Thursday, August 4, 2011

தூக்காணங் குருவி சொல்ல மறந்த கதை (அது ஒரு காலம் அழகியதொரு காலம்....)

என்னடா இது தூக்கானம் குருவி சொல்ல மறந்த கதையா? அப்படி என்ன தான் சொல்ல மறந்த கதை என்று தானே யோசிக்கிறீர்கள். அப்படி ஒன்றும் பெரியதான கதையல்ல. நீண்ட நாளாக பதிவு எழுதவில்லை என்று யோசிக்கும் போது நீண்ட நாளாக எழுதவேண்டும் என்று நினைத்த போது மனதில் கரை படிந்த நிலையில் கதை ஒன்று ஞாபகம் வந்தது. நண்பர்களே! அதுவும் தலைப்பிலே பாருங்கள் அது ஒரு காலம் அழகியதொரு காலம் இன்னும் கதைப்பற்றி விளங்கவில்லையா? இப்பயெல்லாம் நமது வாழ்கை ஆற்று நீர் போல நமது வாழ்கை ஓடுகிறது. இதில் மகிழ்ச்சியோ ரசிப்போ என்று பெரிதாக இல்லாவிடினும் ஏதோ பரவாயில்லை(Not Bad) என்று தான் சொல்ல முடிகிறது. அதுவும் எனக்கு அது ஒரு காலம் அழகியதொரு காலம் முதலில் ஞாபகம் வருவது நான் சின்ன வயதாக இருக்கும் போது வயலுக்கு செல்வது தான். மேலும் நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு சின்ன வயதாக இருக்கும் போது வயலுக்கு அப்பா கூட்டி செல்வார். அதுவும் நாங்கள் அப்பொழுதெல்லாம் வசதி வாய்ப்பு பெரிதாக இல்லை, அதனால் அப்பா என்னை சைக்கிளில் தான் கூட்டி செல்வார். அப்படி வயலுக்கு செல்லும் போது என்னை கூட்டி செல்வாரா,இல்லை? என்று மனதுக்குள் ஏங்குவேன்.அதுவும் அப்பாவிடவும் கேட்கவும் பயம் வேற. அப்படி அப்பா அழைத்தால் ஆகா என்ன சந்தோசம். 


இப்படி நான் சைக்கிளில் செல்லும் போது இயற்கை ரசித்தவாறு செல்வேன். அதுவும் அப்பா தானே சைக்கிள் ஒடுவது அதனால் எனக்கு வலி தெரியாது. அதிலும் என்னவென்றால் நாங்கள் வதியும் இடத்திலிருந்து வயலோ பல மைல் தூரம் அது வேற. இப்படி வயலுக்கு சென்ற பின் இறங்கினால் நமது கால் ஒன்று இல்லாது போல் இருக்கும் ஏன் என்றால் காலே விறைத்து போய் இருக்கும் அப்படி பல மைல் பிரயாணம். அதுவும் வயலில் உரம் எறியும், காலம் சூடு அடிப்பு(அறுவடைக் காலம்) என காலங்கள் வந்து போகும். உரம் எறியும் காலம் வந்தால் குளத்திலிருந்து அதிக நீர் வரும் காலம் ஆகையால் வயலில் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அத்தோடு வயலின் வரம்புகளில் பொன்னாங்கானி கீரை அதிகமாக வளர்ந்து காணப்படும். இப்படியாக இருக்கையில் நாங்கள் வயலுக்கு சென்றால் வயல் காவலன் அருகில் நீர் குட்டையில் சென்று விறால் மீன்களை பிடித்து குழம்பு வைத்தும் பொன்னாங்கானி கீரை சொதி வைப்பான். அடடா! அப்படி ஒரு சுவையான விருந்தாக இருக்கும். இப்படியாக சூடு அடிப்பு காலமும் வந்து விடும் இந்த காலத்தில் விவசாயிகளின் முகத்தில் ஒரு வித சந்தோசம் இருக்கும். ஏன் என்றால் அறுவடை வருகிறது அல்லவா! இந்த காலத்தில் வயல்களில் எல்லா புறங்களிலும் சூடுகளாக காணப்படும். இது பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மேலும் இக் காலத்தில் தூக்காணங் குருவி கூடுகளும் மரங்களில் அதிகமாக இருக்கும். ஆக நாங்களும் சூடு அடிப்பு காலத்தில் மாலை நேரத்தில் தான் வயலுக்கு செல்வோம். அதுவும் மாலை நேர சூரியனும் மறையும், நேரம் இப்படி நிலையில் இயற்கையோ பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இந்த நிலையில் சூரியன் மறையும் போது வயல்களில் சூடு அடிப்பை தொடங்குவார்கள்.இப்படியாக இரவு விடியலை நோக்கி சென்றுகொண்டிருக்கும். அத்தோடு நாலா புறமும் வயல்களில் சூடு அடிப்பு நடைபெறுவதோடு, சூடுகளை சுற்றி ரெக்டர் சுற்றும் போது சத்தமும் கூடி குறைந்தவாறு இருக்கும். இந்த நிலையில் அயல் வயல்களில் உள்ள விவசாயிகள் தமது நாட்டுபுற பாடல்களை தாளத்துடன் பாடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இது போதாதுதென்று தூக்காணங் குருவிகளும் இரவு நேரத்தில் தமது கூடுகளில் வெளிச்சத்துக்காக மின்மினி பூச்சியை வைத்துக்கொள்ளும்,அத்தோடு ஆக்காண்டியும் கத்திவாறு இருக்கும். இப்படி இருக்கையில் எல்லா சூடு அடிப்பு இடங்களிலும் பெற்றோல்மேக்ஸ் வைத்து சூடுக் களத்தையே ஒளிமயமாக்குவர்கள். இதை எல்லாம் பார்ககும் போது மனமோ ஆனந்தத்தின் உச்சிக்கே சென்று விடும்.


இப்படியாக பத்து பதினொரு மணியளவில் பனி விழ ஆரம்பிக்க தொடங்குவதொடு நிலாவும் தனது வெளிச்சத்தையும் குளிர்மையும் வெளிவிட்டவாறு இருக்கும். இதையெல்லாம் பார்க்கும் போது தமது மனமோ குழப்பம் இல்லாமல் மிகவும் அமைதியாக இருக்கும். இப்படியாக இதை எல்லாம் வாடியில்(தங்கும் இடம்) வெளியில் ரசித்தவாறு அப்படியே உறங்குவேன். இதன் பின்னர் காலையில் எழுந்த பின்னர் சூடு அடிப்பு இடத்துக்கு சென்றால் அங்கே சூடு அடிப்பு முடிந்து நெல்லை தூற்றிக்கொண்டிருப்பார்கள். இப்படி இருக்கையில் அப்பம் வற்கும் சிறுவர்கள் அப்பம் அப்பம் கத்தியவாறு சூடு அடிக்கும் இடத்துக்கு வருவார்கள். பிறகு என்ன நாங்கள் சுடச்சுட அப்பம் சாப்பிடுவோம். பின்னர் ஒருவாறு சூடு அடிப்பு முடியும். அதன் பின்னர் வீடு வந்து விடுவேன். மேலும் வீடு வந்த பின்னரும் எப்ப அப்பா திரும்ப கூட்டி போவார் என்று தான் யோசிப்போன். இப்படி உண்மையில் அது ஒரு காலம் அழகியதொரு காலம் தான். இப்ப வயலுக்கு செல்வதற்கு பெரிதாக விருப்பமும் குறைவு அதுமட்டுமல்லாது தற்பொழுது எல்லாம் சூடு அடிப்பு இல்லை. இப்பொழுது அறுவடைக்கு அறுவடை(வெட்டு மெசின்) இயந்திரம் பாவிக்கிறர்கள். இப்பயெல்லாம் இந்த இனிமையான காலத்தை நினைக்கும் போது மனமோ மகிழ்சியின் எல்லையை தாண்டுகிறது.... 
 
 

நன்றி!(பல்சுவைபதிவுகள்)

5 comments:

சுதர்ஷன் said...

//பத்து பதினொரு மணியளவில் பனி விழ ஆரம்பிக்க தொடங்குவதொடு நிலாவும் தனது வெளிச்சத்தையும் குளிர்மையும் வெளிவிட்டவாறு இருக்கும்// இந்த கட்டுரை இழப்புகளை தான் நினைவு படுத்துகிறது . வாசிக்க நன்றாக இருந்தது ரசனை .

Unknown said...

கலக்குறீங்க பாஸ்,உங்களோடு சேர்த்து எங்களையும் உங்கள் வயலுக்கு கூட்டிச்சென்றுவிட்டீர்கள்.

விஜயகுமார் ஐங்கரன் said...

@S.Sudharshanஎன்னுடைய பதிவின் நிலா பகுதியை ரசித்தமைக்கு நன்றி மட்டுமல்லாது மேலும் உங்களின் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

விஜயகுமார் ஐங்கரன் said...

@malgudiஎன்னுடைய பதிவை முழு மனதோடு ரசித்தமைக்கும் மற்றும் உங்களின் வருகைக்கும் நன்றிகள். நண்பேன்டா....

குதூகலக்குருவி said...

வயலுக்கு போய் வந்த அனுபவம். நன்று ..

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...