Monday, November 29, 2010

சற்றிங் செய்வர்களுக்கு சில tips கள்

இந்த சற்றிங் புதிய நட்புகளையும் உறவுகளையும் வளர்த்துக்கொள்ள உதவுகின்றது என்பதோடு இது Text chat,Voice chat,Video chat என்ற வடிவங்களிலும் காணப்படுகின்றது. நாம் சற்றிங் செய்யும் போது ஏற்படுகின்ற சலிப்பைக் குறைக்கவும் கருத்து பரிமாற்றத்தை கொடுத்து உணர்வூட்டத்தை அதிகரிக்க ஸ்மைலி உதவுகின்றது.இந்த Smiley நமது நகைச்சுவை மற்றும் கோபம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த உதவும். ஸ்மைலி 1982 ஆம் ஆண்டு ஸ்கொட் ஃகோட்மன்ட் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.





சற்றிங் செய்யும் போது நீங்கள் எப்படி சுகமாக இருக்கீறீர்களா? என்று ஆங்கிலத்தில் கேட்பதற்கு how are you? என்று ரைப் செய்ய வேண்டும். இதற்கு hru? ஏன ரைப் செய்தாலே போதும் பதில் 5n(Fine) என்று வரும் அதேபோல் where are you from? என ரைப் செய்ய தேவையில்லை frm போதும் Sl என்றும். Sl என்றால் என்னவென்று யோசிக்கிறீர்களா? அது நம்ம நாட்டின் பெயர் தான்.அத்தோடு உங்களுடன் சற்றிங் செய்யும் ஒருவரை நீங்கள் ஆணா? பெண்ணா? என்று கேட்க ma/fm என்று ரைப் செய்தீர்களானால் மறுமுனையிலுள்ளவர் புரிந்து கொண்டு fm என்றோ ma என்று பதில் தருவார். அதேபோல் உங்கள் வயது என்ன? என்று how old are you? என்று முழுமையாக ரைப் செய்ய வேண்டியதில்லை ur age என்றோ என்றோ ரைப் செய்யலாம்.


அரட்டை என்பதற்காக உங்கள் கைகளுக்கு ஏன் வருத்தத்தை கொடுக்க வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? சரிங்க நீங்க அப்படி எல்லாம் யோசிக்க தேவையில்லை அரட்டை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக்கூடிய முறையில் அடித்தாலே போதுமே?அதற்கு தான் மேலே சொன்ன மூன்றையும் ஒரேவர்த்தையில் ASL(Age/Sex/Location) கேட்டால் போதுமே. இதற்காக எடுத்த எடுப்பிலேயே கேட்டுவிடாதீர்கள். எல்லோரும் விரும்பமாட்டார்கள். மற்றவர்களுடைய சுகத்தை கேட்டு அறிந்தபின் படிப்படியாக கேட்பது நல்லது.அப்படி அவசரப்பட்டு கேட்டால் காரசாரபான பதில் சிலவேளை உங்களுக்கு காத்திருக்கலாம்.


இன்னொரு விடயம் சொல்கிறேன். சில ஆண்கள் பெண்களின் பெயர்களில் வந்து உங்களை ஏமாற்றலாம் அவர்களை நம்பி உங்களது அந்தரங்க விடயங்களை அவிழ்த்து வீடாதீர்கள்.அத்தோடு தினமும் ஒவ்வோரு பெயர்களில் சற்றிங் செய்வதை விட ஒரே பெயரில் சற்றிங் செய்வதால் உங்களுக்கு நல்ல நட்பு கிடைக்கலாம்.



பல ஆய்வுகளின்படி சற்றிங் செய்தால் தனிமனிதனுக்கு பாதிப்புக்கள் உண்டென அறியப்பட்டுள்ளது நெட்டிசன் எனப்படும் அளவுக்கு சற்றிங் அடிமையாகாது நீங்களே உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அத்தோடு தினமும் எத்தளை மணிநேரம் வாரத்துக்கோ,மாதத்துக்கோ எத்தளை மணிநேரம் என திட்டமிட்டு இயன்றவரை சற்றிங் செய்வதை குறைத்துக்கொள்ளுங்கள். சற்றிங் அடிமைகள் நிஜ உலக நட்பை வெறுப்பார்கள் என்ற கருத்தும் உள்ளது.

இன்டர் நெட் என்பது தகவல் கடல் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே ஆழம் அறிந்தே காலை விடுங்கள். இதற்காக இன்டர் நெட சற்றிங் தவறானவை என்ற முடிவுக்கு வந்துவீடாதீர்கள். எனவே எல்லாம் அளவோடு இருக்கட்டும்.

சற்றிங்கின் போது பயன்படும் சொற்கள்.

10Q– Thank you

AND-Any day now

ASL-Age, sex, location

BCNO-Be seeing you

BK-Because

CU-See you

CUL8R-See you later

CWYL-Chat with you later

GR8-Grate

HTH-Hope this helps

IRC-In real life

KISS-Keep it simple stupid

R-Are

THANX-Thanks

TIA-Thanks in advance

U-You

WB-Welcome back

மேலும்

கம்ப்பூட்டரை(Computer) எப்படி உடல் உபாதை இல்லாமல் இயக்குவது பற்றிய விளக்கப்படங்கள்.


1.கீபோர்டிலே(Keyboard) எப்படி தட்டச்சிடுவது என்ற படம்.





2.மானிட்டரை(Monitor) எப்படியான நிலையில் இருந்து பார்க்க வேண்டும் என்ற படம்.


2 comments:

Unknown said...

மிகவும் பயனுள்ள தகவல்.
சற்றிங்கின் போது பயன்படும் சொற்கள் மிகவும் உதவியாய் இருந்தது.m

விஜயகுமார் ஐங்கரன் said...

உங்களுடைய கருத்து என்னை மேலும் வளர்க்கும்

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...