Friday, January 28, 2011

மனித நேயம்!

பல்சுவைப்பதிவில் பல பல்சுவையான பதிவுகளில் கவிதையானது முக்கியமானதாகும். மேலும் நான் 09/12/2010ம் திகதி வெளியிட்ட ''கவிதைத் துளிகள்'' எனும் பதிவில் எனது தந்தை அரசாங்க திணைக்களத்தினால் நடைபெற்ற அரசாங்க திணைக்களத்தில் கடமையாற்றுவர்களுக்கான கவிதை போட்டியின் போது அகில இலங்கை ரீதியாக மூன்றாம் இடத்தை பெற்றவர் என்று குறிப்பிட்டு இருந்தேன். இப்பொழுது அந்த மனித நேயம் என்ற கவிதையை பிரசுரிக்கிறேன். மட்டுமல்லாது இது பெரிய தொகுப்பு ஆகையால் இரு பதிவுகளாக பிரசுரிக்கிறேன்.மனிதனை மனிதன் வதைத்து மரணித்ததைக் கண்டோம்
மரணிக்கும் தறுவாயில் அவனை வதைத்து மகிழ்ந்ததையும் கண்டோம்
மரணிப்பவன் வேண்டும் தண்ணீரை மறுத்ததையும் கண்டோம்
மனித மாண்பு மொத்தத்தில் மரணித்தையும் கண்டோம்.
சட்டம் சதி செய்த சரிதைகள் பல,
சந்தர்ப்பம் குற்றமாக்கிய கதைகள் உள,
உண்மையை பொய்யாக்கிய உரைகளும் உள,
ஒரு சார்பாய் பொய்ப்பக்கம் சார்ந்த தீர்ப்புகளும் உள,
உண்மையில் மனித நேயம் ஒடிந்து விட்டதா? – அன்றேல் ஒழிந்து விட்டதா?


தரையில் அமர்ந்த அந்தகன் அவன் - தன்
முன்னே சீலையை விரித்து....
தர்மம்,தர்மம் என வேண்ட....
தயவான்கள் பலரும் தர்மம், அளித் செல்ல....
தப்புக் குணம் கொண்ட ஒருவன்....
தர்மம், அளிப்பவன் போல் குனிந்து
அவன் தர்மத்தை தனதாக்கும் - காட்சி
தவறி விட்டதா, மனித நேயம்
இதற்கு தலை பறந்து விட்டதா?

அடித்து வதை காட்டி அழுத்தி அனல்காட்டி
உதைத்து உயிர் வதைத்து உள் நீரில் அவனை அமிழ்த்தி....
வதைத்து வாஞ்சையின்றி மிதித்து உரித்துத் தோலை
'ஓ' வெனும் அலறல் பார்த்து....
மகிழும் மனிதனும் உளான் - இவன் தன்
மனித மாண்பு எத்தகையது?தந்தையை வதைத்த தனயனும் உளான்
தாயை உமிழ்ந்த தயவற்றோனும் உளான்
தன்னையே வளர்த்துச் செல்லும் தன்வாளனும் உளான்
தனதாக்கி மற்றோரை தவிக்க விட்டவனும் உளான்
தப்பையே சதா செய்யும் தப்பாளனும் உளான்
தரணியில் மனித நேயத்தை தலை சாய்த்தவனும் உளான்.

அயல் வீட்டார் வளர்ச்சி அவனுக்கு அனலாக தகைக்கிறது
அவன் காட்டும் உயர்ச்சி அவனை அந்தரத்தில் உயர்த்துகிறது
ஆக மட்டும் அவன் உயர்வை அறுக்கவே பார்க்கிறான்
அர்த்த சாம நேரமின்றி அக மனதில் குமுறுகிறான்
வந்த சந்தர்ப்பம் பார்த்து நின்று வதைக்கவும் துணிகிறான்
வாஞ்சையின்றி மனித நேயத்தை வடுவாக்கி பணிகின்றான்.


கோல்லான் புலாலை மறுத்தானை என்றும்
எல்லா உயிரும் தொழும்
எல்லா அன்பே வயமான இவனை
இகமே ஏந்தி நிற்கும்
நல்லான் இவனென்றும் நடுவன அவனென்றும்
நானிலமே தலை பணியும்
உள்ளான் அவவென்றும் உயர்ந்தோன் அவனென்றும்
உலகம் உள்ளமட்டும் சொல்லி நிற்கும்.

வளர்த்த பசுவை வாஞ்சையுடன் தடவுவதும்
அதன் வளர்விற்கு உணவிட்டு வகை வகையாய் - பார்ப்பதும்
வேடிக்கை இதுவென்னு வீண்வாதம் புரியாதீர்!
வேகுமுன் நெருப்பில் - நாம் வேண்டும் மனித நேயம்
காட்டும் அவை கடமை பாசம் கருணை
செய்பவனுக்கு பலனைக்காட்டும்
ஈட்டும் இவை மனித சேயம் - எல்லாம்
சேர்ந்த மனித நேயம்.

பசித்தவன் பார்த்திருக்க பல்சுவை உணவருந்தி
பச்சாபப்படாமல் பார்த்து நிற்கும் கல் மனத்தான்
எக்காலும் உருப்படான் இது நியதி பொது வழக்கு
பொற்கால மனித நேயத்தை அவன் பொடியாக்கி வாழ்வதேனோ?

அன்பை வழக்காக்கி அக மனதில் நிலை நிறுத்தி
பண்பை செயலில் காட்டி பரிவை உயர்வாக்கி
உண்மை என்றும் பேசி ஒவ்வாமை மறுத்து நிற்கும்
தன்மை எவன் உளானோ தகைமை மனித நேயத்தான்.


நன்றி!

Monday, January 24, 2011

வலித்த இதயக் கீறல்கள்(ஈழத்துக் காதல் )

காலம் எண்பதுகளின் இறுதி

வழமை போல் கதிரவனும் தன்னுடைய கதிர்களை பரப்பும் போது புல் மேல் இருந்த பனிகளும் உருக ஆரம்பித்தது.அந்த வேளையில் கமலா தனது வாசலில் அவளுக்கு விருப்பமான கோலத்தை போட தொடங்கிய போது சு... சு... என்ற சத்தம் கேட்டது உடனே நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய வீட்டுக்கு அருகாமையிலுள்ள பனை மரத்திற்கு கீழ் தன்னுடைய ஆருயிர் காதலன் ரமேஷ் நிற்பதை கண்டு பட படக்க தொடங்கினாள். உடனே அவனை போ போ என்று மெதுவாக சமிஞ்சையால் காட்டினாலும் ,ஆனால் ரமேஷ் நின்ற இடத்தை விட்டு ஒரு இஞ்சும் அவன் நகரவில்லை.இதை பார்த்த கமலா 10 மணிக்கு வருகிறேன் என்று தனது கை விரல்கலால் சமிஞ்சையாக காட்டிய பின்னர் தான் அவன் அவ்விடத்தை விட்டு அகன்றான். இப்படி என்றால் இவர்களுக்கு படிப்பே இல்லையா என்று கேட்கிறீர்களா? அதை ஏன் கேட்கிறீர்கள்! அந்த காலத்தில் யுத்தம் பரந்து காணப்பட்டதால் இவர்களின் பெற்றோர் பாதுகாப்பு கருதி இவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை.இவர்களின் படிப்பு இடையே நின்றாலும் இவர்களின் பள்ளியில் தொடங்கிய காதல் தொடர்கிறது. இந்த காதல் இவர்களின் சில நண்பர்களுக்கு மட்டும்தான் தெரிமே தவிர ஏனையோருக்கு தெரியவேதெரியாது. அத்தோடு இவர்கள் இருவரும் ஊர் எல்லை உள்ள ஓர் மாந்தோப்பில் தான் சந்திப்பதும் காதல் புரிவதும். இப்படியான இவர்களின் காதல் இப்படியான சிட்டுவேசனில் தான் இருக்திருக்கும் அல்லவா?
பத்து மணியை நோக்கி நேரம் நகர்ந்து கொண்டிருக்க, கமலாவின் அயல்வீட்டு நண்பி நிர்மலா கமலாவை திடீர் என்று கூப்பிட்டு நம்ம ஊர் ரமேஷ்சை இன்று அதிகாலை கடத்திக்கொண்டு யாரோ நம்ம ஊர் சவக்காலைக்கு அருகில் உள்ள பெரிய ஆலமரத்திற்கு கீழே சுட்டுவிட்டார்களாமே? நீ அறியவில்லையா என்று அவள் வினாவிய போது அவளே மூச்சு போச்சு இல்லாமல் இடி விழுந்தது போல் ஒடிந்துபோய் அவ்விடத்தை விட்டு அகன்று சிறிது நேரத்தின் பின்னர் வீட்டினருக்கு தெரியாமல் அந்த ஆலமரத்தை நோக்கி ஒடிப் போகும் போது ரமேஷ்யாக இருக்க கூடாது நினைத்த படி ஒடினாள். ஆனால் என்ன அங்கே பார்த்தால் அது ரமேஷ் தான். உடனே அவளே அவள் தன்னிலை, மறந்து ரமேஷ்சை தன் மடியில் வைத்து தனது அவனின் பிரிவை தாங்காமல் ஒப்பாரி வைத்தாள். அதன் பின்னர் அவளுடைய வீட்டினருக்கும் மற்றும் ஊர் மக்களுக்கும் இவர்களுடைய காதல் அம்பலமாகியது. ரமேஷ்சின் மரணத்தின் பின்னர் கமலாவின் வாழ்கையோ நிலை தடுமாறிய ஓடம் போல் ஆகியதோடு யாரிடமும் பெரிதாக கதைக்காமலும் பித்துப்பிடித்தது போல் வாழ்கையை கடத்தினாள். இவளுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்த போதும் அதை உதறிவிட்டு, நான் வாழந்தால் ரமேஷ்யுடன் தான் வாழ்வேன் என்று இருந்தேன், அவனே இப்ப இல்லை. இதனால் திருமண சம்பந்தமே வேண்டாம் என உறுதிபடக் கூறிய போதும் இவளுக்கு ஒரு தங்கையும் தம்பியும் இருந்தனர். அத்தோடு இவளுடைய தங்கைக்கு திருமண வயது எட்ட கமலாக்கு திருமணம் செய்ய வேண்டி கட்டாயத்தில், பெற்றொர் வலுக்கட்டாயமாக அயல் ஊர் மாப்பிள்ளைக்கு திருமணத்தை முடித்து வைக்கின்றனர் மாப்பிள்ளையோ ஆசிரியர் தொழில்.அவர் மனைவியை அன்போடு நேசித்தார். எது எப்படியோ அவள் கணவரோடு குடும்ப வாழ்கையில் அதிகம் அக்கறை காட்டவில்லை. இப்படியான நிலையில் இவர்களுடைய மனநிலை இப்படியாக தான் இருந்திருக்க வேண்டும்.இப்படியான நிலையில் அவளின் மனநிலையை உணர்ந்த கணவரோ அவளிடம் என்ன பிரச்சனை என்று வினாவிய போதும் அவளின் வாயால் எந்த பதில்களை அவனால் பெற முடியவில்லை. இதனால் கோபம் அடைந்த அவன் அல்லாவிடின் என்னை உனக்கு பிடிக்கவில்லையா? என்ற போது தான் அவள் அப்படி எதுவும் இல்லை என்று மட்டும் கூறினாள். அத்தோடு அவளால் இதைமட்டும்தான் கூறமுடிந்தது. இப்படியான நிலையில் சில மாதங்களின் பின்னர் கமலாவின் பள்ளி நண்பி மூலம் மனைவியின் காதல் விடயத்தை அவன் அறிந்து கதிகலங்கிபோனான். மட்டுமல்லாது கமலாவும் அவளுடைய பெற்றோரும் தன்னை ஏமாற்றிவிட்டனர் என்று நினைத்து அவளிடம் தாறுமாறகச் சண்டை போட்டு குடும்பநிலையிருந்து பிரிந்து போனான். இதன் பின்னர் கமலா தன் பெற்றோருடன் வந்து சேர்ந்தோடு சிறு காலத்தின் பின் பெற்றோரும் அவளை கணவருடன் சேர்ந்து வாழும் படி வற்புறுத்தியதோடு அவளை வெறுக்கவும் தொடங்கினார்கள். மேலும் தன் கணவருக்கு வேறுயோரு பெண்னோடு திருமண ஏற்பாடு பற்றியும் அறிந்தாள். இதன் போது தன் வாழ்கையை சிந்திக்கும் போது தன்னுடைய கணவருக்கு ஏதோ துரோகம் செய்தது போல் உணர்வே மேலிட்டது. மீண்டும் தன்னுடைய கணவருடன் சேர்ந்து வாழ ஆசைகளும் மற்றும் கணவரின் நினைவுளும் எழுந்து அவளை புதுபிக்க தன் கணவரின் அன்புக்கு அவள் காதல் வயப்படுகிறாள். இப்படியான நிலையில் இவளின் மனநிலை இப்படியாக தான் இருந்திருக்கும்.இந்த நிலையில் அவள் தன்னுடைய பெற்றோரிடம் அவளுடைய நிலையை சொல்ல அவளின் பெற்றோரோ இவர்கள் இருவரையும் ஒருவாறு சேர்த்து வைக்கின்றனர். இதன் பின்னர் கமலா தன்னுடைய காதலின் பழைய நினைவுகளை உடைத்தெறிந்து தன்னுடைய அன்பையும் முழுமையாக வெளிப்படுத்தினாள். பிறகு என்ன இருவரும் தங்களுடைய குடும்ப வாழ்கையை மகிழ்ச்சியுடன் ஆரம்பித்தார்கள். இவ்வாறகாக சில ஆண்டுகள் கழிந்த பின்னர் அவள் இரு குழந்தைகளுக்கு தாயானாள். மூத்தது ஆண் குழந்தை இரண்டாவது பெண் குழந்தை. இப்படியான இவள் குடும்ப வாழ்கையில் பிள்ளைகளோடு இப்படியான மனநிலையில்தான் இருந்திருப்பாள்.எது எப்படியோ நம்மவர்கள் சும்மாவா சொன்னர்கள் ''காதல் என்பது காலத்தால் அழியாது'' என்று. கமலா வெளியில் செல்லும் போது அவள் படித்த பாடசாலை காணும் போது ரமேஷ்யுடைய காதலும் காதலித்த நாட்களும் அவளின் மனதை ஆக்கிரமிக்க தவறுவதில்லை.


ஈழம் என்றவுடன் எல்லோருக்கும் யுத்தமும் அதன் அகதிகளும் தான் ஞாபகம் வரும்.ஆனால் வலிமையான காதல்களும் அரங்கேறியும் அரங்கேறமாலும் உள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

என் அன்புக்குரிய தமிழ் வாசர்களுக்கு பல்சுவைப்பதிவுகள் ஊடாக


Monday, January 3, 2011

தமிழ் பாடல்கள் வளர்க!

என் அன்புக்குரிய வலைப்பதிவு நண்பர்களுக்கு மலர்ந்துள்ள புத்தாண்டு நல்லதாய் அமையவேண்டுமென்றும் அத்தோடு பிந்திய புத்தாண்டு நல்வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்.மேலும் இந்த இனிய புத்தாண்டில் இனிமையானதொரு பதிவுடன் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தபோது தான் ஞாபகம் வந்தது நம்ம இளையராஜா சார் தான்.அது வேற ஒன்றுமில்லை சார் அவர் இசை அமைக்கும் படங்களில் ஆரம்பத்திலேயே அவர் பாடும் டைட்டில் சோங் (Title Song) பொதுவாக இருக்கும் அதனால் என்னவோ என்னுடைய வலைப்பதிவும் பாட்டு எனும் தலைப்பிலான கவிதையுடன் புத்தாண்டில் ஆரம்பிக்கின்றது.

பாட்டு

பண்ணிசை பலராகம் பல பாவம் -தமிழில்
பாடலுக்கு ஏற்ப சுருதி தாளம்....
தானாக லயம் சேர்க்கும் ஏழிஸ்வரம்
தமிழான பாடலுக்கு இவை ரசம்
யாராக இருந்தலும் நயமாக வருடிச் செல்லும்
பேரானந்த தமிழ்ப்பாடல்கள் - இவை
பிரியம் காட்டும் பழைய பாடல்கள்
மனப் பாரம் களைய வைத்து.....
மனிததத்துவத்தை உணர்த்தி நிற்கும்
மணம் நிறைந்த தமிழ்ப்பாடல்கள்
மனதை ஆற்றுப்படுத்தும் தத்துவப் பாடல்கள்
மெல்லிசை பாடலிலும் சுவை இருக்கு
இது – மேலைத்தேச ஒலியுடன் புது வனப்பு
துள்ளிசைத் தமிழில் ஒரு துடிப்பு
துடிப்பான பாடல் என்றால் பலர் ரசிப்பு
எல்லாரும் இசை என்றால் ஒரு லயிப்பு
இறை கூட இதனில் ஏன் ஈர்ப்பு....
சொல்லாலே மணம் வீசும் தமிழ் மாலை
சுவை சொட்ட உணர்ந்து கேட்டால் சோர்வு இல்லை....

நன்றி!
சும்மா தான்.