Monday, December 6, 2010

தமிழ் தத்துவங்கள் என்ன கொடுமை சேர்!

தமிழ் தத்துவங்கள் நிறைந்த இவைகள் மிகவும் கொடுமைதாங்கோ ஆகவே பொறுமையாக படியுங்கள்.

1. என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்குள்ள போட முடியாதுடோய்....


2. பொங்களுக்கு கவர்மெண்ட்டுல லீவு கொடுப்பாங்க ஆனால் இட்லி தோசைக்கு கொடுப்பாங்களா?.


3. லைப்ல ஒண்ணுமே இல்லைன்னா போர் அடிக்கும் தலையில ஒண்ணுமே இல்லேனா கிளார் அடிக்கும்....


4. ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம், ஆனால் பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?.


5. கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம், காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம், ஆனால் ஐயார் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?.

6. என்னதான் உன் தலை சுத்தினாலும் உன முதுகை பார்க்க முடியுமா?.


7. நாய்க்கு நாலு கால் இருக்கலாம். ஆனா அதால லேக்கல் கால், எஸ்.டி.டி கால் ,ஐ எஸ்.டி.டி கால் ஏன் மிஸ்ட் கால் கூட பண்ண முடியாது....


8. ஏழு பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட காசு இருந்தாலும், பாஸ்புட் கடைல நின்னுகிட்டு தான் சாப்பிட முடியும்....


9. தேள் கொட்டினா வலிக்கும், பாம்பு கொட்டினா வலிக்கும், முடி கொட்டினா வலிக்குமா?.


10. கோலமாவில் கோலம் போடலாம், கடலைமாவில் கோலம் போட முடியுமா?.

11. மீன் பிடிக்கிறவனை மீனவன் என்று சொல்லாம், நாய் பிடிக்கிறவனை நாயவன்னு சொல்ல முடியுமா?.


12. நம்ம திருவள்ளுவர் 1330 குறள் சொல்லி எழுதியிருந்தாலும் அவரால ஒரு குரலில்தான் பேச முடியுமே.

13. இங்கிலாந்து மாடுகள் அம்மா என்கிறது இங்குள்ள தமிழ் குழந்தைகள் மம்மி என்கிறதே!

14. சரளமாக ஆங்கிலம் பேசினார் தமிழ் டி.வி பார்த்த பின்தான்....

15. உனது கண்களைப் பார்த்தபின் தான் காதலிக்கவே தொடங்கினேன் அப்பொது தான் காதலுக்கு கண்கள் இல்லைதான் என்பது பொய் என்பதை அறிந்தேன்....



இப்படியும் தத்துவங்கள் உண்டா?
  • பொய் தப்பிக்க நினைக்கும் தற்காலிகம் உண்மை உறுதியின் உறைவிடம்...
  • முதுமை இறப்புக்கான இறுதியுரை பெண் ஆண்களின் கிரியா ஊக்கி....
  • கடவுள் ஆராட்சிக்குட்பட்ட அறிய பொருள் வறுமை வழி தெரியாதோரின் வாழ்விடம்....


    4 comments:

    உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

    அருமை

    Unknown said...

    என்ன கொடுமை சரவணன்,
    சும்மா பின்னிடீங்க போங்க.

    அடுத்த பட்டாசையும் வேகமாகக் கொழுத்தி விடுங்கப்பா.
    :-)

    விஜயகுமார் ஐங்கரன் said...

    @உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)
    நன்றி

    விஜயகுமார் ஐங்கரன் said...

    @malgudi
    நன்றி உங்களின் கருத்துக்கு(நண்பேன்டா...)

    இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

    நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...