Thursday, December 9, 2010

கவிதைத் துளிகள்......

நான் எனது முதல் பதிவில் எனது தந்தையின் கவிதையை பிரசுரித்தேன்.அதன் அடுத்த கட்டமாக மீண்டும் இந்த பதிவில் எனது தந்தையின் கவிதையை பிரசுரிக்கலாம் என நினைத்தேன். அத்தோடு எனது தந்தை அரசாங்க திணைக்களத்தில் கடமையாற்றுவர். இதனால் அரசாங்க திணைக்களத்தில் கடமையாற்றுவர்களுக்கான கவிதைப் போட்டியின் போது "அரச சேவை ஊழியர்கள்" எனும் தலைப்பில் எழுதிய கவிதையை நான் பிரசுரிக்கிறேன்.அத்தோடு இதற்கு முன்னரும் எனது தந்தை அரசாங்க திணைக்களத்தினால் நடைபெற்ற அரசாங்க திணைக்களத்தில் கடமையாற்றுவர்களுக்கான கவிதை போட்டியின் போது அகில இலங்கை ரீதியாக மூன்றாம் இடத்தை பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்.

"அரச சேவை ஊழியர்கள்"


அரசின் அங்கத்துவ பணியாளர்கள்......
அவர்களின் ஆக்கத் தொடர்பாளர்கள்
ஆட்சியின் அனுசரனைத் துனையாளர்கள்
அமுலாக்கப் பணிகளின் நெறியாளர்கள்
அபிவிருத்தி அத்தனைக்கும் முதலானவர்கள்
அவர்கள் கொள்கைகளின் வழியாளர்கள்
அத்தனை திட்டங்களின் படைப்பாளர்கள் -ஆம்!
அரசின் சேவைத் தொழிலாளர்கள் நாம்.


பல்துறை பல்சேவை ப
ற்ப்பல......
பரந்து பட்ட அர
சேவை நிலை பல......
உள் துறை வெளிக்களம் உட்பட
ஒன்றினைந்த ஊழியர்கள் தொழில் பல......
ஒன்றாக சேர்ந்து செய்யும் தொழில் பல
உயர்வான தகமை கொண்டோர் உளர் பலர்
நன்றான நிர்வாக வலையமைப்பு......
நாமல்லோ அர
சேவை தொழில் அமைப்பு.



அரச சேவை பெரு இயந்திரம் -அதன்
அமைப்பு நீண்ட சரித்திரம்
பற்
ப்பல சேவைத் தர ஊழியர்கள்
ற்ப்பல தராதர சேவகர்கள்
உச்ச நிலை உயர் அறிவு அதிகாரிகள்......
ஒன்றினைந்த சேவைத் தொழிலாளர்கள்
கனிஸ்ட நிலைத் தராதர ஙாட்பவியலார்கள் - யாவரும்
கடமையே நோக்குக் கொண்ட சேவையாளர்கள்!

மக்களுக்கு மக்களாய்......
மக்களாகவே கடமைசெய்யும்
மானிடத்திற்கான மனித சேவை......
மாதரும் சேர்ந்த அரச சேவை
மறுப்போ வெறுப்போ சினம் கொள்ளாமல்......
மனதார துரோகம் செய்யாமல்......
சிரிப்பாய் சேவை செய்யும் சிறந்த சேவை
சிறிலங்காவில் சிற் சில அரச சேவை!



கையூட்டலை நினைத்து கடமை செய்தலும்
கைகயாலாகச் செயல் செய்தலும்......
கடமை மறந்து நிலை நிற்றலும்......
கண்ணியமற்று தொழில் புரிதலும்
கருத்தைப் பரப்ப சேவை கொள்ளலும்
கறுப்பாய் முகத்தை தினம் வைத்தலும்
நலமாக...... நம் சேவைக்கு

நயமாகா...... இவ் அரச சேவைக்கு.

பல தரம் கண்டு......
பதவி நிலை அடைந்தவர்களும்
பற்றிய தரத்தில்......
பல நாள் உள்ளவர்களும்
பணி செய்யும் சேவையே - என
பல கால் நிற்பவர்களும்
பற்றுடன் பணிச் சேவை செய்வோர் பலர் - அரச சேவையில்
பாரமாக நிற்போரும் உளர்......


உண்மையுடன் உழைத்து
உயர்வற்று இருந்தவர்களும் உளர்
ஊதியம் நோ
க்குக் கொண்டு
உயர்ந்து சென்றோர் பலர்......
பன்மையாய் பழகி
பதவி நிலை அடையார் பலர்......
பதவியைப் பயன்படுத்தி
பயன்பட்ட அலுவலர் உளர்
பதவியில் இருக்கமட்டும் பளபளப்பு
பதவி ஒய்வு பெற்றால் பரிதவிப்பு
பாதி ஆயுள்தனை சேவையில் செலவழிப்பு......
பயன்பட்ட அரச சேவையில் இவர் சேவை ஒரு நிலை வைப்பு.

அரச சேவை ஆக்கமே தாபனக்கோவை
அலுவலர் தெரிந்துஅறிந்து செல்ல நிலையியல் கட்டளை
நிதி நிலை அறிவுக்கு நியதிச் சட்டம்
நிலைத்து தெரிந்து செல்ல திணைக்கள விதிகள்
பொதுவான கடமைக்கு குடியியல் சட்டம்
புரிந்து கடமை செய்ய அறிவுறுத்தல்கள்
பணிக்காக பலதரப்பட்ட...... வழி நெறிகள்
பரந்து பட்ட அரசேவையில் இவை வழிகள்.


சேவை மூப்புடையொர் சிறந்த நிர்வாகிகள்
சிறந்த சேவை செய்யும் சிறப்புமிக்க கடமையாளர்கள்
தாபனக் கோவை அறிந்து நிற்கும் தரமிக்க அறிவாளிகள்
தயவின்றி தாரைய் நிற்கும் தரம் பெற்ற நெறியாளர்கள்
ஆயுள் காலம் அரை வாசிக்கு மேல்......
அதனில் நின்ற சேவையாளர்கள்
அரச சேவையே தன் சேவையாய்க் கொண்ட
அறிவுமிக்க அனுபவசாலிகள்.

வாழ வைத்த தொழில் - எம்மை
வளமாக்கிய தொழில்......
வளர்த்து விட்ட தொழில்......
வாழ்விற்கு வனப்பைத் தந்த தொழில்
ஒடி உழைக்க வைத்து உயர்வைத்தானாய் தந்து
நாடி பலர் நம்மை நலம்
விசாரிக்கச் செய்த......
தேடி புகழ் சேர்த்த தொழில் தேகத்திற்கு
அமைதி தந்த தொழில்
நாடு நலம் பெற...... நம் சேவை
பலம் பெற
டி உயர வைப்போம் - உண்மை உழைப்பால்
தேடி நிலையாய் வைப்போம்.


மேலும் மீண்டும் ஒரு கவிதைத் துளிகளில் சந்திப்போம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு(Vote) போடுங்கோ நண்பர்களே......


நன்றி!




6 comments:

Chitra said...

கவிதைகளும் கார்ட்டூன் படங்களும் - நாட்டு நடப்பின் வெளிப்பாடு.
நல்லா எழுதி இருக்கீங்க.

Chitra said...

Welcome to the Blogworld!

Best wishes!

(Following)

விஜயகுமார் ஐங்கரன் said...

@Chitraஉங்களின் ஆதரவு என்னை மென்மேலும் வளர்க்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமில்லை.

விஜயகுமார் ஐங்கரன் said...

@ChitraThanks

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

உங்க கடமையுணர்ச்சி கண்ணைக்கட்டுது.
;-)

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...