Monday, January 3, 2011

தமிழ் பாடல்கள் வளர்க!

என் அன்புக்குரிய வலைப்பதிவு நண்பர்களுக்கு மலர்ந்துள்ள புத்தாண்டு நல்லதாய் அமையவேண்டுமென்றும் அத்தோடு பிந்திய புத்தாண்டு நல்வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்.மேலும் இந்த இனிய புத்தாண்டில் இனிமையானதொரு பதிவுடன் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தபோது தான் ஞாபகம் வந்தது நம்ம இளையராஜா சார் தான்.அது வேற ஒன்றுமில்லை சார் அவர் இசை அமைக்கும் படங்களில் ஆரம்பத்திலேயே அவர் பாடும் டைட்டில் சோங் (Title Song) பொதுவாக இருக்கும் அதனால் என்னவோ என்னுடைய வலைப்பதிவும் தமிழ்ப்பாடல்கள்  எனும் தலைப்பிலான கவிதையுடன் புத்தாண்டில் ஆரம்பிக்கின்றது.
 

தமிழ்ப்பாடல்கள்
 
பண்ணிசை பலராகம் பல பாவம் -தமிழில் 
பாடலுக்கு ஏற்ப சுருதி தாளம்.... 
தானாக லயம் சேர்க்கும் ஏழிஸ்வரம்
 தமிழான பாடலுக்கு இவை ரசம்
 யாராக இருந்தலும் நயமாக வருடிச் செல்லும் பேரானந்த தமிழ்ப்பாடல்கள் - இவை 
பிரியம் காட்டும் பழைய பாடல்கள்
 மனப் பாரம் களைய வைத்து..... 
மனிததத்துவத்தை உணர்த்தி நிற்கும் மணம் நிறைந்த தமிழ்ப்பாடல்கள் 
மனதை ஆற்றுப்படுத்தும் தத்துவப் பாடல்கள்
 மெல்லிசை பாடலிலும் சுவை இருக்கு இது – மேலைத்தேச ஒலியுடன் புது வனப்பு
 துள்ளிசைத் தமிழில் ஒரு துடிப்பு துடிப்பான பாடல் என்றால் பலர் ரசிப்பு 
எல்லாரும் இசை என்றால் ஒரு லயிப்பு 
இறை கூட இதனில் ஏன் ஈர்ப்பு.... 
சொல்லாலே மணம் வீசும் தமிழ் மாலை 
சுவை சொட்ட உணர்ந்து கேட்டால் சோர்வு இல்லை.... 
 
நன்றிகள்............

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...