Thursday, December 30, 2010

மனித இனத்தை சீரழித்து கொண்டிருக்கும் மனநோய்கள்

என்ன இப்படியும் ஒரு தலைப்பா என்று யோசிக்கிறீர்களா? அப்படியொன்றும் புதிது இல்லை நீங்கள் ஒவரா யோசிக்க வேண்டாம். அப்படி வேற ஒன்றுமில்லை.நான் இந்த பதிவில மனநோயாளிகள் பற்றி சில கருத்துகனை என் வலைப்பதிவு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.நான் ஒவ்வொரு பதிவும் பிரசுரித்த பின்னர் மனநோயாளிகள் பற்றி பதிவு ஒன்று எழுத வேண்டும் எழுத வேண்டும் என்று என் மனம் ஒரு விம்பத்தை உருவாக்கியது.எது எப்படியோ இப்ப தான் நேரம் வந்துள்ளது போல.இதனால்இந்த பதிவில் இவர்கள் பற்றிய பதிவை பிரசுரிக்கிறேன் நண்பர்களே.நம்ம இடத்தில் இப்பொழுது கடும் அடை மழை அது வேற நம்மை மிகவும் கஸ்டப்படுத்துகின்றது சரி சரி உங்களுடைய மையின்ட்வொய்ஸ் கேட்கிறது.நான் விரைவாக கதையை ஆரம்பிக்கிறேங்க. அதுவும் முதலில் நம்ம ஏரியாவில் இருக்கும் ஒரு மனநோயாளி பற்றிய கதையை சொல்லுகிறேன்.


நாம் இந்த மனநோயாளிகள் பற்றி சினிமாவில் சேது, ஆளவந்தான், காதல், நந்தாலாலா போன்ற படங்களை வைத்து மனநோயாளிகளின் தன்மையை அறியலாம். ஆனால் அது சினிமா நிஜம் ஒன்று இருக்கிறது அல்லவா! இப்ப நம் நிஜத்தை பார்ப்போம் சார். நீங்களும் மனநோயாளிகளை பார்த்தும் அவர்களை பற்றி அறிந்தும் இருப்பீங்க .அதுபோல நான் பார்த்தையும் அறிந்ததையும் சொல்கிறேன்.


நான் வசிக்கும் இடம் இயற்கைகள் நிறைந்த இடமாகும்.அந்த வகையில் நான் பிறந்தது முதல் புத்தி தெரிந்த நாள் முதல் ஒரு நபர் பெரிய தாடியும் அதிகம் முடி வளர்ந்த நிலையில் என் வீட்டுமுற்றத்திற்கு அடிக்கடி வருவார். அத்தோடு நான் மைதானத்திற்கு விளையாட போகும் போதும் இவரை நம்ம ஏரியாவில் திரிவதை நான் அவதானித்தேன்.அப்போது நான் சிறிவன் ஆகையால் அவர் யார்? ஏன் இப்படி திரிகிறார் என்று எனக்குள் நானே யோசித்த போது ஏன் இந்த ஐயம் நம் அம்மாவிடம் கேட்டால் தெரிந்துவிடும் என்று அம்மாவிடம் அவரைப் பற்றி கேட்டேன். அவ்வளவுதான் அம்மா உடனே அவர் மூளை சரியில்லாதவறேடா என்றார் நானும் விட்டுவைக்கவில்லை ஏன் அம்மா அவருக்கு என்ன நடந்தது? என்று கேள்விகளை அம்புகளாக தொடுத்தேன். அம்மாவோ அவரின் பிளாஸ்பேக்கை எடுத்துவிட்டார். அவரடா பணக்காரப்போடியார்(போடியார்-நம்ம ஏரியாவில் நிறைய வயல் வைத்திருப்பார்களை பேடியார் என்று சொல்லுவார்கள்) வீட்டில் வளர்ப்பு மகனாக வளர்ந்தவர் அத்தோடு போடியார் அவரை நன்றாக வளர்த்தவர் மட்டுமல்லாது போடியாருக்கு பிள்ளைகளும் உள்ளனர் என்றும் கூறிய அம்மா அவரையும் போடியார் தன் பிள்ளைகளைப் போல் வளர்தார் என்றார்.பின்னர் ஒரு நாள் திடீரென போடியாரின் மகனின் ரெக்டரை(உழவு இயந்திரத்தை) இவர் விளையாட்டாக ஒடும் போது ரெக்டர் திடீர் என்று மரத்தில் மோத ஆத்திரமடைந்த போடியாரின் மகன் அவரை உலக்கையால் தலையில் அடித்தாரம். இது சங்கதியடா இதன் பின்னரே அவருக்கு இப்படி ஆயிட்டு என்றார் அம்மா உருக்கத்துடன்.
இதை கேட்ட பிறகு தான் மனித வாழ்கையில் இப்படியொல்லாம் நடக்குமா? என்று சிந்தித்தேன். என்னவோ என் மனதை இந்த விடயம் மிகவும் ஆழமாக பாதித்தது.அத்தோடு இந்த செயலை போடியாரின் மகனின் பிள்ளை செய்திருந்தால் போடியாரின் மகன் இந்த கொடிய தண்டனையை தன்னுடைய பிள்ளைக்கு கொடுத்திரிப்பாரா? என்னவோ இது அவர் பிள்ளையல்லவா! என்று என்னை நானே கேள்வியை கேட்டு என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன்.
மீண்டும் அம்மா சொல்கையில் இவரை ஒருவாறு ஆஸ்பத்திரியில்(வைத்தியசாலையில்) சேர்த்த பின்னர் இவருக்கு சுகமாகியதாம் .பின்னர் அதிக நாட்களுக்கு இது நீடிக்கவில்லையாம் பின்மீண்டும் இதே நிலை ஆரம்பித்துவிட்டது என்றார் அம்மா. அதன் பின் சிறிது காலத்தின் பின்னர்; போடியாரும் செத்துவிட்டராம் அதன்பிறகு போடியாரின் பிள்ளைகளும் இவரை கவனிப்பதில்லையாம். இவர் இப்ப நம்ம ஏரியாவில் சில வீடுகளுக்கு தான் செல்கிறார். அத்தோடு இவர் நல்ல மனநிலையில் இருக்கும் போது சில வீடுகளுக்கு சென்று சில வேலைகளை செய்து கொடுப்பார். அதுமட்டுமல்ல அவருக்கு இவர்கள் சிறிய காசு கொடுப்பதாகவும் கேள்வியுற்றேன். இன்னும் சில பேர் காசு கொடுப்பதே இல்லையாம்.அத்தோடு சில நேரங்களில் இவர் பசியால் இருக்கும் போது அம்மாவிடம் சோறு கேட்பார்.அம்மாவும் இவரின் நிலையை அறிந்து உணவளிப்பார்.இவர் பூரனை நாட்களில் சற்று வித்தியாசமான மனோநிலையில் தொடர்ச்சியான சிரிப்புடனும் மனிதர்களை கும்பிட்டவாறும் இங்கும் அங்கும் அலைந்து திரிவார் அதுமட்டுமல்லாது மழை காலங்களிலும் ஈரமான ஆடைகளுடன் திரிவார் ஆனால் நான் அறிய நம்ம ஏரியாவில யாருக்கும் இவர் தீங்கோ சேட்டைகளோ செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இவரை இப்ப குணப்படுத்தலாம் என்று எனக்கு தெரியவில்லை.ஆனால் இவரை ஆரம்பத்திலேயே குணப்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகின்றது. அத்தோடு அவர் போடியாரோடு இருக்கும் போது சில சொத்துக்களை போடியார் இவருக்கு கொடுப்பதாகவும் சொல்லியிருந்தாகவும்.பின்னர் பாவிமனிசன் சொத்துக்கனை எழுதமாலே செத்துவிட்டராம். அதன் பிறகு போடியாரின் பிள்ளைகளும் இந்த சொத்துக்களை எடுத்துக்கொண்டார்களாங்க. எது எப்படியோ கடவுள் இவரை மேலும் தண்டிக்கவில்லை.இவருக்கு என்று ஒரு அக்கா எமது அயல் ஊரில் இருக்கிறார்.இவர் பகலில் நம்ம ஏரியாவலும் இரவில் எப்படியோ அக்காவின் வீட்டுக்கு சென்றுவிடுவார்.இவர் முன்பு(பிரச்சனையான காலப்பகுதியில்) இரவில் திரிந்து பாதுகாப்பு படையினரிடமும் பிடிபட்டும் உள்ளார். இவரின் அக்காவும் பெரிய வசதியான நிலையில் இல்லை. அத்தோடு இவரின் அக்காவுக்கு புற்று நோய் என்றும் நான் கேள்விப்பட்டேன். புற்று நோய் என்றால் சொல்ல வேண்டுமா! ஏன் இந்த கடவுள் இவரை இப்படி சோதிக்கிறரோ என்று தெரியல.எது எப்படி இவரும் இவரின் அக்காவும் விரைவில் சுகமாக வேண்டுமென்று இறைவனை உருக்கமாக பிராத்திக்கிறேன்.சரி சரி மீண்டும் மையின்ட்வொய்ஸ் கேட்கிறது.இந்த கதையை இத்தோடு முடிக்கிறேன் சார்.

இது நம்ம பஞ்ச் பகுதி.....

சார் இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெரிசு. அதுவும் இந்த உலகில் நடக்கும் விடயங்களும் செயல்களும் பெரியதோடு மட்டுமல்லாது நம் இடங்களிலும் ஒவ்வொரு ஊர்,நாடுகளிலும் இந்த மனநோயாளிகளுக்கு குறைவே இல்லை.இவரின் கதை போல் பல்வேறு கதைகளில் பல மனநோயாளிகள் உலகில் உள்ளனார்.ஆனால் சில பேரே சரியான முறையில் சிகிச்சை பெறுகின்றனார். என்னை பொறுத்த வரையில் பல பேர் தகுந்த முறையில் சிகிச்சை இல்லாமல் வீதியோரங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் தமது அன்றாட வாழ்கையில் கொடிய கூரான கம்பியின் மீதும் சில விச பூச்சிகளின்(சில மனிதர்கள்) மத்தியிலும் வாழ்கின்றனர் என்றால் அது மிகையல்ல. அத்தோடு இவர்களின் கதையை மற்றும் வலியை வார்த்தையாக சொல்லியோ அல்லது இப்பதிவு மூலமாக எழுதியோ உணரமுடியாது என்றே சொல்லாம்.

( குறிப்பு-இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல)

மேலும் இந்த கதையைப் பற்றி உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு வோட்டும்(Voteம்) போடுங்கள் நண்பர்களே.

நன்றி!

Saturday, December 25, 2010

கொடிய சுனாமியே சென்றுவிடு!

நாளைய தினம் சுனாமி பேரலையின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் ஆகும். இந்த சுனாமி பேரலை என்றவுடன் அதன் கோர(இராட்ச்சத) அலைதான் முதலில் ஞாபகம் வரும். இந்த சுனாமியைப்பற்றி தெற்காசிய நாடுகளில் வசிக்கும் ஆறு வயது குழந்தை முதல் அறுபது வயது தாத்தா வரை எல்லோருக்கும் தெரியும்.அதிலும் இலங்கை மற்றும் இந்தியா நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு சுனாமி பற்றிய அனுபவம் என்பது வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்றாகும். இப்படி கொடிய சுனாமி பேரலையின் போது பிரிந்த எம் உறவுகளினதும் மற்றும் சகோதரங்களின் நினைவுகள் இன்றும் என்றும் எம் மத்தியில் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாத விடயமாகும். அத்தோடு இந்த சுனாமி பேரலை 2004.12.26 இதே போன்று ஒரு ஞாயிற்று கிழமையில்தான் வந்தது என்பது குறிப்பிடதக்கவிடயமாகும். இந்த சுனாமி பேரலையின் பின்னர் எனது தந்தை எம் சகோதரங்களின் நினைவாக ''சுனாமியே சென்றுவிடு'' எனும் கவிதையை புனைந்தார்.அந்த கவிதையை நான் எனது வலைப்பின்னலில் இப்பதிவில் பிரசுரிக்கிறேன்.அத்தோடு சுனாமி பேரலையின் போது பிரிந்த எம் உறவுகளினதும் மற்றும் சகோதரங்களின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.


சுனாமியே சென்றுவிடு


வந்த அலையில் கால் பதிந்து வாஞ்சையுடன் - அதை அள்ளி
வருடிச் செல்லும் நீரலையில் வன வளப்பாய் - எமை மறந்து
கால் பதித்த இடம் நீராய் கழுவிச் செல்லும் - நிலை பார்த்து
கடல் நண்டு மிடுக்காய் கணப் பொழுதில் - மறைத்தல் கண்டு
காலம் காலமாய் கருணையுடன் களிப்புத் தந்த கடற் பரப்பு-அன்று எமை
கணப் பொழுதில் கர்ச்சித்து காவு கொண்டதேனோ?
கலக்கம் தந்து கதியற்றவராக்கியதேன்?

கணவனவர் கடல் செல்லும் காரியத்திற்கு துணை நின்று
காரிகையாள் வழி சொல்வாள்
கைபிடித்தவன் முகம் பார்த்து கழிவிரக்கம் தனைக் காட்டி
கணவனவன் விடை சொல்வான்
கணவனவன் திரும்ப மட்டும் கடவுள்தனை கணம் மறவா
கரம் பிடித்தாள் தினம் செய்வாள்
அகல் விளக்கைச் சுடர் ஏற்றி ஆண்டவனை மனம் நினைத்து
அவள் குங்குமத்தை திலகமிடுவாள்
பால் பொழுதைக் கண்டவுடன் பார்த்த கரை திசை நோக்கி
பற்றாளனைப் பார்த்து நிற்க
பச்சாபம் இன்றி கடல் அலையே பற்றித்தான்
இழுத்துச் சென்றதேன்?


மணல் வீடு கட்டி கடற்கரையில் விளையாடினோம்
மனதார அலை தொட்டு நுரை அள்ளி நிறைவாகினோம்
கடலோரம் சென்று காதலாய் ஸ்பரித்தோம்
கால் பதித்த தடம் பார்த்து கரை நின்று களிப்படைந்தோம்
அலை பார்த்து அச்சமின்றி ஆழ் கடலை வகை பார்த்தோம்
ஆதங்கம் மேலிட்டு ஆண்டவனுக்கு நன்றி சொன்னோம்
குறி பார்த்து சுடுவதாய் கொண்ட கோப மேலிட்டால்
வகை தொகை தெரியாம் வாரிச் சென்றதேன்?

வாழவைத்த கடற்பரப்பே எம் வாழ்வைத்தான் -அழித்ததேன்
ஆக மட்டும் உன்னை அண்டியிருந்த குடிப் பிறப்பை – அள்ளித்தான் சென்றதேன்?
பால் குடித்த பச்சிலங்களை ஏணையில் பற்றி இழுத்துச் செல்ல – பாவம்தான் ஏது செய்தது?
பரம் பொருளே உனை அறிய அறநெறிக்கு வந்த
அத்தனை உயிர்கள் பலியாகிப் போனதேன்?
நிலைத்த கடல் காவு வரலாற்றை நிலத்தில் - நிலைபெறச் செய்ததேன்?


காலப்பிரளயமோ கலியுக கடல் காவுகையோ?
ஊழிக் கூத்தோ உலகு அழவோ?
காலக் கர்ச்சிபோ கடல் சீற்றமோ
கழிவரக்கமற்ற நாதித் தாண்டவமோ?
பூமி நடுக்கமோ? பூகோளப் பிளவோ?
புதிரான கடல் அலைப் பிரவாகமே!
ஆதான அத்தனை அழிவுதனைக் செய்து முடித்த
அங்காரச் சுனாமியே அகன்று விடு
பூகோள நிலப்பரப்பில் நீ கொண்ட பொறாமைதனை
பொறுமையுடன் நிறுத்தி விடு.

நன்றி!

Monday, December 20, 2010

நாம் எதிர்பார்க்கும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி 2011நாம் எதிர்பார்க்கும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது.இந்த முறை ஆசியாவில் தான் நடைபெறுகின்றது என்பது உங்களுக்கு தெரிந்த விடயம். அதுமட்டுமல்ல இது இந்தியா இலங்கை பங்காளதேஷ ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது. உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப போட்டி பெப்வரி மாதம் 19 ஆம் திகதி டாக்காவில் ஆரம்பிக்கின்றது.அத்தோடு இப்படியாக 49 போட்டிகள் நடைபெற உள்ளது.மட்டுமல்லது இறுதி போட்டியின் மும்பாயில் நடைபெற இருக்கிறது.இனி என்ன உலக மக்களின் ஒரே எதிர்பார்ப்பு 2011ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணத்தை கைப்பற்றுவது யார்? என்ற கேள்வி தான். எது எப்படியோ உலக கிரிக்கெட் ரசிகர்களை இந்த உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் மகிழ்ச்சி படுத்தும் என்பதில் ஒரு துளியும் சந்தேகமில்லை. அதுவும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் நடைபெறுவதால் இது இந்தியா இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி படுத்துவதோடு இந்தியா இலங்கை பங்காளதேஷ ஆகிய நாடுகளில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் இப் போட்டிகளை நேரடியாக சென்று பார்க்கும் எதிர்பார்ப்புகளுடன் இருப்பார்கள் என்பது குறிப்பிடதக்கது.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 14 அணிகள் பங்குபற்றுகின்றன.அவை இரு பிரிவுகளாக(ஏ,வி) பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. கிழே இரு பிரிவுகளும்


Group A – Australia, Pakistan, New Zealand, Sri Lanka, Zimbabwe, Canada and Kenya.

Group B – India, South Africa, England, Bangladesh, West Indies, Netherlands and Ireland.


உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் கால அட்டவனை


Match

Date

Teams

Venue

1

19 Feb

India vs Bangladesh

Dhaka

2

20 Feb

New Zealand vs Kenya

Chennai

3

20 Feb

Sri Lanka vs Canada

Hambantota

4

21 Feb

Australia vs Zimbabwe

Ahmedabad

6

23 Feb

Pakistan vs Kenya

Hambantota

7

24 Feb

South Africa vs West Indies

New Delhi

8

25 Feb

Australia vs New Zealand

Nagpur

9

25 Feb

Bangladesh vs Ireland

Dhaka

10

26 Feb

Sri Lanka vs Pakistan

Colombo

11

27 Feb

India vs England

Kolkata

12

28 Feb

West Indies vs Netherlands

New Delhi

13

28 Feb

Zimbabwe vs Canada

Nagpur

14

1 Mar

Sri Lanka vs Kenya

Colombo

15

2 Mar

England vs Ireland

Bangalore

16

3 Mar

South Africa vs Netherlands

Mohali

17

3 Mar

Pakistan vs Canada

Colombo

18

4 Mar

New Zealand vs Zimbabwe

Ahmedabad

19

4 Mar

Bangladesh vs West Indies

Dhaka

20

5 Mar

Sri Lanka vs Australia

Colombo

21

6 Mar

India vs Ireland

Bangalore

22

6 Mar

England vs South Africa

Chennai

23

7 Mar

Kenya vs Canada

New Delhi

24

8 Mar

Pakistan vs New Zealand

Pallekelle

25

9 Mar

India vs Netherlands

New Delhi

26

10 Mar

Sri Lanka vs Zimbabwe

Pallekelle

27

11 Mar

West Indies vs Ireland

Mohali

28

11 Mar

Bangladesh vs England

Chittagong

29

12 Mar

India vs South Africa

Nagpur

30

13 Mar

New Zealand vs Canada

Mumbai

31

13 Mar

Australia vs Kenya

Bangalore

32

14 Mar

Pakistan vs Zimbabwe

Pallekelle

33

14 Mar

Bangladesh vs Netherlands

Chittagong

34

15 Mar

South Africa vs Ireland

Kolkata

35

16 Mar

Australia vs Canada

Bangalore

36

17 Mar

England vs West Indies

Chennai

37

18 Mar

Sri Lanka vs New Zealand

Mumbai

38

18 Mar

Ireland vs Netherlands

Kolkata

39

19 Mar

Australia vs Pakistan

Colombo

40

19 Mar

Bangladesh vs South Africa

Dhaka

41

20 Mar

Zimbabwe vs Kenya

Kolkata

42

20 Mar

India vs West Indies

Chennai

43

23 Mar

First Quarterfinal

Dhaka

44

24 Mar

Second Quarterfinal

Colombo

45

25 Mar

Third Quarterfinal

Dhaka

46

26 Mar

Fourth Quarterfinal

Ahmedabad

47

29 Mar

First Semifinal

Colombo

48

30 Mar

Second Semifinal

Mohali

49

02 Apr

FINAL

Mumbaiகிரிக்கெட்டின் இமய மலை

கிரிக்கெட் விளையாட்டின் இமய மலை என்றால் அது வேறு யாருமல்ல அது நம்ம சச்சின் டெண்டுல்கர் தான். அவரின் துடுப்பாட்டம் மற்றும் துடுப்பாட்ட பாணி என்பன உலக கிண்ண கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. நான் கிரிக்கெட் விளையாடும் போது அவரின் துடுப்பாட்ட பாணியில் விளையாட முயற்ச்சிப்பேன்.ஆனால் அவரை போல் விளையாட முடியமால் அவுட் ஆகிய சந்தர்பங்களும் உண்டு.அப்படி அவருடைய துடுப்பாட்ட பாணி அவருடையது.

Master Blaster எனும் சகலதுறை ஆட்டகாரனான சச்சின் டெண்டுல்கர் தற்பொழுது இருக்கும் கிரிக்கெட் விரர்களில் மிகவும் அனுபவமிக்க வீரர் ஆவார். இவரை கிரிக்கெட்டின் பிதாமகன் என்று கூட சொல்லாம். அத்தோடு இன்று டெஸ் கிரிக்கெட்டில் தனது 50 வது சதத்தை பூர்த்தி செய்து புதிய வரலாறு படைத்தார். மேலும் அவரை பற்றியும் அவருடைய சாதனையும் கீழே பார்க்கவும்.

சச்சின் டெண்டுல்கர்

Full name -:Sachin Ramesh Tendulkar
Born -: April 24, 1973, Bombay (now Mumbai), Maharashtra
Current age -: 37 years 216 days
Major teams -: India, Asia XI, Mumbai, Mumbai Indians, Yorkshire
Nickname -: Tendlya, Little Master
Batting style -: Right-hand bat
Bowling style -: Right-arm offbreak, Legbreak googly
Height -: 5 ft 5 in
Education -: Sharadashram Vidyamandir School

Batting and fielding averages


Mat

Inns

NO

Runs

HS

Ave

BF

SR

100

50

4s

6s

Ct

St

Tests

174

284

30

14366

248*

56.5550

59


61

106

0

ODIs

442

431

41

17598

200*

45.12

20401

86.26

46

93

1927

185

134

0

T20Is

1

1

0

10

10

10.00

12

83.33

0

0

2

0

1

0

First-class

277

436

46

23259

248*

59.6376

105174

0

List A

529

516

55

21150

200*

45.8757

111169

0

Twenty20

44

44

5

1516

89*

38.87

1171

129.46

0

11

201

21

19

0


Bowling averages


Mat

Inns

Balls

Runs

Wkts

BBI

BBM

Ave

Econ

SR

4w

5w

10

Tests

174

132

4018

2322

44

3/10

3/14

52.77

3.46

91.3

0

0

0

ODIs

442

267

8020

6817

154

5/32

5/32

44.26

5.10

52.0

4

2

0

T20Is

1

1

15

12

1

1/12

1/12

12.00

4.80

15.0

0

0

0

First-class

277


7383

4214

69

3/10


61.07

3.42

107.0


0

0

List A

529


10196

8445

201

5/32

5/32

42.01

4.96

50.7

4

2

0

Twenty20

44

8

93

123

2

1/12

1/12

61.50

7.93

46.5

0

0

0


Career statistics
Test debut

-:Pakistan v India at Karachi, Nov 15-20, 1989

Last Test

-:India v New Zealand at Nagpur, Nov 20-23, 2010

ODI debut

-:Pakistan v India at Gujranwala, Dec 18, 1989

Last ODI

-:India v South Africa at Gwalior, Feb 24, 2010

Only T20I

-:South Africa v India at Johannesburg, Dec 1, 2006

First-class debut

-:1988/89

Last First-class

-:India v New Zealand at Nagpur, Nov 20-23, 2010

List A debut

-:1989/90

Last List A

-:India v South Africa at Gwalior, Feb 24, 2010

Twenty20 debut

-:South Africa v India at Johannesburg, Dec 1, 2006

Last Twenty20

-:Mumbai Indians v Royal Challengers Bangalore at Durban, Sep 19, 2010

மேலும் இம்முறை உலக கிண்ணத்தை கைப்பற்றும் அணி எது என்பதை சொல்லுங்கள் நண்பர்களே!