Wednesday, April 27, 2011

பகாவன் ஸ்ரீ சத்தி சாயி பாபா மஹா சமாதி அடைந்தமைக்கு இரங்கல் பா!


வானுறைந்த தெய்வமொன்று வையத்துள் வந்தது....
வாழ்வாங்கு வாழ்ந்து காட்டி வானுறையச் சென்றதோ....
தானிளைத்து தன்ளாடியும் தார்மீகம் செய்தது....
தயவுடன் தாட்சண்ணியத்தை தாராளமாகத் தந்தது
யார் மதமும் ஓர் மதமே யாமெல்லாம் ஓரினமே....
பாரறிய உலகிற்கு பன்மைத்துவ வாதம் தந்த
யாமறிந்த புனிதர் இவர் யாவர்க்கும் பொது உடையார்....
போய் அறிந்த சேதி கேட்டு புவனமே கலங்குது இன்று!


புனிதர் எனப் போற்றப்பட்டார் போய்விட்டார்.....
போக்கிஸமாய் இருந்தவர் இன்று சென்று விட்டார்
மனிதர் என மதிக்கப்பட்டார் மறைந்து விட்டார்....
மகானாக வாழ்ந்தவர் மாற்றம் கொண்டார்
இனிதே என இயம்பியவர் எம உலகம் கண்டார்....
இயன்றவரை இறை உள்ளம் காட்டி இறைபதம் சேர்ந்தார்
நமதே என்று சொன்னவர் நமை விட்டகன்றார்
நலமிழந்து உலகம் இன்று நாதியற்றுத் தவிக்கிறது....


பிறப்பு : - 23-11-1926
மாகசமாதி : - 24-04-2011
பிறந்த இடம்: - புட்டபர்த்தி
இறந்த இடம்: - புட்டபர்த்தி
இயற்பெயர் : - சத்தியநாராயணராஜீ
தத்துவம் : - அத்வைதம்
குரு : - எவருமில்லை


அன்பாலும் தன்னிகரமற்ற சேவையாலும் உலகம் முழுவதையும் தன்வசப்படுத்திய பகாவன் ஸ்ரீ சத்தி சாயி பாபா மஹா சமாதி அடைந்தமைக்கு அவருடையபக்தர்கள் மற்றும் சீடர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை பல்சுவைப்பதிவு ஊடாக தெரிவித்துக்கொள்கிறேன்.

பகாவன் ஸ்ரீ சத்தி சாயி பாபாவின் சில பொன் மொழிகள்....

  • அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள்.உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.
  • மனதை தூய்மையாக முழுமையாக வைத்துக்கொள். வெற்றிபெறுவாய்
  • சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.தயாராக இருக்கும் மொட்டுகளதான்; மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
  • உண்மை, தர்மம், கருணை ,மன்னிக்கும் மனப்பான்மை , இவற்றை பெற வேண்டுமானால் ஓவ்வொரு தனி மனிதனும் தனக்குள் அவற்றை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.
பகாவன் ஸ்ரீ சத்தி சாயி பாபாவின் ஆன்மீகத் தத்துவம்....
  • கடவுள் ஒருவர்தான்.அவர் தான் அனைத்து மதங்களின் காரணகர்த்தா.
  • என்னிடம் வர மதம் தேவையில்லை.
  • உங்களின் மதங்களிலேயே இருந்தபடி என்னைப் பின்பற்றுங்கள் மற்றும் மக்களுக்கு தொண்டு செய்யுங்கள்.
  • உங்கள் சேவைதான்,மரணத்துக்குப் பிறகும் உங்களை உன்னத இடத்தில் வைக்கும் என்பதை நம்புங்கள்.

நான் இறந்தாலும்,மறுபிறப்பு எடுப்பேன் என்பது பகாவன் ஸ்ரீ சத்தி சாயி பாபாவின் முந்தைய அறிவிப்பு ஆகும். இதனால் அவருடைய பக்தர்கள் மற்றும் சீடர்களின் ஒரே எதிர்பார்ப்பாய் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது என்றால் அது மிகையான விடயமல்ல.

நன்றி!




4 comments:

Anonymous said...

முட்டாள் லூசுகளா திருந்தவே மாட்டீங்களா......எவ்வளவு ஆதாரம் காட்டினாலும்.....

விஜயகுமார் ஐங்கரன் said...

@onelankaஇது எனது தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் உங்களின் கருத்திலிருந்து யார் முட்டாள்,லூசு என்று விளங்கிகொள்ள முடியும்....

Vicky said...

useless article on dead man. I don't know that why people are still believing a died man as God. fools. think and go forward without foolish things.

குதூகலக்குருவி said...

சாய் பாபா ஒரு கடவுள் அல்லர். இருந்தபோதும் அவர் செய்த சமூக சேவை அளப்பரியது. இலங்கையில் இருந்து பல குழந்தைகள் முற்றிலும் இலவசமாக இதய சத்திர சிகிச்சைகள், சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகள் போன்றவற்றை சாய் மருத்துவமனையில் முடித்துக்கொண்டு வந்துள்ளார்கள். மற்ற கள்ளச்சாமிகள் போலல்லாது சமூக சேவைக்காக தன்னை அர்பணித்துக்கொண்ட ஒரு மனிதனின் சேவை பாராட்டப்படவேண்டியது...

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...