Sunday, May 22, 2011

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன கருத்துமிக்க கதை.

மனித வாழ்கையை பலர் பேர் பல மாதிரியான தத்துவங்களை வாரி இறைத்தாலும் நமது அனுபவத்தில் சிம்பு வானம் படத்தில் சொல்வது போன்று என்ன வாழ்க்கடா இது என்பது சில சந்தர்ப்ப சூழ் நிலைகளில் இந்த வார்த்தையை நினைப்தை நமக்கு கூட தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏனெனில் என்னுடைய சொந்த வாழ்கையிலும் பல சந்தர்பங்களில் தோல்வியை சந்தித்த போதல்லாம் இந்த வார்த்தையை நினைத்தேன்.
இப்ப எதாவது பஞ்ச் சொல்லனும் போல தோன்றியது அதுதான் சும்மா! அவ் அவ்......
அதுமட்டுமல்ல நமது மானிட யாதார்த்த வாழ்கையில் பல சரிவு எற்படுவது சீரானது தான் ஆனாலும் இந்த சரிவுகளை நிமிர்த்திக் கொண்டு வாழ்வதுதான் மனித வாழ்கையும் கூட என்ன? மேலும் நமது வாழ்கையில் பிறரின் தலையீடு, விசனங்கள் என பல சாக்கடைகளை கடக்க வேண்டியும் கூட அமைகிறது. ஆனாலும் இந்த தலையீடு, விசனங்கள என்பவற்றை பற்றி சினம் அடையாமல் அதை உள்வாங்காமல் நமது வாழ்கை பயணத்தை தொடர்வது சரியான தெரிவு. சரி தானே நான் சொன்னது நீங்க என்ன நினைக்கிறீர்கள் இதைப்பற்றி? மேலும் படிங்க.
பிறரது சொல்பேச்சு கேளாமை பற்றி ஒரு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன கதையை உங்களுக்கு சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். யார் முதலில் மலை உச்சியைத் தொடுவது என்று தவளைகளுக்குள் ஒரு போட்டி. எல்லா தவளைகளும் ஓரே மாதிரியாகத் தான் கத்திக் கொண்டிருந்தன அது என்னவென்றால் முடியாது என்றுதான். இந்தக் கூச்சலுக்கு நடுவே ஓரே ஓரு தவளை மட்டும் மலை உச்சியை அடைந்ததுவிட்டது.(மிகவும் சுறுசுறுப்பான தவளை போல)
எப்படி இந்தத் தவளையால் மட்டும் சாதிக்க முடிந்தது? அது செவிட்டுத் தவளையாம். எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பேச்சுக்களை கேட்காதே என்று சூப்பர்ஸ்டார் கூறினாராம். எப்படியான கருத்துமிக்க கதை என்று பார்த்திர்களா! அதுமட்டுமல்ல எனக்கு கூட இந்த கதை உற்சாகம் ஊட்டியதாக அமைந்தது. பிறரது சொல்பேச்சு கேளாமையினால் எப்படியான பலன் கிடைக்கிறது பார்த்தீர்களா!
மேலும் நமது வாழ்கையில் தன்னம்பிகை விடாமுயற்சி கடின உழைப்பு என்பனவற்றால் நமக்கு வெற்றி சேரும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்பதோடு இந்த பாடலையும் பார்த்துவிட்டு ஏதாவது கருத்து சொல்ல விரும்பினால் சொல்லிட்டு போங்க சாமியோவ். 
 
 

நன்றி!(பல்சுவைப் பதிவுகள்...........

4 comments:

Unknown said...

ரஜினி பெயரைப் பாவித்த உடனையே எத்தனை ரசிகர்கள் வந்தார்கள் பார்த்தீங்களா?
Rajini is something special.

குதூகலக்குருவி said...

"வாழ்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா" பாடல் என்றென்றும் "Gas" போகாத சோடா போல... :சும்மா கேட்டாலே அதிருதில்ல?

விஜயகுமார் ஐங்கரன் said...

@malgudiசரியாக சொன்னீங்க!மற்றும் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பா!(நண்பேன்டா)

விஜயகுமார் ஐங்கரன் said...

@குதூகலக்குருவி
சரிதான்.மற்றும் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...