் உள்ள விவசாயிகள் தமது நாட்டுபுற பாடல்களை தாளத்துடன் பாடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இது போதாதுதென்று தூக்காணங் குருவிகளும் இரவு நேரத்தில் தமது கூடுகளில் வெளிச்சத்துக்காக மின்மினி பூச்சியை வைத்துக்கொள்ளும்,அத்தோடு ஆக்காண்டியும் கத்திவாறு இருக்கும். இப்படி இருக்கையில் எல்லா சூடு அடிப்பு இடங்களிலும் பெற்றோல்மேக்ஸ் வைத்து சூடுக் களத்தையே ஒளிமயமாக்குவர்கள். இதை எல்லாம் பார்ககும் போது மனமோ ஆனந்தத்தின் உச்சிக்கே சென்று விடும்.இப்படியாக பத்து பதினொரு மணியளவில் பனி விழ ஆரம்பிக்க தொடங்குவதொடு நிலாவும் தனது வெளிச்சத்தையும் குளிர்மையும் வெளிவிட்டவாறு இருக்கும். இதையெல்லாம் பார்க்கும் போது தமது மனமோ குழப்பம் இல்லாமல் மிகவும் அமைதியாக இருக்கும். இப்படியாக இதை எல்லாம் வாடியில்(தங்கும் இடம்) வெளியில் ரசித்தவாறு அப்படியே உறங்குவேன். இதன் பின்னர் காலையில் எழுந்த பின்னர் சூடு அடிப்பு இடத்துக்கு சென்றால் அங்கே சூடு அடிப்பு முடிந்து நெல்லை தூற்றிக்கொண்டிருப்பார்கள். இப்படி இருக்கையில் அப்பம் வற்கும் சிறுவர்கள் அப்பம் அப்பம் கத்தியவாறு சூடு அடிக்கும் இடத்துக்கு வருவார்கள். பிறகு என்ன நாங்கள் சுடச்சுட அப்பம் சாப்பிடுவோம். பின்னர் ஒருவாறு சூடு அடிப்பு முடியும். அதன் பின்னர் வீடு வந்து விடுவேன். மேலும் வீடு வந்த பின்னரும் எப்ப அப்பா திரும்ப கூட்டி போவார் என்று தான் யோசிப்போன். இப்படி உண்மையில் அது ஒரு காலம் அழகியதொரு காலம் தான். இப்ப வயலுக்கு செல்வதற்கு பெரிதாக விருப்பமும் குறைவு அதுமட்டுமல்லாது தற்பொழுது எல்லாம் சூடு அடிப்பு இல்லை. இப்பொழுது அறுவடைக்கு அறுவடை(வெட்டு மெசின்) இயந்திரம் பாவிக்கிறர்கள். இப்பயெல்லாம் இந்த இனிமையான காலத்தை நினைக்கும் போது மனமோ மகிழ்சியின் எல்லையை தாண்டுகிறது....

நன்றி!(பல்சுவைபதிவுகள்)

Friday, June 24, 2011

நிம்மதி எங்கே என்று தேடிப்பார்த்தேன் அது எங்கேயும் இல்லை....

முந்தைய மாதிரி லைப்பில இப்ப நிம்மதி என்ற சொல்லுக்கே இடமில்ல. எத தொட்டாலும் பிரச்சனை தலை பிய்க்கிறது. ஏன் வீடு, வேலை செய்யும் இடத்தில் கூட இப்படி நிம்மதியை தேட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுக்கிறோம் என்றால் அது பொய்யல்ல. இப்படியான நிலையில் இருக்கையில் எனது நண்பர் ஒருவர் பேஸ்புக்கில்(Facebook) நிம்மதியை பற்றிய கதையை பிரசுரித்த போது இது எனக்கு பிடித்திருந்தது. ஆகையால் இந்த கதையை உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன் வாசர்களே!
நிம்மதி இழப்பது எதனால்? Good Question(இது நல்ல கேள்வி)

ஒரு துறவி இருந்தார்.அவரிடம் பணக்காரர் ஒருவர் வந்தார்.சுவாமி என்னிடம் நிறைய செல்வமிருந்தும் நிம்மதி இல்லை. என்ன காரணம் என்பது புரியவில்லை?என்று கேட்டார். அதற்கு துறவி பதில் சொல்லவில்லை.

அங்கே விளையாடிகொண்டிருந்த குழந்தை ஒன்றை அருகே அழைத்தார்.அதன் கையில் ஒரு மாம்பழத்தை கொடுத்தார். குழந்தை அதை தன்னுடைய ஒரு கையால் வாங்கிக்கொண்டது.

அடுத்து ஒரு பழத்தை கொடுத்தார். அதையும் இன்னொரு கையால் வாங்கிக்கொண்டது. மீண்டும் ஒரு பழத்தை கொடுத்தார். தன்னுடைய ஒருகையால் இருபழங்களையும் மார்போடு அணைத்துக்கொண்டு மூன்றாவது பழத்தையும் பெற முயற்சித்தது.

ஆனால் ஒரு பழம் நழுவி கிழே விழுந்தது. அதைக்கண்டு அந்த குழந்தை அழுதது .இதை கவனித்துக் கொண்டிருந்த அந்த பணக்காரரிடம் அந்த துறவி 'இந்த குழந்தையை பார்த்தாயா? இரண்டு பழம் போதும் என்று நினைத்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?'

அதே போன்றுதான் 'போதும்' என்ற திருப்தி ஏற்பட்டுவிட்டால் பிரச்சனை வாரது. நிம்மதி கிடைக்கும்.

பணக்காரருக்கு தனக்கு ஏன் நிம்மதி இல்லை என்ற விவரம் புரிந்துவிட்டது.நன்றி!(பல்சுவைப்பதிவுகள்)

Tuesday, June 21, 2011

அன்பின் அகம்அன்பின் அகம் நிறைந்து....
ஆக்கம் அதில் தெளிந்து....
உண்மை உணர்வடைந்து....
உயர்வில் தெளிவடைய.....
நன்மை வேண்டும் இறையே....
நின்னை நாடும் பணியும் இதுவே.தெளிவாக அடையட்டும் ஆண்டு
தேடும் பொருள் நிலை வேண்டும்
நாடும் நிதைதருள் வேண்டும்
நல்லவையே நடைபெற வேண்டும்....ஏறி இருந்து செலுத்த நினைத்தாய் இயக்கம் இல்லை
அதன் இயந்திரத்தில் தானும் எப் பழுதுமில்லை
மாறி வந்து தற்றத்தள்ள....
அதன் மறுதலிப்பும் மாறிச் செல்ல....
மீறி வரும் இயக்கம் கண்டு
மீண்டும் ஏற நின்றால்
ஆறிப் போகும் - வுல்
இயந்திரத்தின் அர்த்தம்தான் என்ன?.

நன்றி!

Friday, June 10, 2011

11 ஆண்டுகளாக பிரிந்த நட்பு மீண்டும் மலர்ந்தது....

நட்பு என்றால் நான் உங்களுக்கு ஒன்றும் புதிதாக சொல்லவே தேவை இல்லை. என்னுடைய நட்பும் கர்ணன் நட்பு மாதிரி பெரிதானதல்ல.

அதுவும் பாடசாலையில் உருவாகும் நட்பு உலகில் எவராலும் மறக்கமுடியாது. அந்த வகையில் எனக்கும் பல நட்புகள் பாடசாலையில் மலர்ந்தது. ஆனாலும் 5ம் ஆண்டில் படிக்கும் போது ஒரு நண்பன் எனது நட்பு அகராதியில் இணைந்தான். இப்படியான நட்பு மேலும் வளர்ந்து கொண்டு சென்றது. இந்த நட்பை பார்த்த எனது சக மாணவர்கள் எங்கள் மீது பொறாமை கொள்ள ஆரம்பித்தார்கள்.

இப்படியான நிலையில் நட்பின் இலக்கணங்களாக விளங்கிய நாங்கள் ஓவ்வொரு வகுப்பு உயரும் போதும் இருவரும் பிரிவதில்லை இருவரும் அருகில் ஒன்றாக அமர்ந்துதான் படித்தோம்.இப்படி இருக்கையில் பொறாமையின் உச்சத்திற்கு போன எனது சக மாணவர்கள் எங்கள் இருவரையும் பிரிப்பதற்கு சதி வலைகளை பின்ன ஆரம்பித்தார்கள்.இதன் பின்னர் பின்னிய வலையில் எங்களை பிரித்தார்கள் இதை அறியாத நாங்களும் பிரிந்தோம்.

இதில் முக்கிய விடயம் என்னவென்றால் நான் தான் முதலில் அவனிடம் கதைப்பதை தவிர்த்தேன்.இதன் பின்னர் அவனும் என்னிடம் கதைப்பதை தவித்துக்கொண்டான். இப்படியாக நாங்கள் இந்தியா பாக்கிஸ்தான் நிலைமைக்கு சென்றோம்.இதை எல்லாம் பார்த்த எங்களுடைய சக மாணவர்கள் பிரித்து விட்டோம் என்று மகிழ்ச்சி அடைந்தாலும் இன்னொரு பக்கம் எங்களுடைய பிரிவு வேதனையை கொடுத்தது. இப்படியாக காலமும் நகர்ந்தது எங்களுடைய சக மாணவர்களும் இருவரையும் சேர்பதற்கு முயற்சி எடுக்கவில்லை. நானும் இமேஜ்(Image) காரணமாக அவனோடு கதைப்பதற்கு முயலவில்லை.இப்படியான நிலையில் எங்களை பிரித்த சக மாணவர்களில் ஒருவன் நடந்தவற்றை என்னிடம் கூறிய போதும் நான் அவனோடு கதைப்பதற்கு ஆயத்தம் இல்லாதவானாகாக காணப்பட்டேன்;. மேலும் சில ஆண்டுகளுக்கு பின் சாதாரண தர (O/L) பரீட்சை தோற்றிய பின்னர் நான் கணித பிரிவிலும் அவன் வர்த்தக பிரிவிலும் கல்வியை பயின்று பாடசாலையை விட்டு வெளியேறினோம். இதனால் மேலும் நட்பு பாலம் உடைந்த ஆறு போல் இருந்தது இதை திருத்துவதற்கு எனது சக மாணவர்களும் முன்வரவில்லை.இப்படியாக கால சக்கரமும் நகர்ந்தது கொண்ட சென்றது.


கிளைமாக்ஸ்
(Climax)

இறுதியாக சில நாட்களுக்கு முன்பு எனது பாடசாலை வாழ்கையை நினைத்த போது இவனுடைய நட்பும் பிரிவும் எனது மெமரியில் லோட்(Load) ஆனது இதன் பின்னர் நான் சிந்தித்தேன் பிரிந்த நட்பை தொடவேண்டும் என்று ஆகையால் இவனை எங்காவது பார்த்தால் நான் முதலில் கதைக்க வேண்டும் நினைத்தேன் .இப்படியாக சில நாட்களுக்கு முன் என்னுடைய உறவினார் ஒருவரை அவன் சந்தித்திருக்கிறான். அவரும் என்னுடைய பாடசாலையில் படித்தவர் இதனால் அவர் என்னுடைய உறவினர் என்று அவனுக்கு தெரியும் ஆகையால் அவன் அவரிடம் எங்களுடைய நட்பு பிரிந்ததை பற்றி கூறியுள்ளான். இதை கேட்ட என்னுடைய உறவினார் உடனே தொலைபேசியில் தொடர்கொண்டு இப்படி நடந்ததா என கேட்டார் நானோ ஆம் என்று கூறியது மட்டுமல்லாது அவனை எங்கே சந்தித்தீர்கள் என்று வினவ அவனோ அருகில் இருக்கிறான் என்றார். நானே உடனே அவனிடம் தொலைபேசி கொடுங்கள் என்று கூற அவரோ கொடுக்க நாங்கள் இருவரும் மனம் விட்டு 5 நிமிடங்கள் வரை கதைத்தோம்.மேலும் அவனே என்னிடம் உன்னுடைய தொலைபேசி இலக்கத்தை உனது உறவினாரிடம் வாங்கி பின்னர் உன்னை தொடர் கொள்கிறேன்டா என்று கூறி விடைபெற்றான்.இப்ப ஒரு உண்மையை சொல்கிறேன்....

"பிரிவுகள் வேண்டாம் பிரிவுகள் வேண்டாம் பிரிவுகள் வேண்டாம் அதுவும் நட்பின் பிரிவு வேண்டாம் சாமியோ" இந்த உலகில்....(நண்பேன்டா!)


நன்றி!(பல்சுவைதிவுகள்)


Sunday, May 22, 2011

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன கருத்துமிக்க கதை.

மனித வாழ்கையை பலர் பேர் பல மாதிரியான தத்துவங்களை வாரி இறைத்தாலும் நமது அனுபவத்தில் சிம்பு வானம் படத்தில் சொல்வது போன்று என்ன வாழ்க்கடா இது என்பது சில சந்தர்ப்ப சூழ் நிலைகளில் இந்த வார்த்தையை நினைப்தை நமக்கு கூட தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏனெனில் என்னுடைய சொந்த வாழ்கையிலும் பல சந்தர்பங்களில் தோல்வியை சந்தித்த போதல்லாம் இந்த வார்த்தையை நினைத்தேன்.

இப்ப எதாவது பஞ்ச் சொல்லனும் போல தோன்றியது அதுதான் சும்மா! அவ் அவ்......

அதுமட்டுமல்ல நமது மானிட யாதார்த்த வாழ்கையில் பல சரிவு எற்படுவது சீரானது தான் ஆனாலும் இந்த சரிவுகளை நிமிர்த்திக் கொண்டு வாழ்வதுதான் மனித வாழ்கையும் கூட என்ன? மேலும் நமது வாழ்கையில் பிறரின் தலையீடு, விசனங்கள் என பல சாக்கடைகளை கடக்க வேண்டியும் கூட அமைகிறது. ஆனாலும் இந்த தலையீடு, விசனங்கள என்பவற்றை பற்றி சினம் அடையாமல் அதை உள்வாங்காமல் நமது வாழ்கை பயணத்தை தொடர்வது சரியான தெரிவு. சரி தானே நான் சொன்னது நீங்க என்ன நினைக்கிறீர்கள் இதைப்பற்றி? மேலும் படிங்க.

பிறரது சொல்பேச்சு கேளாமை பற்றி ஒரு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன கதையை உங்களுக்கு சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். யார் முதலில் மலை உச்சியைத் தொடுவது என்று தவளைகளுக்குள் ஒரு போட்டி. எல்லா தவளைகளும் ஓரே மாதிரியாகத் தான் கத்திக் கொண்டிருந்தன அது என்னவென்றால் முடியாது என்றுதான். இந்தக் கூச்சலுக்கு நடுவே ஓரே ஓரு தவளை மட்டும் மலை உச்சியை அடைந்ததுவிட்டது.(மிகவும் சுறுசுறுப்பான தவளை போல)

எப்படி இந்தத் தவளையால் மட்டும் சாதிக்க முடிந்தது? அது செவிட்டுத் தவளையாம். எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பேச்சுக்களை கேட்காதே என்று சூப்பர்ஸ்டார் கூறினாராம். எப்படியான கருத்துமிக்க கதை என்று பார்த்திர்களா! அதுமட்டுமல்ல எனக்கு கூட இந்த கதை உற்சாகம் ஊட்டியதாக அமைந்தது. பிறரது சொல்பேச்சு கேளாமையினால் எப்படியான பலன் கிடைக்கிறது பார்த்தீர்களா!

மேலும் நமது வாழ்கையில் தன்னம்பிகை விடாமுயற்சி கடின உழைப்பு என்பனவற்றால் நமக்கு வெற்றி சேரும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்பதோடு இந்த பாடலையும் பார்த்துவிட்டு ஏதாவது கருத்து சொல்ல விரும்பினால் சொல்லிட்டு போங்க சாமியோவ்.நன்றி!(பல்சுவைப் பதிவுகள்)

Sunday, May 1, 2011

புதுயுகத் தமிழர் கவிதையின் தொடர்ச்சி....


ஈழத் தமிழர் குரல் எங்கெங்கோ ஒலிக்கின்றது....
இவர்களல்லோ தமிழர் என்று எண்திசையும் பறைகின்றது....
வாழத் தெரிந்தவர்கள் தாம் வாழந்த இடம் வேண்டி....
சாலத்தின் முன் கண்ட கலிங்கத்துப் பரணியும்
இப் போர்ண்டு கவிதனில் நலிந்து போகுமோ?....
ஞாலத்தின் முன் வந்து நயம் பெறும் - நம்
தமிழர் பலம் வளம் பெறும் புதுயுகத்தில்!
சர்வதேச வலைப்பின்னலின் தமிழ்ப் பணி....
தரம் கொண்ட தமிழினி 'மஞ்சரி தலை' இலண்டனில் புத்ததாளி
கலைமண உதையன் பத்திரிகை கனடாவில் நிறைவொளி....
கவித்துவ நிறைவோடு கலாச்சார தமிழ் பணி
இலக்கிய யுகத்தில் இத்தனை வளர்வுகள்....
இதற்கு ஏற்றாற்போல் எத்தனை வரைவுகள்
அழகிய தமிழில் சுவிஸில் தமிழ்ப்பணி....
அடக்கமாய் சதிஸின் ஆக்கங்கள் புதுயுகத்தில்....

புதுயுகத்தில் தமிழர் இவர்கள் பொலிவுடன் வளம் பெறுவர்!
நவயுக வளர்விற்கேற்ப நாமும் உயரல் வேண்டும்!
கலையுகப் பணி செய்த கவித்தமிழ் வளர வேண்டும!
கருத்துடன் படத்துறையில் கைங்காரியம் செய்ய வேண்டும!
எத்துறை எதிலும் எம் தமிழர் உயர வேண்டும்!
ஏற்றம் கண்டு தமிழர் இனம் தனிக்கொற்றம் கொள்ளல் வேண்டும்!
பற்துறைப் பாவலர்கள் என்று எமைப் பலரும் பாராட்ட வேண்டும்!
பாரினிலே பழமை இனம் புதுயுகத்தில் பளிச்சிட வேண்டும்!

புதுயுக தமிழன இவன் புறப்பட்டு விட்டான்....
போன இடம் தன்னில் தலைப்பட்டு விட்டான்....
நவயுகத் தகுதியை நன்றாய் அடைந்து அடைந்து விட்டான்....
நல்லார் இவர்கள் எனறு நாவுடையார் போற்றல் பெற்றான்....
சொல்லால் செயலில் சோர்வை ஒதுக்கி வைத்தான்....
சுகந்திரத்தை வேண்டி சொந்தத்தில் நாடு கொள்வான்!
இந் நாள் எவையும் இனி இனிதே எனதேன்பேன்
பொன்னாயு ஒளி பெற்று புதுயுகத்தில் உயர் பெறுவான்!
வாயுடையார்க்கெல்லாம் பொய்த மொழி தமிழ்
சேயுடையார் வீட்டில் செழித்து விட்டான்....
நாவுடை நாவவல் கண்ணதாசன் நல் ஆய்வுடன்
ஆக்கம் சொன்னான்....
கேட்டீர் நம் வாய்மை
ஆற்றிடுவீர் நல் சேவை
அது ஆற்றுப் படுத்தும் புது யுகத்தில் தமிழரை....


நன்றி!

படைப்பு : எனது தந்தை

Wednesday, April 27, 2011

பகாவன் ஸ்ரீ சத்தி சாயி பாபா மஹா சமாதி அடைந்தமைக்கு இரங்கல் பா!


வானுறைந்த தெய்வமொன்று வையத்துள் வந்தது....
வாழ்வாங்கு வாழ்ந்து காட்டி வானுறையச் சென்றதோ....
தானிளைத்து தன்ளாடியும் தார்மீகம் செய்தது....
தயவுடன் தாட்சண்ணியத்தை தாராளமாகத் தந்தது
யார் மதமும் ஓர் மதமே யாமெல்லாம் ஓரினமே....
பாரறிய உலகிற்கு பன்மைத்துவ வாதம் தந்த
யாமறிந்த புனிதர் இவர் யாவர்க்கும் பொது உடையார்....
போய் அறிந்த சேதி கேட்டு புவனமே கலங்குது இன்று!


புனிதர் எனப் போற்றப்பட்டார் போய்விட்டார்.....
போக்கிஸமாய் இருந்தவர் இன்று சென்று விட்டார்
மனிதர் என மதிக்கப்பட்டார் மறைந்து விட்டார்....
மகானாக வாழ்ந்தவர் மாற்றம் கொண்டார்
இனிதே என இயம்பியவர் எம உலகம் கண்டார்....
இயன்றவரை இறை உள்ளம் காட்டி இறைபதம் சேர்ந்தார்
நமதே என்று சொன்னவர் நமை விட்டகன்றார்
நலமிழந்து உலகம் இன்று நாதியற்றுத் தவிக்கிறது....


பிறப்பு : - 23-11-1926
மாகசமாதி : - 24-04-2011
பிறந்த இடம்: - புட்டபர்த்தி
இறந்த இடம்: - புட்டபர்த்தி
இயற்பெயர் : - சத்தியநாராயணராஜீ
தத்துவம் : - அத்வைதம்
குரு : - எவருமில்லை


அன்பாலும் தன்னிகரமற்ற சேவையாலும் உலகம் முழுவதையும் தன்வசப்படுத்திய பகாவன் ஸ்ரீ சத்தி சாயி பாபா மஹா சமாதி அடைந்தமைக்கு அவருடையபக்தர்கள் மற்றும் சீடர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை பல்சுவைப்பதிவு ஊடாக தெரிவித்துக்கொள்கிறேன்.

பகாவன் ஸ்ரீ சத்தி சாயி பாபாவின் சில பொன் மொழிகள்....

  • அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள்.உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.
  • மனதை தூய்மையாக முழுமையாக வைத்துக்கொள். வெற்றிபெறுவாய்
  • சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.தயாராக இருக்கும் மொட்டுகளதான்; மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
  • உண்மை, தர்மம், கருணை ,மன்னிக்கும் மனப்பான்மை , இவற்றை பெற வேண்டுமானால் ஓவ்வொரு தனி மனிதனும் தனக்குள் அவற்றை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.
பகாவன் ஸ்ரீ சத்தி சாயி பாபாவின் ஆன்மீகத் தத்துவம்....
  • கடவுள் ஒருவர்தான்.அவர் தான் அனைத்து மதங்களின் காரணகர்த்தா.
  • என்னிடம் வர மதம் தேவையில்லை.
  • உங்களின் மதங்களிலேயே இருந்தபடி என்னைப் பின்பற்றுங்கள் மற்றும் மக்களுக்கு தொண்டு செய்யுங்கள்.
  • உங்கள் சேவைதான்,மரணத்துக்குப் பிறகும் உங்களை உன்னத இடத்தில் வைக்கும் என்பதை நம்புங்கள்.

நான் இறந்தாலும்,மறுபிறப்பு எடுப்பேன் என்பது பகாவன் ஸ்ரீ சத்தி சாயி பாபாவின் முந்தைய அறிவிப்பு ஆகும். இதனால் அவருடைய பக்தர்கள் மற்றும் சீடர்களின் ஒரே எதிர்பார்ப்பாய் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது என்றால் அது மிகையான விடயமல்ல.

நன்றி!
Saturday, April 23, 2011

புதுயுகத் தமிழர்

புலம்பெயர்ந்த தமிழர் எங்கும் பொங்குதமிழ் கீதம்....
புத்தெழுச்சி பெற்று அவர்கள் புதுத்தென்பில் கோஸம்....
மறவர் படை தமிழரென வஞ்சினமாய் நாதம்....
வரப்போகும் தமிழ் நிலத்தை வரவேற்று நேசம்....
அறிவுடனாய் ஆக்கம் செய்து அகிலமெங்கும் ஈட்டம்....
ஆகமட்டும் சேர்ந்த இடத்தில் அன்பதனாய் தோட்டம்....
அவர்கள் அடுத்தடுத்து முயற்சி தமிழ் வளர்க்கும் பாசம்....
அத்தனையும் அவர்கள் தம் புதுயுகப் பிரவேசம்!

பண்பாட்டை பறைசாற்றி தமிழர் பக்குவத்தை வெளிக்காட்டி....
பாரம்பரிய தமிழர் இனம் பரிணாமம் கண்டு விட்டது
பலவளர்ச்சி கண்டு பல்துறையில் நிறைவு கண்டு....
தொழிற்துறையில் தமிழர் இனம் துறை கண்டது
துவளாமல் பல வழியில் வெற்றி கொண்டது....
நிகழ்கால வரவை நோக்கி நிமிர்ந்து நிற்கும்
நீடித்து நிலைத்து நிற்க உழைத்து நிற்குது....
வருங்கால யுகத்தை நோக்கி வாஞ்சை கொள்ளுது
வரும் புதுக்கால யுகத்தை நோக்கி வரிந்து நிற்கும்!

ஜதீகப்புராணங்கள் அதிகளவில் ஆக்கிய இனம்....
வெளகித யதார்த்தத்தில் நலம் பெற வளர்ந்த இனம்
வைதீக கலாச்சாரத்தை வரும்பு மீறிக் கொள்ளாமல்....
பௌதீக இரசாயனத்தில் பாரிய வளர்ப்பு கண்டு
பலப்பல ஆக்கங்களை பாருக்குத் தருகின்றனர்....
கணனியில் மென் பொருளை கற்றதில் பெரும்பாலோர்
அறிவுடை தமிழர் என்றால் வியப்பாகுமா?
அத்தனையும் அவர்கள் தம் யுகப்பிரவேசம்.

பிரான்ஸ் நகரசபையில் தமிழர்!
பெரிய பிரித்தானியாவில் நாடாளுமன்ற அபேட்சகர்!
அமெரிக்காவில் அரசசபை அங்கத்துவம்!
அவுஸ்திரேயாவில் அதற்கான பிரவேசம்!
கனடாவில் ராஜரிக அந்தஸ்து! கடல் கடந்து
மறு தேசங்களிலும் கற்றவருள் தமிழர்!
டொறண்டோவில் தமிழர் கூட்டம்!
தொலை தூரம் எனினும் துவளாத தமிழ் நேசம்!
அகலாத தமிழ் பாசம் அத்தனையும் அதிவேக
யுகத்திற்கான அத்திவாரம்!

புதுயுகத் பாதையில் புதுபொலிவு தமிழர் அணி....
பொக்கிஷ தமிழ் நூல்கள் புது வடிவில் இணையத்தில்
புதிய விசைப் பலகை தமிழில் கணனியில்....
புத்தொளியில் தமிழுக்கு தனியான தமிழ் இணையம்
வதிய இடம் வேண்டி வாழச்சென்ற இடம் தன்னில்....
நிறைய ஆக்கம் செய்து நிலைத்து விட்டான் எம் தமிழர்
வரையே இல்லாமல் வளர்ந்திடுவார் இவ் இனத்தார்
வழிசமைத்து புதுயுகத்தை வாழ்வமைப்பார் இத் தமிழர்!


தொடரும்....


Sunday, February 13, 2011

மனித நேயம்! - ll

மனித நேயம் என்ற கவிதையின் தொடர்ச்சி.....இறையும் வணக்க வேண்டியதில்லை
இக வழிக்குப் பணிய வேண்டியதில்லை
முறையை பயில வேண்டியதில்லை
மற்றைய சாஸ்திரங்களும் அறிய வேண்டியதில்லை
வரையாய் மனித நேயத்துடன் வாழ்வது சாலசிறப்பு
நிறைவே நிகர்த்தும் இவன் நிறைவான – மனித நேயத்தான்.மகான்கள் வகுத்த நெறியும் மதம் காணும் உரையும் - வழியும்
தகாதவை இவையென்று தடுக்கும் அறநெறியும்
மிகையான வாழ்நெறிக்கு விளக்கானது - இவை
காட்டும் ஒளித் தெளிவில் ஒத்து நிற்பான் - மனித நேயத்தான்.மனித நேய மாண்பானது மகத்துவமானது
மறைகள் சொல்லும் நெறி வழியில் உயர்வானது
கறைகள் இல்லா வாழ்வில் நிற்க கயமையற்று
நேரில் செல்ல.....
மனித நேய அன்பு - இது மண்ணுக்கு வேண்டியதெம்பு
வரைகள் இல்லை இவ் வளர்விற்கு – வாழும்
வாழ்விற்கு மனித நேயம்.வையத்துள் வாழ்வாங்கு வாழ வகுத்த நெறி வழி ஆள
தொகுத்த முறைமை காண.....
துன்பம் விட்டகன்று தேற.....
அடுத்துப்பற்ற வேண்டியது அன்பு – அது
அற வழி காட்டி நிற்கும் நேயம்
விடுத்து வீணர் தம் மோசம் - வேண்டுவது
மனித நிலைப்பாசம்.ஆறறிவு படைத்த மனிதன் அன்பகற்றி வாழ்வதேன்?
அடுத்தடுத்து விலங்கதனாய் அல்லல் தான் செய்வதேன்?
அறவழி சொல்லும் நேயத்தை அறவே மறுப்பதேன்?
ஆகமட்டும் ஆணவத்தால் அழிய முயல்வதேன்?
அது, அவன் ஆக்கத்திற்கு ஆகாது
அழிவிற்கே வித்தாகும்.மனித மாண்பை வளர்த்து மகத்துவத்தை அதனில் சேர்த்து
புனித நேயனாய் பொலி வடைவாய்!
பொறாமை விட்டகன்று தெளிவடைவாய்!
நிறைமை இது நியாயமும் அது!
பெருமையதில் காண இப் பெரு நிலத்து வழக்காக
அருமை அவ்வழியில் அன்புவழி நேயனாவீர்!

வணக்கம்!


முன்னர் குறிப்பிட்ட படி எனது தந்தைக்கு இந்த கவிதைப் போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றத்காக மனிதவள அபிவிருத்தி,கல்வி,மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் பரிசு வழங்கிய போது எடுக்கப்பட்ட படம்(Photo).

Friday, January 28, 2011

மனித நேயம்!

பல்சுவைப்பதிவில் பல பல்சுவையான பதிவுகளில் கவிதையானது முக்கியமானதாகும். மேலும் நான் 09/12/2010ம் திகதி வெளியிட்ட ''கவிதைத் துளிகள்'' எனும் பதிவில் எனது தந்தை அரசாங்க திணைக்களத்தினால் நடைபெற்ற அரசாங்க திணைக்களத்தில் கடமையாற்றுவர்களுக்கான கவிதை போட்டியின் போது அகில இலங்கை ரீதியாக மூன்றாம் இடத்தை பெற்றவர் என்று குறிப்பிட்டு இருந்தேன். இப்பொழுது அந்த மனித நேயம் என்ற கவிதையை பிரசுரிக்கிறேன். மட்டுமல்லாது இது பெரிய தொகுப்பு ஆகையால் இரு பதிவுகளாக பிரசுரிக்கிறேன்.மனிதனை மனிதன் வதைத்து மரணித்ததைக் கண்டோம்
மரணிக்கும் தறுவாயில் அவனை வதைத்து மகிழ்ந்ததையும் கண்டோம்
மரணிப்பவன் வேண்டும் தண்ணீரை மறுத்ததையும் கண்டோம்
மனித மாண்பு மொத்தத்தில் மரணித்தையும் கண்டோம்.
சட்டம் சதி செய்த சரிதைகள் பல,
சந்தர்ப்பம் குற்றமாக்கிய கதைகள் உள,
உண்மையை பொய்யாக்கிய உரைகளும் உள,
ஒரு சார்பாய் பொய்ப்பக்கம் சார்ந்த தீர்ப்புகளும் உள,
உண்மையில் மனித நேயம் ஒடிந்து விட்டதா? – அன்றேல் ஒழிந்து விட்டதா?


தரையில் அமர்ந்த அந்தகன் அவன் - தன்
முன்னே சீலையை விரித்து....
தர்மம்,தர்மம் என வேண்ட....
தயவான்கள் பலரும் தர்மம், அளித் செல்ல....
தப்புக் குணம் கொண்ட ஒருவன்....
தர்மம், அளிப்பவன் போல் குனிந்து
அவன் தர்மத்தை தனதாக்கும் - காட்சி
தவறி விட்டதா, மனித நேயம்
இதற்கு தலை பறந்து விட்டதா?

அடித்து வதை காட்டி அழுத்தி அனல்காட்டி
உதைத்து உயிர் வதைத்து உள் நீரில் அவனை அமிழ்த்தி....
வதைத்து வாஞ்சையின்றி மிதித்து உரித்துத் தோலை
'ஓ' வெனும் அலறல் பார்த்து....
மகிழும் மனிதனும் உளான் - இவன் தன்
மனித மாண்பு எத்தகையது?தந்தையை வதைத்த தனயனும் உளான்
தாயை உமிழ்ந்த தயவற்றோனும் உளான்
தன்னையே வளர்த்துச் செல்லும் தன்வாளனும் உளான்
தனதாக்கி மற்றோரை தவிக்க விட்டவனும் உளான்
தப்பையே சதா செய்யும் தப்பாளனும் உளான்
தரணியில் மனித நேயத்தை தலை சாய்த்தவனும் உளான்.

அயல் வீட்டார் வளர்ச்சி அவனுக்கு அனலாக தகைக்கிறது
அவன் காட்டும் உயர்ச்சி அவனை அந்தரத்தில் உயர்த்துகிறது
ஆக மட்டும் அவன் உயர்வை அறுக்கவே பார்க்கிறான்
அர்த்த சாம நேரமின்றி அக மனதில் குமுறுகிறான்
வந்த சந்தர்ப்பம் பார்த்து நின்று வதைக்கவும் துணிகிறான்
வாஞ்சையின்றி மனித நேயத்தை வடுவாக்கி பணிகின்றான்.


கோல்லான் புலாலை மறுத்தானை என்றும்
எல்லா உயிரும் தொழும்
எல்லா அன்பே வயமான இவனை
இகமே ஏந்தி நிற்கும்
நல்லான் இவனென்றும் நடுவன அவனென்றும்
நானிலமே தலை பணியும்
உள்ளான் அவவென்றும் உயர்ந்தோன் அவனென்றும்
உலகம் உள்ளமட்டும் சொல்லி நிற்கும்.

வளர்த்த பசுவை வாஞ்சையுடன் தடவுவதும்
அதன் வளர்விற்கு உணவிட்டு வகை வகையாய் - பார்ப்பதும்
வேடிக்கை இதுவென்னு வீண்வாதம் புரியாதீர்!
வேகுமுன் நெருப்பில் - நாம் வேண்டும் மனித நேயம்
காட்டும் அவை கடமை பாசம் கருணை
செய்பவனுக்கு பலனைக்காட்டும்
ஈட்டும் இவை மனித சேயம் - எல்லாம்
சேர்ந்த மனித நேயம்.

பசித்தவன் பார்த்திருக்க பல்சுவை உணவருந்தி
பச்சாபப்படாமல் பார்த்து நிற்கும் கல் மனத்தான்
எக்காலும் உருப்படான் இது நியதி பொது வழக்கு
பொற்கால மனித நேயத்தை அவன் பொடியாக்கி வாழ்வதேனோ?

அன்பை வழக்காக்கி அக மனதில் நிலை நிறுத்தி
பண்பை செயலில் காட்டி பரிவை உயர்வாக்கி
உண்மை என்றும் பேசி ஒவ்வாமை மறுத்து நிற்கும்
தன்மை எவன் உளானோ தகைமை மனித நேயத்தான்.


நன்றி!

Monday, January 24, 2011

வலித்த இதயக் கீறல்கள்(ஈழத்துக் காதல் )

காலம் எண்பதுகளின் இறுதி

வழமை போல் கதிரவனும் தன்னுடைய கதிர்களை பரப்பும் போது புல் மேல் இருந்த பனிகளும் உருக ஆரம்பித்தது.அந்த வேளையில் கமலா தனது வாசலில் அவளுக்கு விருப்பமான கோலத்தை போட தொடங்கிய போது சு... சு... என்ற சத்தம் கேட்டது உடனே நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய வீட்டுக்கு அருகாமையிலுள்ள பனை மரத்திற்கு கீழ் தன்னுடைய ஆருயிர் காதலன் ரமேஷ் நிற்பதை கண்டு பட படக்க தொடங்கினாள். உடனே அவனை போ போ என்று மெதுவாக சமிஞ்சையால் காட்டினாலும் ,ஆனால் ரமேஷ் நின்ற இடத்தை விட்டு ஒரு இஞ்சும் அவன் நகரவில்லை.இதை பார்த்த கமலா 10 மணிக்கு வருகிறேன் என்று தனது கை விரல்கலால் சமிஞ்சையாக காட்டிய பின்னர் தான் அவன் அவ்விடத்தை விட்டு அகன்றான். இப்படி என்றால் இவர்களுக்கு படிப்பே இல்லையா என்று கேட்கிறீர்களா? அதை ஏன் கேட்கிறீர்கள்! அந்த காலத்தில் யுத்தம் பரந்து காணப்பட்டதால் இவர்களின் பெற்றோர் பாதுகாப்பு கருதி இவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை.இவர்களின் படிப்பு இடையே நின்றாலும் இவர்களின் பள்ளியில் தொடங்கிய காதல் தொடர்கிறது. இந்த காதல் இவர்களின் சில நண்பர்களுக்கு மட்டும்தான் தெரிமே தவிர ஏனையோருக்கு தெரியவேதெரியாது. அத்தோடு இவர்கள் இருவரும் ஊர் எல்லை உள்ள ஓர் மாந்தோப்பில் தான் சந்திப்பதும் காதல் புரிவதும். இப்படியான இவர்களின் காதல் இப்படியான சிட்டுவேசனில் தான் இருக்திருக்கும் அல்லவா?
பத்து மணியை நோக்கி நேரம் நகர்ந்து கொண்டிருக்க, கமலாவின் அயல்வீட்டு நண்பி நிர்மலா கமலாவை திடீர் என்று கூப்பிட்டு நம்ம ஊர் ரமேஷ்சை இன்று அதிகாலை கடத்திக்கொண்டு யாரோ நம்ம ஊர் சவக்காலைக்கு அருகில் உள்ள பெரிய ஆலமரத்திற்கு கீழே சுட்டுவிட்டார்களாமே? நீ அறியவில்லையா என்று அவள் வினாவிய போது அவளே மூச்சு போச்சு இல்லாமல் இடி விழுந்தது போல் ஒடிந்துபோய் அவ்விடத்தை விட்டு அகன்று சிறிது நேரத்தின் பின்னர் வீட்டினருக்கு தெரியாமல் அந்த ஆலமரத்தை நோக்கி ஒடிப் போகும் போது ரமேஷ்யாக இருக்க கூடாது நினைத்த படி ஒடினாள். ஆனால் என்ன அங்கே பார்த்தால் அது ரமேஷ் தான். உடனே அவளே அவள் தன்னிலை, மறந்து ரமேஷ்சை தன் மடியில் வைத்து தனது அவனின் பிரிவை தாங்காமல் ஒப்பாரி வைத்தாள். அதன் பின்னர் அவளுடைய வீட்டினருக்கும் மற்றும் ஊர் மக்களுக்கும் இவர்களுடைய காதல் அம்பலமாகியது. ரமேஷ்சின் மரணத்தின் பின்னர் கமலாவின் வாழ்கையோ நிலை தடுமாறிய ஓடம் போல் ஆகியதோடு யாரிடமும் பெரிதாக கதைக்காமலும் பித்துப்பிடித்தது போல் வாழ்கையை கடத்தினாள். இவளுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்த போதும் அதை உதறிவிட்டு, நான் வாழந்தால் ரமேஷ்யுடன் தான் வாழ்வேன் என்று இருந்தேன், அவனே இப்ப இல்லை. இதனால் திருமண சம்பந்தமே வேண்டாம் என உறுதிபடக் கூறிய போதும் இவளுக்கு ஒரு தங்கையும் தம்பியும் இருந்தனர். அத்தோடு இவளுடைய தங்கைக்கு திருமண வயது எட்ட கமலாக்கு திருமணம் செய்ய வேண்டி கட்டாயத்தில், பெற்றொர் வலுக்கட்டாயமாக அயல் ஊர் மாப்பிள்ளைக்கு திருமணத்தை முடித்து வைக்கின்றனர் மாப்பிள்ளையோ ஆசிரியர் தொழில்.அவர் மனைவியை அன்போடு நேசித்தார். எது எப்படியோ அவள் கணவரோடு குடும்ப வாழ்கையில் அதிகம் அக்கறை காட்டவில்லை. இப்படியான நிலையில் இவர்களுடைய மனநிலை இப்படியாக தான் இருந்திருக்க வேண்டும்.இப்படியான நிலையில் அவளின் மனநிலையை உணர்ந்த கணவரோ அவளிடம் என்ன பிரச்சனை என்று வினாவிய போதும் அவளின் வாயால் எந்த பதில்களை அவனால் பெற முடியவில்லை. இதனால் கோபம் அடைந்த அவன் அல்லாவிடின் என்னை உனக்கு பிடிக்கவில்லையா? என்ற போது தான் அவள் அப்படி எதுவும் இல்லை என்று மட்டும் கூறினாள். அத்தோடு அவளால் இதைமட்டும்தான் கூறமுடிந்தது. இப்படியான நிலையில் சில மாதங்களின் பின்னர் கமலாவின் பள்ளி நண்பி மூலம் மனைவியின் காதல் விடயத்தை அவன் அறிந்து கதிகலங்கிபோனான். மட்டுமல்லாது கமலாவும் அவளுடைய பெற்றோரும் தன்னை ஏமாற்றிவிட்டனர் என்று நினைத்து அவளிடம் தாறுமாறகச் சண்டை போட்டு குடும்பநிலையிருந்து பிரிந்து போனான். இதன் பின்னர் கமலா தன் பெற்றோருடன் வந்து சேர்ந்தோடு சிறு காலத்தின் பின் பெற்றோரும் அவளை கணவருடன் சேர்ந்து வாழும் படி வற்புறுத்தியதோடு அவளை வெறுக்கவும் தொடங்கினார்கள். மேலும் தன் கணவருக்கு வேறுயோரு பெண்னோடு திருமண ஏற்பாடு பற்றியும் அறிந்தாள். இதன் போது தன் வாழ்கையை சிந்திக்கும் போது தன்னுடைய கணவருக்கு ஏதோ துரோகம் செய்தது போல் உணர்வே மேலிட்டது. மீண்டும் தன்னுடைய கணவருடன் சேர்ந்து வாழ ஆசைகளும் மற்றும் கணவரின் நினைவுளும் எழுந்து அவளை புதுபிக்க தன் கணவரின் அன்புக்கு அவள் காதல் வயப்படுகிறாள். இப்படியான நிலையில் இவளின் மனநிலை இப்படியாக தான் இருந்திருக்கும்.இந்த நிலையில் அவள் தன்னுடைய பெற்றோரிடம் அவளுடைய நிலையை சொல்ல அவளின் பெற்றோரோ இவர்கள் இருவரையும் ஒருவாறு சேர்த்து வைக்கின்றனர். இதன் பின்னர் கமலா தன்னுடைய காதலின் பழைய நினைவுகளை உடைத்தெறிந்து தன்னுடைய அன்பையும் முழுமையாக வெளிப்படுத்தினாள். பிறகு என்ன இருவரும் தங்களுடைய குடும்ப வாழ்கையை மகிழ்ச்சியுடன் ஆரம்பித்தார்கள். இவ்வாறகாக சில ஆண்டுகள் கழிந்த பின்னர் அவள் இரு குழந்தைகளுக்கு தாயானாள். மூத்தது ஆண் குழந்தை இரண்டாவது பெண் குழந்தை. இப்படியான இவள் குடும்ப வாழ்கையில் பிள்ளைகளோடு இப்படியான மனநிலையில்தான் இருந்திருப்பாள்.எது எப்படியோ நம்மவர்கள் சும்மாவா சொன்னர்கள் ''காதல் என்பது காலத்தால் அழியாது'' என்று. கமலா வெளியில் செல்லும் போது அவள் படித்த பாடசாலை காணும் போது ரமேஷ்யுடைய காதலும் காதலித்த நாட்களும் அவளின் மனதை ஆக்கிரமிக்க தவறுவதில்லை.


ஈழம் என்றவுடன் எல்லோருக்கும் யுத்தமும் அதன் அகதிகளும் தான் ஞாபகம் வரும்.ஆனால் வலிமையான காதல்களும் அரங்கேறியும் அரங்கேறமாலும் உள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

என் அன்புக்குரிய தமிழ் வாசர்களுக்கு பல்சுவைப்பதிவுகள் ஊடாக


Monday, January 3, 2011

தமிழ் பாடல்கள் வளர்க!

என் அன்புக்குரிய வலைப்பதிவு நண்பர்களுக்கு மலர்ந்துள்ள புத்தாண்டு நல்லதாய் அமையவேண்டுமென்றும் அத்தோடு பிந்திய புத்தாண்டு நல்வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்.மேலும் இந்த இனிய புத்தாண்டில் இனிமையானதொரு பதிவுடன் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தபோது தான் ஞாபகம் வந்தது நம்ம இளையராஜா சார் தான்.அது வேற ஒன்றுமில்லை சார் அவர் இசை அமைக்கும் படங்களில் ஆரம்பத்திலேயே அவர் பாடும் டைட்டில் சோங் (Title Song) பொதுவாக இருக்கும் அதனால் என்னவோ என்னுடைய வலைப்பதிவும் பாட்டு எனும் தலைப்பிலான கவிதையுடன் புத்தாண்டில் ஆரம்பிக்கின்றது.

பாட்டு

பண்ணிசை பலராகம் பல பாவம் -தமிழில்
பாடலுக்கு ஏற்ப சுருதி தாளம்....
தானாக லயம் சேர்க்கும் ஏழிஸ்வரம்
தமிழான பாடலுக்கு இவை ரசம்
யாராக இருந்தலும் நயமாக வருடிச் செல்லும்
பேரானந்த தமிழ்ப்பாடல்கள் - இவை
பிரியம் காட்டும் பழைய பாடல்கள்
மனப் பாரம் களைய வைத்து.....
மனிததத்துவத்தை உணர்த்தி நிற்கும்
மணம் நிறைந்த தமிழ்ப்பாடல்கள்
மனதை ஆற்றுப்படுத்தும் தத்துவப் பாடல்கள்
மெல்லிசை பாடலிலும் சுவை இருக்கு
இது – மேலைத்தேச ஒலியுடன் புது வனப்பு
துள்ளிசைத் தமிழில் ஒரு துடிப்பு
துடிப்பான பாடல் என்றால் பலர் ரசிப்பு
எல்லாரும் இசை என்றால் ஒரு லயிப்பு
இறை கூட இதனில் ஏன் ஈர்ப்பு....
சொல்லாலே மணம் வீசும் தமிழ் மாலை
சுவை சொட்ட உணர்ந்து கேட்டால் சோர்வு இல்லை....

நன்றி!
சும்மா தான்.