Sunday, February 13, 2011

மனித நேயம்! - ll

மனித நேயம் என்ற கவிதையின் தொடர்ச்சி.....



இறையும் வணக்க வேண்டியதில்லை
இக வழிக்குப் பணிய வேண்டியதில்லை
முறையை பயில வேண்டியதில்லை
மற்றைய சாஸ்திரங்களும் அறிய வேண்டியதில்லை
வரையாய் மனித நேயத்துடன் வாழ்வது சாலசிறப்பு
நிறைவே நிகர்த்தும் இவன் நிறைவான – மனித நேயத்தான்.



மகான்கள் வகுத்த நெறியும் மதம் காணும் உரையும் - வழியும்
தகாதவை இவையென்று தடுக்கும் அறநெறியும்
மிகையான வாழ்நெறிக்கு விளக்கானது - இவை
காட்டும் ஒளித் தெளிவில் ஒத்து நிற்பான் - மனித நேயத்தான்.



மனித நேய மாண்பானது மகத்துவமானது
மறைகள் சொல்லும் நெறி வழியில் உயர்வானது
கறைகள் இல்லா வாழ்வில் நிற்க கயமையற்று
நேரில் செல்ல.....
மனித நேய அன்பு - இது மண்ணுக்கு வேண்டியதெம்பு
வரைகள் இல்லை இவ் வளர்விற்கு – வாழும்
வாழ்விற்கு மனித நேயம்.



வையத்துள் வாழ்வாங்கு வாழ வகுத்த நெறி வழி ஆள
தொகுத்த முறைமை காண.....
துன்பம் விட்டகன்று தேற.....
அடுத்துப்பற்ற வேண்டியது அன்பு – அது
அற வழி காட்டி நிற்கும் நேயம்
விடுத்து வீணர் தம் மோசம் - வேண்டுவது
மனித நிலைப்பாசம்.



ஆறறிவு படைத்த மனிதன் அன்பகற்றி வாழ்வதேன்?
அடுத்தடுத்து விலங்கதனாய் அல்லல் தான் செய்வதேன்?
அறவழி சொல்லும் நேயத்தை அறவே மறுப்பதேன்?
ஆகமட்டும் ஆணவத்தால் அழிய முயல்வதேன்?
அது, அவன் ஆக்கத்திற்கு ஆகாது
அழிவிற்கே வித்தாகும்.



மனித மாண்பை வளர்த்து மகத்துவத்தை அதனில் சேர்த்து
புனித நேயனாய் பொலி வடைவாய்!
பொறாமை விட்டகன்று தெளிவடைவாய்!
நிறைமை இது நியாயமும் அது!
பெருமையதில் காண இப் பெரு நிலத்து வழக்காக
அருமை அவ்வழியில் அன்புவழி நேயனாவீர்!

வணக்கம்!


முன்னர் குறிப்பிட்ட படி எனது தந்தைக்கு இந்த கவிதைப் போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றத்காக மனிதவள அபிவிருத்தி,கல்வி,மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் பரிசு வழங்கிய போது எடுக்கப்பட்ட படம்(Photo).





4 comments:

Unknown said...

உங்கள் தந்தைக்கு வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி.

அன்புடன் நான் said...

நல்ல கவிதை.... பாராட்டுக்கள்.

விஜயகுமார் ஐங்கரன் said...

@malgudi
நன்றி நண்பா. உங்களின் ஆதரவு என்னை மேன்மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

விஜயகுமார் ஐங்கரன் said...

@சி.கருணாகரசு உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி!

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...