Sunday, July 1, 2012

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர் வழக்கம். அந்த வகையில் நம்ம இளைஞர்களுக்கு 25,26 வயது வந்தவுடன் கல்யாண ஆசை வந்துவிடும். இது ஒன்றும் புது விடயம் இல்லாவிடினும் இயற்கையும் அதுதானே. இதை இப்படியும் ஒருவர் சந்திக்கிறார். அதற்காக இப்படியும் ஒரு உதாரணம் சொல்லாலமா?

கல்யாணம்
இம்ரான்: எண்ட நண்பன் ஹாசனுக்கு வரும் சனிக்கிழமை கல்யாணம் உம்மா. நீயும் இருக்கிறாயே எண்ட கல்யாணம் பத்தி யோசித்தாயா?

உம்மா: ஆமாம் இது ஒன்றுதான் குறைச்சல் நீ கெட்ட கேட்டுக்கு  அவன் ஹாசன் அவண்ட வாப்பாவின்ட தொழிலை பார்க்கிறான் நீயும் இருக்கிறாயே!


(இப்படியாக இம்ரானின் வாப்பா மதியம் கடையிருந்து பள்ளிக்குச் சென்ற்று விட்டு வீட்டுக்கு வந்தவுடன் இம்ரானின் உம்மா அவருக்கு மதிய உணவை பரிமாறிக்கொண்டே.....)


இம்ரானின் உம்மா: உங்க மகன் இம்ரான்,அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்குமாறு என்னை தொந்தரவு பாடுத்துகிறான்.

                                     
இம்ரானின் வாப்பா: அப்படியா? நான் பார்கிறேன்.

இப்படியாக  இம்ரானின் வாப்பா மதியம் சாப்பிட்டு வெளியில் வரும் வேளை.

இம்ரானின் வாப்பா: இம்ரான் இங்க வா. நான் காலை பார்த்தேன் நம்ம கிணற்றடியில் இருக்கிற பப்பாசி மரத்தில பழம் ஒன்று  பழுத்திருந்தது. அதை உடனே பறித்துக்  கொண்டு வா!

இம்ரான்: பழத்தை பறித்து வாப்பாவின் அருகே வருகிறான்.

இம்ரானின் வாப்பா: மகன் இம்ரான் இந்த பழத்தின் இருக்கும் கொட்டையை
ஒருக்கா எண்ணிச் சொல்லுடா? பார்ப்போம்.

இம்ரான்: இது என்ன வாப்பா 200,300 கொட்டைகள் இருக்கும். இதை எப்படி எண்ணுவது?

இம்ரானின் வாப்பா: இம்ரான் இதில் 200,300 கொட்டைகள் இருக்கும் என்று எடுப்போம். சரி இங்க பாருங்க இம்ரான் இந்த பப்பாசிப் பழமே 200,300 கொட்டைகளைவைத்துக்கொண்டு சும்மா இருக்கிறது. ஆனால்  நீங்கலோ டேஸ் டேஸ் வைத்துக் கொண்டு  என்ன பாடு பாடுகிறீர்கள்.  உங்க  ப்ரெண்ட் ஹாசன் சொந்தமாக தொழில்  செய்கின்றான். நீங்க இன்னும் வெட்டி ஆபிசறாகத்தானே இருக்கீங்க?  முதலில் சொந்தமாக ஒரு தொழில் பண்ணுங்க,வாப்பா பணம் தருகிறேன். அதன் பிறகு   கல்யாணத்தைப் பற்றி யோசிக்கலாம்.

(விளையாட்டா உம்மாகிட்ட சொன்னது, ஒரு தொழில் பண்ண வாய்ப்பை ஏற்படுத்தியதை நினைத்து மகிழ்ச்சியில் திளைக்கத்தொடங்கினான் இம்ரான்.)


    


















Tuesday, April 17, 2012

சந்தோசம் + தானம்(நகைச்சுவை) = சந்தானாமா?

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்திலிருந்து எனக்கு பிடித்த சில நகைச்சுவையான வசனங்களை பகிர்ந்துருக்கிறேன்.


எப்பிடி
 1.நான் முதன் முதலா எட்டாவது படிச்சப்ப ஒரு பொண்ணை டாவட்ச்சேன்.ஃ அதுதான் ஒரிஜினல் லவ் இதெல்லாம் சும்மா பிராஜட் மாதிரிடா மச்சான். 


2.கேக்கிறவன் கேனையனா.. கேரம்போர்ட கண்டு பிடிச்சது கே.எஸ்.ரவிக்குமாரு சொல்வியா?


3.ஏன் இந்த காவி டிரஸ்?
காதல்ல தோத்தவன் காவி டிரஸ் போடாமஇ பின்ன நேவி டிரஸ்ஸா போடுவான்?
 


4.டேய் ஆணவத்தில ஆடாதடா. ராணுவத்தில அழிஞ்சவங்கள விட ஆணவத்தில அழிஞ்சவங்கத்தான் அதிகம்.


5.FACT..FACT..FACT.. இந்தப் பொண்ணுங்க ஒருநாளைக்கு பத்து பேருக்கு ஓகே சொன்னா.. பத்தாயிரம் பேரை கழட்டி விடுறாங்க.



தீர்க்க சுமங்களன் பவ!


6.நீ கரக்ட் பண்ற பொண்ண விட உன்ன கரக்ட் பண்ணுற பொண்ணுதான் ஒர்க் அவுட் ஆகும் . 


7.டேய்... சினேகாடா... புன்னகை அரசிடா...!
நான் என்ன... புழுங்கல் அரிசின்னா சொன்னேன்.
 


8.பொண்ணுங்களோட ரத்தமும் சிவப்பு.பையன்களோட ரத்தமும் சிவப்பு.அப்பறம் ஏன் பொண்ணுங்களோட எண்ணம் மட்டும் கருப்பா இருக்கு.?
 

9.டேய்... நான் மொடாக் குடிகாரனுவ கூட சேர்ந்துக் குடிப்பேன். ஆனா மோந்துப் பாக்குறவன் கூடெல்லாம் குடிக்க மாட்டேன்.


10.ஏரி உடைஞ்சா மீனு ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்.


11. தண்ணியடிக்கிற பழக்கம் என்பது தலையில வர்ற வெள்ள முடி மாதிரி.. ஒன்னு வந்துட்டா போதும். ஜாஸ்தியா ஆகுமேத் தவிர கம்மி ஆகவே ஆகாது.


12.அயன் பன்றவங்க அழக் கூடாது.


என்ன தத்துவம் Super....சந்தானம் சந்தோசம் தான்....

Thursday, December 29, 2011

உலகின் சாராம்சம் மாயையா?


ஏழைக்கு இந்த கொடிய வறுமை ஏன்

பூ வைத்தும் ஜெபம் செய்தும் வழிபடும் மனிதனுக்கு துன்பம் வருவதுதான்ஏன்


பிறக்கும் போதும் இறக்கும் போதும் மனிதன் அழுவதுதான் ஏன்

செங்கல்லை செய்பவனுக்குசெங்கல்லிலான வீடு இல்லை ஏன்

மரக்கட்டிகளை கொண்டு கட்டில் செய்யும் காப்பேன்டருக்கு(தச்சனுக்கு)
சொந்தமான கட்டில் இல்லை ஏன்

மாளிகைகளை கட்டும் மேசனுக்கு இருக்க செங்கல்லிலான வீடு இல்லை ஏன் 


கடலில் செத்து பிழைக்கும் மீனவனுக்கு ஒழுங்காக சாப்பிட மீன் இல்லை ஏன்

வஸ்சில்(பேரூந்தில்) ஏறியவுடன் முன்னால் போ என்று சிம்போலிக்காக கூறும் கன்டொக்டருக்கு(நடத்துனருக்கு) வாழ்கையோ உயரவில்லையே ஏன்

கிரிக்கெட்டை அறிமுகம் செய்த இங்கிலாந்து அணிக்கும் பதினொரு வீரர்களும் சகலதுறை ஆட்டக்கரர்களை கொண்ட தென்னாபிரிக்காவும் உலக
கிண்ணத்தை இதுவரை கைப்பற்றாது ஏன்

இலஞ்சமே கூடாது என்ற மனிதன் கடவுளுக்கே நேர்த்திக்கடன் எனும் பெயரில் இலஞ்சம்  கொடுப்பது ஏன் 

ஒரே நேரத்தில் உலகில் இரவும்பகலும் ஏன்    


அமைதியை விரும்பும் மனிதனுக்கு கொலை  ஆயுதம்  வன்முறை ஏன்


அன்பு கொண்ட மனிதனுக்கு பொறாமையும் பழிவாங்கலும் ஏன்




வீரத்தழிழ்ழனாம்  நம் தழிழனுக்கு உரிமைகள் விடுதலை கிடைக்கவில்லையே ஏன்.....




  
இன்னும் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.....

இந்த வினாக்களுக்கு விடை தேடும் போது இந்த உலகமே பொய் என தோன்றுகின்றது அல்லவா?.வாசர்களே உங்களின் கருத்துக்களையும்(பஞ்ச்) தாராளமாக கூறலாம்.



நன்றி!(பல்சுவைப்பதிவுடன்)

Sunday, December 18, 2011

வெடி மாஸ்டர் வட் நோ கன்-1(But No Gun)


நீங்கள்  tea மாஸ்டர் gem ஜிம் மாஸ்டர்  pt மாஸ்டர் என்றால்லாம் அறிந்திருப்பீர்கள். ஆனால் இது  என்ன வெடி மாஸ்டர் அதுவும் நோ கன்  இப்படியும் தலைப்பு என்ற யோசிக்கின்றீர்கள். ஆம் வாசர்களே நான் நீண்ட நாளைக்கு பிறகு ஒரு பதிவை எழுதலாம் என்று நினைத்த போது என் மனதில் இந்த வெடி மாஸ்டர் தான் என் நினைவில் வந்ததர்.அதுவும் ஒரு பதிவை எழுதுவதற்கே இப்ப நேரம் கூட கிடைப்பது அரிதாக இருக்கிறது. ஏன் என்றால் இப்பொழுது நேரம் எல்லாம் வேலையிலே செல்கிறது. சரி இப்ப வெடியை பற்றி நாம் பார்ப்போம். அதுவும் இந்த கதை நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் நடந்த கதையாகும்;(Flashback).

வெடி முத்து

இப்படியாக பள்ளியில் பாடங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் ஐந்தாம் பாடம் முடிந்து ஆறாம் பாடம் தொடங்க மணி அடித்தது. இந்த வேளையில் மாணவர்களின் முகத்தில் ஒரே சிரிப்பு. அது வேற ஒன்றுமில்லை வெடியின் வருகையை எண்ணிப் பார்த்து. இப்படியாக வெடி பாடத்துக்கு நடந்து வருவது எங்களுக்கு தெரிந்தது. (அதுவும் வெடி வருவது சினிமாவில் ஹீரோக்கள் வரும் போது வேக்ரவுன்ட் மியுசிக்குடன்;;,(Background Music) வருவது போல இவரும் அப்படி வருவதை  இப்பொழுதும் நினைக்கையில் சிரிப்புதான் வருகிறது.சில வகுப்பு மாணவர்கள் இவரின் வெடியை அறிந்து இவர் பாடங்களுக்கு வகுப்புக்கு செல்லும் போது மாணவர்கள் மறைந்து நின்று இவரை ''வெடி வெடி''என்று கத்துவதையும் இவர் திரும்பி யாருடா? இது என்று மிரட்டுவதையும் நான் கண்டிருக்கிறேன்.)

இப்படியான வெடி  வகுப்பில் வந்தார். அதுவும் இவர் எடுக்கும் பாடங்கள் சமூகக்கல்வியும் வரலாறும். நாங்கள் இவர் வரும் போது முதலில் எழுந்து நின்று வாழ்தினோம். அதுவும் சில மாணவர்கள் வாழ்த்தும் போது கூட good morning  குட் மொனிங் வெடி என்று மெல்லிய கூரலில் சொல்வார்கள். வகுப்புக்குள் வந்த பின் தனது வரலாறுப் பாடத்தை தொடங்கினார். இப்படியாக படிப்பித்துக் கொண்டிக்கும் வேளையில் திடிரென பாடத்தை நிறுத்தி விட்டு உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமாடா? என்று கேட்கும் போதே  எங்களுக்கு தெரிந்து விட்டது வெடியன் தனது வெடிகளை வீசப்போறான் என்று. டேய் நம்ம கல்லடி பாலமாடா கெஞ்ச நாளைக்கு முன்னாடி அது விழும் நிலையில் ஆடியதுடா! (இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி பிரதேசத்தில் அமைந்த மிகவும் பழைய மற்றும் பிரித்தானிய காலனித்துவ காலத்தில் அமைத்த உறுதியான பாலமாகும் மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் பெரிய பாலமாகவும் காணப்பட்டது.)

கல்லடிப்பாலம்

இப்படி பாலம் ஆடிக்கொணடிருந்த வேளையில் மக்கள் பீதியில் இருந்தனர் என்றும் அந்த வேளையில் நானும் என்ட அப்பாவும் கையில் ஒரு ஜக்குடன் பாலம் இருக்கிற ஆற்றில் இறங்கி பார்த்தால் பாலத்தின் கீழே இருக்கிற  நட்டுகள் எல்லாம் லுஸ் ஆகி இருந்தாடா. அதன் பின் உடனே நானும் அப்பாவும் கையில் இருந்த ஜக்கை கொண்டு பாலத்துக்கு கீழே ஜக்கை அடித்து உயர்த்தியடா லுஸ்யாக இருந்த நட்டுகளை எல்லாம் இறுக்கினோம்.  பின்னர் ஆற்றில் இருந்து வெளியில் வந்தால் மக்கள் கூட்டமே எங்களை  நோக்கி வெடிகளை கொழுத்தினார்களடா!(வெடியே உனக்கே வெடியா என்ன கொடுமை சார் இது), பூமாலை எல்லாம் போட்டும்  எங்களை வரவேற்றனர் என்றார். இதை எல்லாம் கேட்ட மாணவர்கள் சிரிப்பை அடக்க முடியமாலும் ஏதோ தங்களுக்குள்; இவறாடா பாலத்துக்கு ஜக் அடிப்பது என்ன வெடியடா என்று முணுமுணுத்துக்கொண்டிருந்தனர், (அதுவும் நான் அறிந்த வகையில் இந்த பாலத்தின் கீழ் பகுதியோ கொங்கிறீட்டினால் அமைக்கப்பட்ட பாலமாகும் இது  ஆடுவதற்கோ நட்டு லுஸ் ஆவதற்கோ வாய்பே இல்லை)


இப்படியாக வெடியின் வெடிகள் முடிய பாடம் முடிந்தாக விட்டதாக மணியும் அடித்தது.அதன்  பின் வெடியும் வகுப்பை விட்டு சென்றார் நாங்களும் இவர் செல்லும் போது கூட மெதுவாக thank you வெடி என்று வழியும் அனுப்பினோம். அதன் பின்னர் மாணவர்கள் இவரின் தொல்லை எண்ணி தாங்க முடியலடா சாமி என்றும் இவர் எப்பொழுது இவர் பரீட்சைக்கு பாடத்தை முடிப்பார் என்று சோகத்துடன் புழம்பியதையும் இப்பொழுதும் நினைக்கையில் சிரிப்பும் மறுபுறம் வெடியின் அகோர தாண்டவத்தை எண்ணி கோபமும் ஏற்படுகின்றது.


  


வெடியின் கோர வெடிகள் தொடரும்......



Thursday, August 4, 2011

தூக்காணங் குருவி சொல்ல மறந்த கதை (அது ஒரு காலம் அழகியதொரு காலம்....)

என்னடா இது தூக்கானம் குருவி சொல்ல மறந்த கதையா? அப்படி என்ன தான் சொல்ல மறந்த கதை என்று தானே யோசிக்கிறீர்கள். அப்படி ஒன்றும் பெரியதான கதையல்ல. நீண்ட நாளாக பதிவு எழுதவில்லை என்று யோசிக்கும் போது நீண்ட நாளாக எழுதவேண்டும் என்று நினைத்த போது மனதில் கரை படிந்த நிலையில் கதை ஒன்று ஞாபகம் வந்தது. நண்பர்களே! அதுவும் தலைப்பிலே பாருங்கள் அது ஒரு காலம் அழகியதொரு காலம் இன்னும் கதைப்பற்றி விளங்கவில்லையா? இப்பயெல்லாம் நமது வாழ்கை ஆற்று நீர் போல நமது வாழ்கை ஓடுகிறது. இதில் மகிழ்ச்சியோ ரசிப்போ என்று பெரிதாக இல்லாவிடினும் ஏதோ பரவாயில்லை(Not Bad) என்று தான் சொல்ல முடிகிறது. அதுவும் எனக்கு அது ஒரு காலம் அழகியதொரு காலம் முதலில் ஞாபகம் வருவது நான் சின்ன வயதாக இருக்கும் போது வயலுக்கு செல்வது தான். மேலும் நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு சின்ன வயதாக இருக்கும் போது வயலுக்கு அப்பா கூட்டி செல்வார். அதுவும் நாங்கள் அப்பொழுதெல்லாம் வசதி வாய்ப்பு பெரிதாக இல்லை, அதனால் அப்பா என்னை சைக்கிளில் தான் கூட்டி செல்வார். அப்படி வயலுக்கு செல்லும் போது என்னை கூட்டி செல்வாரா,இல்லை? என்று மனதுக்குள் ஏங்குவேன்.அதுவும் அப்பாவிடவும் கேட்கவும் பயம் வேற. அப்படி அப்பா அழைத்தால் ஆகா என்ன சந்தோசம். 


இப்படி நான் சைக்கிளில் செல்லும் போது இயற்கை ரசித்தவாறு செல்வேன். அதுவும் அப்பா தானே சைக்கிள் ஒடுவது அதனால் எனக்கு வலி தெரியாது. அதிலும் என்னவென்றால் நாங்கள் வதியும் இடத்திலிருந்து வயலோ பல மைல் தூரம் அது வேற. இப்படி வயலுக்கு சென்ற பின் இறங்கினால் நமது கால் ஒன்று இல்லாது போல் இருக்கும் ஏன் என்றால் காலே விறைத்து போய் இருக்கும் அப்படி பல மைல் பிரயாணம். அதுவும் வயலில் உரம் எறியும், காலம் சூடு அடிப்பு(அறுவடைக் காலம்) என காலங்கள் வந்து போகும். உரம் எறியும் காலம் வந்தால் குளத்திலிருந்து அதிக நீர் வரும் காலம் ஆகையால் வயலில் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அத்தோடு வயலின் வரம்புகளில் பொன்னாங்கானி கீரை அதிகமாக வளர்ந்து காணப்படும். இப்படியாக இருக்கையில் நாங்கள் வயலுக்கு சென்றால் வயல் காவலன் அருகில் நீர் குட்டையில் சென்று விறால் மீன்களை பிடித்து குழம்பு வைத்தும் பொன்னாங்கானி கீரை சொதி வைப்பான். அடடா! அப்படி ஒரு சுவையான விருந்தாக இருக்கும். இப்படியாக சூடு அடிப்பு காலமும் வந்து விடும் இந்த காலத்தில் விவசாயிகளின் முகத்தில் ஒரு வித சந்தோசம் இருக்கும். ஏன் என்றால் அறுவடை வருகிறது அல்லவா! இந்த காலத்தில் வயல்களில் எல்லா புறங்களிலும் சூடுகளாக காணப்படும். இது பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மேலும் இக் காலத்தில் தூக்காணங் குருவி கூடுகளும் மரங்களில் அதிகமாக இருக்கும். ஆக நாங்களும் சூடு அடிப்பு காலத்தில் மாலை நேரத்தில் தான் வயலுக்கு செல்வோம். அதுவும் மாலை நேர சூரியனும் மறையும், நேரம் இப்படி நிலையில் இயற்கையோ பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இந்த நிலையில் சூரியன் மறையும் போது வயல்களில் சூடு அடிப்பை தொடங்குவார்கள்.இப்படியாக இரவு விடியலை நோக்கி சென்றுகொண்டிருக்கும். அத்தோடு நாலா புறமும் வயல்களில் சூடு அடிப்பு நடைபெறுவதோடு, சூடுகளை சுற்றி ரெக்டர் சுற்றும் போது சத்தமும் கூடி குறைந்தவாறு இருக்கும். இந்த நிலையில் அயல் வயல்களில் உள்ள விவசாயிகள் தமது நாட்டுபுற பாடல்களை தாளத்துடன் பாடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இது போதாதுதென்று தூக்காணங் குருவிகளும் இரவு நேரத்தில் தமது கூடுகளில் வெளிச்சத்துக்காக மின்மினி பூச்சியை வைத்துக்கொள்ளும்,அத்தோடு ஆக்காண்டியும் கத்திவாறு இருக்கும். இப்படி இருக்கையில் எல்லா சூடு அடிப்பு இடங்களிலும் பெற்றோல்மேக்ஸ் வைத்து சூடுக் களத்தையே ஒளிமயமாக்குவர்கள். இதை எல்லாம் பார்ககும் போது மனமோ ஆனந்தத்தின் உச்சிக்கே சென்று விடும்.


இப்படியாக பத்து பதினொரு மணியளவில் பனி விழ ஆரம்பிக்க தொடங்குவதொடு நிலாவும் தனது வெளிச்சத்தையும் குளிர்மையும் வெளிவிட்டவாறு இருக்கும். இதையெல்லாம் பார்க்கும் போது தமது மனமோ குழப்பம் இல்லாமல் மிகவும் அமைதியாக இருக்கும். இப்படியாக இதை எல்லாம் வாடியில்(தங்கும் இடம்) வெளியில் ரசித்தவாறு அப்படியே உறங்குவேன். இதன் பின்னர் காலையில் எழுந்த பின்னர் சூடு அடிப்பு இடத்துக்கு சென்றால் அங்கே சூடு அடிப்பு முடிந்து நெல்லை தூற்றிக்கொண்டிருப்பார்கள். இப்படி இருக்கையில் அப்பம் வற்கும் சிறுவர்கள் அப்பம் அப்பம் கத்தியவாறு சூடு அடிக்கும் இடத்துக்கு வருவார்கள். பிறகு என்ன நாங்கள் சுடச்சுட அப்பம் சாப்பிடுவோம். பின்னர் ஒருவாறு சூடு அடிப்பு முடியும். அதன் பின்னர் வீடு வந்து விடுவேன். மேலும் வீடு வந்த பின்னரும் எப்ப அப்பா திரும்ப கூட்டி போவார் என்று தான் யோசிப்போன். இப்படி உண்மையில் அது ஒரு காலம் அழகியதொரு காலம் தான். இப்ப வயலுக்கு செல்வதற்கு பெரிதாக விருப்பமும் குறைவு அதுமட்டுமல்லாது தற்பொழுது எல்லாம் சூடு அடிப்பு இல்லை. இப்பொழுது அறுவடைக்கு அறுவடை(வெட்டு மெசின்) இயந்திரம் பாவிக்கிறர்கள். இப்பயெல்லாம் இந்த இனிமையான காலத்தை நினைக்கும் போது மனமோ மகிழ்சியின் எல்லையை தாண்டுகிறது.... 
 
 

நன்றி!(பல்சுவைபதிவுகள்)

Friday, June 24, 2011

நிம்மதி எங்கே என்று தேடிப்பார்த்தேன் அது எங்கேயும் இல்லை....

முந்தைய மாதிரி லைப்பில இப்ப நிம்மதி என்ற சொல்லுக்கே இடமில்ல. எத தொட்டாலும் பிரச்சனை தலை பிய்க்கிறது. ஏன் வீடு, வேலை செய்யும் இடத்தில் கூட இப்படி நிம்மதியை தேட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுக்கிறோம் என்றால் அது பொய்யல்ல. இப்படியான நிலையில் இருக்கையில் எனது நண்பர் ஒருவர் பேஸ்புக்கில்(Facebook) நிம்மதியை பற்றிய கதையை பிரசுரித்த போது இது எனக்கு பிடித்திருந்தது. ஆகையால் இந்த கதையை உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன் வாசர்களே!


நிம்மதி இழப்பது எதனால்? Good Question(இது நல்ல கேள்வி)
ஒரு துறவி இருந்தார்.அவரிடம் பணக்காரர் ஒருவர் வந்தார்.சுவாமி என்னிடம் நிறைய செல்வமிருந்தும் நிம்மதி இல்லை. என்ன காரணம் என்பது புரியவில்லை?என்று கேட்டார். அதற்கு துறவி பதில் சொல்லவில்லை.
அங்கே விளையாடிகொண்டிருந்த குழந்தை ஒன்றை அருகே அழைத்தார்.அதன் கையில் ஒரு மாம்பழத்தை கொடுத்தார். குழந்தை அதை தன்னுடைய ஒரு கையால் வாங்கிக்கொண்டது. அடுத்து ஒரு பழத்தை கொடுத்தார். அதையும் இன்னொரு கையால் வாங்கிக்கொண்டது. மீண்டும் ஒரு பழத்தை கொடுத்தார். தன்னுடைய ஒருகையால் இருபழங்களையும் மார்போடு அணைத்துக்கொண்டு மூன்றாவது பழத்தையும் பெற முயற்சித்தது. ஆனால் ஒரு பழம் நழுவி கிழே விழுந்தது. அதைக்கண்டு அந்த குழந்தை அழுதது .இதை கவனித்துக் கொண்டிருந்த அந்த பணக்காரரிடம் அந்த துறவி 'இந்த குழந்தையை பார்த்தாயா? இரண்டு பழம் போதும் என்று நினைத்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?' அதே போன்றுதான் 'போதும்' என்ற திருப்தி ஏற்பட்டுவிட்டால் பிரச்சனை வாரது. நிம்மதி கிடைக்கும். பணக்காரருக்கு தனக்கு ஏன் நிம்மதி இல்லை என்ற விவரம் புரிந்துவிட்டது.




உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு!!!!! இந்த வரியைக் கேட்கும் போது மனம் நெகிழ்கின்றது....
 
நன்றி!(பல்சுவைப்பதிவுகள்)

Tuesday, June 21, 2011

அன்பின் அகம்



அன்பின் அகம் நிறைந்து....
ஆக்கம் அதில் தெளிந்து....
உண்மை உணர்வடைந்து....
உயர்வில் தெளிவடைய.....
நன்மை வேண்டும் இறையே....
நின்னை நாடும் பணியும் இதுவே.



தெளிவாக அடையட்டும் ஆண்டு
தேடும் பொருள் நிலை வேண்டும்
நாடும் நிதைதருள் வேண்டும்
நல்லவையே நடைபெற வேண்டும்....



ஏறி இருந்து செலுத்த நினைத்தாய் இயக்கம் இல்லை
அதன் இயந்திரத்தில் தானும் எப் பழுதுமில்லை
மாறி வந்து தற்றத்தள்ள....
அதன் மறுதலிப்பும் மாறிச் செல்ல....
மீறி வரும் இயக்கம் கண்டு
மீண்டும் ஏற நின்றால்
ஆறிப் போகும் - வுல்
இயந்திரத்தின் அர்த்தம்தான் என்ன?.

நன்றி!

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...