Monday, January 24, 2011

வலித்த இதயக் கீறல்கள்(ஈழத்துக் காதல் )

காலம் எண்பதுகளின் இறுதி...........

வழமை போல் கதிரவனும் தன்னுடைய கதிர்களை பரப்பும் போது புல் மேல் இருந்த பனிகளும் உருக ஆரம்பித்தது.அந்த வேளையில் கமலா தனது வாசலில் அவளுக்கு விருப்பமான கோலத்தை போட தொடங்கிய போது சு... சு... என்ற சத்தம் கேட்டது உடனே நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய வீட்டுக்கு அருகாமையிலுள்ள பனை மரத்திற்கு கீழ் தன்னுடைய ஆருயிர் காதலன் ரமேஷ் நிற்பதை கண்டு பட படக்க தொடங்கினாள். உடனே அவனை போ போ என்று மெதுவாக சமிஞ்சையால் காட்டினாலும் ,ஆனால் ரமேஷ் நின்ற இடத்தை விட்டு ஒரு இஞ்சும் அவன் நகரவில்லை.இதை பார்த்த கமலா 10 மணிக்கு வருகிறேன் என்று தனது கை விரல்கலால் சமிஞ்சையாக காட்டிய பின்னர் தான் அவன் அவ்விடத்தை விட்டு அகன்றான். இப்படி என்றால் இவர்களுக்கு படிப்பே இல்லையா என்று கேட்கிறீர்களா? அதை ஏன் கேட்கிறீர்கள்! அந்த காலத்தில் யுத்தம் பரந்து காணப்பட்டதால் இவர்களின் பெற்றோர் பாதுகாப்பு கருதி இவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை.இவர்களின் படிப்பு இடையே நின்றாலும் இவர்களின் பள்ளியில் தொடங்கிய காதல் தொடர்கிறது. இந்த காதல் இவர்களின் சில நண்பர்களுக்கு மட்டும்தான் தெரிமே தவிர ஏனையோருக்கு தெரியவேதெரியாது. அத்தோடு இவர்கள் இருவரும் ஊர் எல்லை உள்ள ஓர் மாந்தோப்பில் தான் சந்திப்பதும் காதல் புரிவதும். இப்படியான இவர்களின் காதல் இப்படியான சிட்டுவேசனில் தான் இருக்திருக்கும் அல்லவா?

இப்படியாக ஒரு நாள் நேரம் பத்து மணியை நோக்கி நேரம் நகர்ந்து கொண்டிருக்க, கமலாவின் அயல்வீட்டு நண்பி நிர்மலா கமலாவை திடீர் என்று கூப்பிட்டு ரமேஷ்சை இன்று அதிகாலை கடத்திக்கொண்டு யாரோ நம்ம ஊர் சவக்காலைக்கு அருகில் உள்ள பெரிய ஆலமரத்திற்கு கீழே சுட்டுவிட்டார்களாமே? நீ அறியவில்லையா என்று அவள் பதட்டத்தோடு வினாவிய போது அவளே மூச்சு போச்சு இல்லாமல் இடி விழுந்தது போல் ஒடிந்துபோய் அவ்விடத்தை விட்டு அகன்று சிறிது நேரத்தின் பின்னர் வீட்டினருக்கு தெரியாமல் அந்த ஆலமரத்தை நோக்கி ஒடிப் போகும் போது ரமேஷ்யாக இருக்க கூடாது நினைத்த படி ஒடினாள். ஆனால் என்ன அங்கே பார்த்தால் அது ரமேஷ் தான். உடனே அவளே அவள் தன்னிலை, மறந்து ரமேஷ்சை தன் மடியில் வைத்து தனது அவனின் பிரிவை தாங்காமல் தொண்டை தண்ணீர் வற்றுமளவு அழுகையால் அவனை நனைத்தாள்........ அதன் பின்னர் அவளுடைய வீட்டினருக்கும் மற்றும் ஊர் மக்களுக்கும் இவர்களுடைய காதல் அம்பலமாகியது. ரமேஷ்சின் மரணத்தின் பின்னர் கமலாவின் வாழ்கையோ நிலை தடுமாறிய ஓடம் போல் ஆகியதோடு யாரிடமும் பெரிதாக கதைக்காமலும் பித்துப்பிடித்தது போல் வாழ்கையை கடத்தினாள். இவளுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்த போதும் அதை உதறிவிட்டு, நான் வாழந்தால் ரமேஷ்யுடன் தான் வாழ்வேன் என்று இருந்தேன், அவனே இப்ப இல்லை. இதனால் திருமண சம்பந்தமே வேண்டாம் என உறுதிபடக் கூறிய போதும் இவளுக்கு ஒரு தங்கையும் தம்பியும் இருந்தனர். அத்தோடு இவளுடைய தங்கைக்கு திருமண வயது எட்ட கமலாக்கு திருமணம் செய்ய வேண்டி கட்டாயத்தில், பெற்றொர் வலுக்கட்டாயமாக அயல் ஊர் மாப்பிள்ளைக்கு திருமணத்தை முடித்து வைக்கின்றனர் மாப்பிள்ளையோ ஆசிரியர் தொழில்.அவர் மனைவியை அன்போடு நேசித்தார். எது எப்படியோ அவள் கணவரோடு குடும்ப வாழ்கையில் அதிகம் அக்கறை காட்டவில்லை. இப்படியான நிலையில் இவர்களுடைய மனநிலை இப்படியாக தான் இருந்திருக்க வேண்டும். 
 
 
இப்படியான நிலையில் அவளின் மனநிலையை உணர்ந்த கணவரோ அவளிடம் என்ன பிரச்சனை என்று வினாவிய போதும் அவளின் வாயால் எந்த பதில்களை அவனால் பெற முடியவில்லை. இதனால் கோபம் அடைந்த அவன் அல்லாவிடின் என்னை உனக்கு பிடிக்கவில்லையா? என்ற போது தான் அவள் அப்படி எதுவும் இல்லை என்று மட்டும் கூறினாள். அத்தோடு அவளால் இதைமட்டும்தான் கூறமுடிந்தது. இப்படியான நிலையில் சில மாதங்களின் பின்னர் கமலாவின் பள்ளி நண்பி மூலம் மனைவியின் காதல் விடயத்தை அவன் அறிந்து கதிகலங்கிபோனான். மட்டுமல்லாது கமலாவும் அவளுடைய பெற்றோரும் தன்னை ஏமாற்றிவிட்டனர் என்று நினைத்து அவளிடம் தாறுமாறகச் சண்டை போட்டு குடும்பநிலையிருந்து பிரிந்து போனான். இதன் பின்னர் கமலா தன் பெற்றோருடன் வந்து சேர்ந்தோடு சிறு காலத்தின் பின் பெற்றோரும் அவளை கணவருடன் சேர்ந்து வாழும் படி வற்புறுத்தியதோடு அவளை வெறுக்கவும் தொடங்கினார்கள். மேலும் தன் கணவருக்கு வேறுயோரு பெண்னோடு திருமண ஏற்பாடு பற்றியும் அறிந்தாள். இதன் போது தன் வாழ்கையை சிந்திக்கும் போது தன்னுடைய கணவருக்கு ஏதோ துரோகம் செய்தது போல் உணர்வே மேலிட்டது. மீண்டும் தன்னுடைய கணவருடன் சேர்ந்து வாழ ஆசைகளும் மற்றும் கணவரின் நினைவுளும் எழுந்து அவளை புதுபிக்க தன் கணவரின் அன்புக்கு அவள் காதல் வயப்படுகிறாள். இப்படியான நிலையில் இவளின் மனநிலை இப்படியாக தான் இருந்திருக்கும்.

இந்த நிலையில் அவள் தன்னுடைய பெற்றோரிடம் அவளுடைய நிலையை சொல்ல அவளின் பெற்றோரோ இவர்கள் இருவரையும் ஒருவாறு சேர்த்து வைக்கின்றனர். இதன் பின்னர் கமலா தன்னுடைய காதலின் பழைய நினைவுகளை உடைத்தெறிந்து தன்னுடைய அன்பையும் முழுமையாக வெளிப்படுத்தினாள். பிறகு என்ன இருவரும் தங்களுடைய குடும்ப வாழ்கையை மகிழ்ச்சியுடன் ஆரம்பித்தார்கள். இவ்வாறகாக சில ஆண்டுகள் கழிந்த பின்னர் அவள் இரு குழந்தைகளுக்கு தாயானாள். மூத்தது ஆண் குழந்தை இரண்டாவது பெண் குழந்தை. ஆண் குழந்தைக்கு ரமேசின் பெயரை  வைக்க தவறவில்லை கமலா. இப்படியான இவள் குடும்ப வாழ்கையில் பிள்ளைகளோடு இப்படியான மனநிலையில்தான் இருந்திருப்பாள்.

எது எப்படியோ நம்மவர்கள் சும்மாவா சொன்னர்கள் ''காதல் என்பது காலத்தால் அழியாது'' என்று. கமலா வெளியில் செல்லும் போது அவள் படித்த பாடசாலை காணும் போது ரமேஷ்யுடைய காதலும் காதலித்த நாட்களும் அவளின் மனதை ஆக்கிரமிக்க தவறுவதில்லை.

ஈழம் என்றவுடன் எல்லோருக்கும் யுத்தமும் அதன் அகதிகளும் தான் ஞாபகம் வரும்.ஆனால் வலிமையான காதல்களும் அரங்கேறியும் அரங்கேறமாலும் உள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

என் அன்புக்குரிய தமிழ் வாசர்களுக்கு பல்சுவைப்பதிவுகள் ஊடாக

4 comments:

Unknown said...

தரமான கதைக்களம்.அழகான முறையில் கதையை நகர்த்திச் சென்றுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

Unknown said...

vaalthukkal nanapaa

விஜயகுமார் ஐங்கரன் said...

@malgudiஉங்களின் ஆதரவு மற்றும் கருத்துக்கு நன்றி

விஜயகுமார் ஐங்கரன் said...

@A.சிவசங்கர் நன்றி!

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...